எமது சவூதி ஊழியர்களே பெருமளவு செலாவணியை பெற்றுத் தருகிறார்கள் | தினகரன் வாரமஞ்சரி

எமது சவூதி ஊழியர்களே பெருமளவு செலாவணியை பெற்றுத் தருகிறார்கள்

சவூதி அரேபியாவிற்கான புதிய தூதுவர் பக்கீர் மொஹமட் அம்ஸா துருக்கிஇபெல்ஜியம் ஆகிய நாடுகளின் தூதுவராகவும் ஐரோப்பிய சங்கத்தின் (European UN)  தூதுக்குழுத் தலைவராகவும் முன்பு பணியாற்றினார்.மேலும் இவர் பேர்லின் உள்ள இலங்கையின் வெளிநாட்டுத் தூதரகத்தில் பணிக்குழுவின் துணைத் தலைவராகவும் பணியாற்றியதோடு தற்காலிக லண்டன் உயர் ஆணையாளராகவும் கடமையாற்றியுள்ளார். 25வருடங்களுக்கு மேலாக ராஜதந்திர துறையில் அனுபவம் மிக்க இவர் சிரேஷ்ட அதிகாரிகளில் ஒருவராகும் 

இவர் கடந்த வெள்ளிக்கிழமை சவூதி அரேபியாவிற்கு புதிய தூதுவராக பெறுப்பேற்பதற்காக பயணமானார்.  

அவருக்கு அண்மையில் கொழும்பில் விருந்துபசாரமொன்று அளிக்கப்பட்டது. இதில் வெளிநாட்டு தூதூவர்கள் முஸ்லிம் அமைப்பு பிரதிநிதிகள் சமூக தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள். 

இந்த விருந்துபசார நிகழ்வின் பின்னர் வழங்கிய நேர்காணலின் ஹஜ் யாத்திரைக்கான கோட்டாஇ சவூதி அரேபியாவில் வாழும் இலங்கையர்களுக்கான நலன்புரி திட்டங்கள் இ இலங்கைக்கான சவூதி அரேபிய உதவிகளை அதிகரித்தல் உட்பட பல்வேறு திட்டங்கள் குறித்து அவர் தனது நேர்காணலில் தெளிவு படுத்தினார். 

அமைச்சராகவோ அரசாங்க தலைவராகவோ அல்லது வெளிநாட்டு அமைச்சராகவோ நீண்ட காலமாக சவூதி அரேபியாவிற்கு எவ்விதமான உயர்நிலை விஜயமும் மேற்கொள்ளவில்லை எனவும் வெளிநாட்டு அமைச்சர்களான லக்ஷ்மன் கதிர்காமர் 2001ம் ஆண்டிலும் ரோஹித போகொல்லாகம 2009ம் ஆண்டிலும் சவூதிக்கு வருகை தந்தனர் எனவும் அவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.  

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்இ என்னுடைய பதவிக் காலத்தினுள் சவூதி அரேபியாவில் இருந்து இலங்கைக்கு உயர் நிலை விஜயங்களை மேற்கொள்ளும்  வகையில் பெரு முயற்சிகளை மேற்கொள்வேன் என அவர் குறிப்பிட்டார். மேலும்இ உயர்நிலை வருகையின் இடையில் கூட்டுறவுக்கான பல புதிய பரப்புக்களை இனங்காணக்கூடியதாக இருக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன். இரு தரப்பினருக்குமிடையில் ஏற்கனவே உள்ள நீண்ட கால உறவினை மேலும் கட்டியெழுப்பும் விதத்தில் அனைத்து பங்குதாரர்களுடனும் மிகவும் நெருக்கமாகவும் சிறப்பாகவும் பணியாற்றுவது தன்னுடைய பொறுப்பாகும் எனவும் அவர் விளக்கமளித்தார். 

சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இரு தரப்பு வணிக உறவினை பல்வகைப்படுத்து முகமாக கொழும்பு மற்றும் ரியாதுக்கு  இடையிலான உயர் நிலைப் பரிமாற்றங்களை ஊக்குவிப்பதாக உறுதியளித்தார். 

தற்போது கூ300மில்லியன் பெறுமதி வாய்ந்த தேயிலை மற்றும் எண்ணெய் ஆகிய இரு பொருட்களைச் சார்ந்துள்ள சவூதி அரேபியா உடனான வணிக உறவினை மேலும் பலப்படுத்துவது தொடர்பில் இலங்கைத் தலைமைத்துவம் என்னை ஊக்கப்படுத்தியுள்ளது என அவர் குறிப்பிட்டார். 

அத்துடன் மொத்த வர்த்தக மதிப்பீடான கூ300மில்லியன் ரூபாயில் எமது நாடு சார்பில் தேயிலையும் சவூதி சார்பில் பெற்றோலியமும் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. எமது ஏற்றுமதிப் பொருட்களை சவூதி அரேபியா முழுவதும் விஸ்தரிப்பதற்குத் தேவையான அனைத்து விதமான ஊக்கப்படுத்தல்களையும் நான் மேற்கொள்வேன். 

சாத்தியமான ஏற்றுமதிதாரர்களுடனான மெய்நிகர் ஒன்றுகூடல்களினூடாக புதிய பரப்புக்களை உள்ளடக்குவது தொடர்பான வணிக மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி சபை (நுனுடீ) மூலம் மேற்கொள்ளப்பட்டன எனவும் அவர் கூறினார். 

சவூதி அரேபியாவானது எண்ணெயின் மீது தங்கியிருப்பதைக் குறைக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தச் செயற்றிட்டங்களை உள்ளடக்கிய சவூதி அரேபியாவின் எதிர்கால திட்டம் 2030இனை அவர் பாராட்டினார். இலங்கையின் தகவல் தொழில்நுட்பமும் தொடர்பாடலும்இ சுகாதாரம்இ கட்டட நிர்மாணம் மற்றும் சுற்றுலாத் துறை ஆகிய பிரிவுகளில் உள்ள நிறுவனங்களில் காணப்படக்கூடிய சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்கும் திட்டமிட்டுள்ளதாகவும்  அம்ஸா சுட்டிக்காட்டினார். 

சவூதி அரேபியாவுடனான எமது உறவானது அரசியல்இபொருளாதாரம்இமதம்இகலாசாரம்இபரஸ்பர நம்பிக்கைஇமரியாதை வரை பன்முகத் தன்மை கொண்டதாகும் எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும்இ தொழிலாளர் சந்தை என்பது உறவு முறைச் சாவியின் ஓர் அம்சமாகும் எனவும் வலியுறுத்தினார். 

சவூதி அரேபியாவானது பெருமளவிலான இலங்கைத் தொழிலாளர்களைப் பெற்றுக் கொள்ளும் ஒரு நாடாகும்.ஆயிரக்கணக்கான இலங்கை மக்கள் சவூதியில் வாழ்ந்து கொண்டிருப்பது இலங்கைக்கான அந்நியச் செலாவணியைப் பெற்றுக் கொள்வதற்கான பிரதான ஒரு மூலமாகும்.   1980ம் ஆண்டில் பெரும்பாலான இலங்கையர்கள் புலம்பெயர் தொழிலாளர்களாக சவூதி அரேபியாவிற்குச் சென்றனர். இலங்கைப் பொருளாதாரத்திற்குக் கணிசமான பங்களிப்பை வழங்குவதற்காக 150000இலங்கையர்கள் புலம்பெயர் தொழிலாளர்களாக சவூதியில் பணிக்கமர்த்தப்பட்டனர் என்று புதிய தூதுவர் அம்ஸா சுட்டிக் காட்டினார்.  

இலங்கையின் அந்நியச் செலாவணியின் 23.5மூ ஆனது சவூதி அரேபியாவில் வாழ்கின்ற புலம்பெயர் தொழிலாளர்களாலேயே உருவாக்கப்படுகிறது. எனவே அவர்களின் நலன்களை பேண அதிக கரிசனையுடன் செயற்படுவேன். ஜித்தாவில் உள்ள கவுன்ஸல் ஜெனரல் அலுவலகத்தின் மூலமாக இலங்கையரின் நலன்புரி சேவைகயை சிறப்பாக வழங்க இருப்பதோடு குறைபாடுகளை தீர்க்கவும் ஆவன செய்வேன் என்றும் குறிப்பிட்டார். 

ஹஜ் கோட்டா தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர் இகொரோன தொற்று காரணமாக தடைப்பட்ட ஹஜ் யாத்திரை அடுத்த வருடம் மீண்டும் ஆரம்பாக இருக்கிறது. கடந்த காலங்களில் இலங்கைக்கு குறைவான கோட்டாவே கிடைத்தது இம்முறை அது அதிகரிக்கும் என நம்புகிறேன். புனித ஹரம் விஸ்தரிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதால் இம்முறை கூடுதலானவர்களுக்கு ஹஜ் கடமையை நிறைவேற்ற சந்தர்ப்பம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.

அதற்கான தலையீட்டை செய்ய எண்ணியுள்ளேன் என்றும் அவர் தெரிவித்தார். 

எனது நாட்டினுடைய தலைமைத்துவத்தின் ஆர்வமும் உற்சாகமுமே என்னை ஊக்கப்படுத்தியது என அவர் கூறினார். மேலும்இ என்னுடைய தலைவர்களுடன் நான் கலந்து கொண்டு மேற்கொண்ட சந்திப்புகளின் போது அவர்கள் காட்டிய ஆர்வத்தின் காரணமாக இலங்கைக்கும் சவுதிக்கும் இடையிலான பழமை வாய்ந்த மற்றும் முக்கியமான உறவு முறையினைப் பலப்படுத்துவதற்காக  மேலும் ஊக்கப்படுத்தப்பட்டேன் எனவும் அவரது நேர்காணலின் போது தெரிவித்தார். 

சில்மியா யூசுப்

Comments