20க்கு20 உலகக்கிண்ண போட்டிகளுக்கான தோனியின் சாதனையை முறியடித்தார் சுஐப் மாலிக் | தினகரன் வாரமஞ்சரி

20க்கு20 உலகக்கிண்ண போட்டிகளுக்கான தோனியின் சாதனையை முறியடித்தார் சுஐப் மாலிக்

பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ரி20உலக கிண்ணப் போட்டியில் பாகிஸ்தான் அணி 5விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் அனுபவம் வாய்ந்த துடுப்பாட்ட வீரரான மாலிக் மிகச்சிறப்பாக 25ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றுக்கொண்டு பாகிஸ்தான் அணியின் வெற்றியை உறுதிப் படுத்தினார்.

ரி20உலகக்கிண்ணப் போட்டிகளில் 2007ஆம் ஆண்டு முதலாவது உலகக் கிண்ண போட்டியில் தொடக்கம் இப்போது வரைக்கும் விளையாடும் வீரர்களில் ஒருவரான சொயிப் மாலிக்இ இந்த புதிய சாதனையை நிலைநாட்டினார்.  டுவென்டி டுவென்டி உலகக்கிண்ண போட்டிகளில் அதிக தடவைகள் சேசிங்கின் போது ஆட்டமிழக்காது இருந்தவர்கள் வரிசையில் இப்போது முதல் இடத்தை பிடித்திருக்கிறார். இதுவரைக்கும் தோனி ரி 20உலக கிண்ணப் போட்டிகளில் 20தடவைகள் ஆட்டமிழக்காத ஆட்டக்காரராக இருந்தார்.ஆனால்  சொயிப் மாலிக் ஆட்டமிழக்காமல் ஆடியது  21வது சந்தர்ப்பமாக மாறியுள்ளது. ஆக மொத்தத்தில் தோனியின் உலகக்கிண்ண போட்டிகளுக்கான சாதனையை சொயிப் மாலிக் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Comments