சிவா | தினகரன் வாரமஞ்சரி

சிவா

சக்தி சக்தி சக்தி 
சிவசக்தி என்று பாடுவோம்
 
நெஞ்சுற நிறைந்து 
உள்ளுற உறைந்து 
வில்லற விரைந்த 
அம்பென மறைந்து 
 
சொல்லுறப் பொருளாய் 
கள்ளுற மகிழ்வாய் 
அல்லுறப் பிறவி 
அறுத்தெறிவானே 
 
தாயும் சேயும் ஓர் உயிராய் 
என் நெஞ்சில் வாழும் 
வேதியனே 
தீயும் காற்றும் ஓர் உடலாய் 
மோகம் மோதும் 
சோதியனே 
 
கடல் மேல் காற்று 
மீட்டிடும் அலைகள் 
உடல் உள் உன் சுவாசம் 
ஊட்டிடும் எண்ணம் 
 
கண்கட்டி விட்டு 
உனைக் கண்டெடு என்றாய் 
மண்கட்டி வீட்டில் 
வாழ்ந்திட வைத்தாய் 
 
மௌனம் பேசும் 
மென் இருளில் 
உன் மடிமேல் வீசும் 
பூங்காற்றை 
உறங்கிக்  கிடக்க 
ஜென்மம் கோடிதனை 
வரமாய் வாங்கி வந்தேனே 
 
நிட்டை பூண்ட உன் முகத்தை 
நிமிர்ந்து பார்த்து சாய்ந்த விழி 
கட்டை மீது தான் படுத்து 
நீராய் உயிர் காய்ந்து விடும் 
 
உன் நினைவு நீங்காவிட்டால் 
போதும் 
முக்தியெல்லாம் மூடர்க்கு 
பிரபஞ்சம் அழியும் வரை 
பிணைந்திருப்போம் காதலிலே 
சிவாயநம
 
ரதிதேவி, மானிப்பாய்

Comments