டிஜிட்டல் வழி சுகாதாரத்தை ஒரே தளத்தில் வழங்க Doc990 உடன் ஒன்றிணைகிறது MyDoctor | தினகரன் வாரமஞ்சரி

டிஜிட்டல் வழி சுகாதாரத்தை ஒரே தளத்தில் வழங்க Doc990 உடன் ஒன்றிணைகிறது MyDoctor

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி சேவை வழங்குனர்களான Doc990மற்றும் MyDoctor என்பன அண்மையில் தமது சேவை ஒருங்கிணைப்பினை அறிவித்துள்ளது. இவ்விரு ஜாம்பவான்களின் ஒருங்கிணைப்பானது தமது பயனாளர்களின் அனைத்து விதமான சுகாதார ரீதியான தேவைகளையும் மேலும் மெருகூட்டப்பட்ட சேவையினூடாக பூர்த்தி செய்யும் வண்ணம், Doc990எனும் வர்த்தகநாமத்தில் பிரத்தியேகமாக தொடரவுள்ளது.

மேம்படுத்தப்பட்ட புதிய அம்சங்களுடன் கூடிய இவ்வொருங்கிணைக்கப்பட்ட Doc990தளமானது, இலங்கையின் அனைத்து விதமான டிஜிட்டல் வழி சுகாதாரத் தேவைகளையும் பூர்த்தி செய்து புதியதோர் புரட்சியை ஏற்படுத்தும் முதலாவது சேவை வழங்குனராகத் திகழவுள்ளது. சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் தொழிநுட்பத்துடன் கூடிய ஒருங்கிணைந்த நிபுணத்துவம் அதன் பயனாளர்களுக்கு Doc990மொபைல் App மற்றும் இணைய வழியினூடாக மட்டற்ற சேவையினை வழங்கவுள்ளது. மேலும் நாடு முழுவதுமுள்ள 140க்கும் மேற்பட்ட வைத்தியசாலைகளில் 5,000க்கும் மேற்பட்ட மருத்துவர்களுடனான சந்திப்புக்களை முன்பதிவு செய்தல், 1,300க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்களுடன் audio மற்றும் video சந்திப்புகளை மேற்கொள்ளுதல், 24மணி நேர சுகாதார ரீதியான துரித சேவை வழங்குனர்களை அணுகுதல், மருந்து வகைகளை இணைய வழியினூடாக கொள்வனவு செய்தல், மற்றும் அவற்றை உங்கள் சௌகரியத்திற்கேற்றவாறு  இலங்கையின் எந்தவொரு பாகத்திலிருந்தும் பெற்றுக்கொள்ளுதல், ஆய்வக சோதனைகளுக்காக முன்பதிவுகளை மேற்கொள்ளுதல், ஆய்வக அறிக்கைகளைப் பெற்றுக்கொள்ளுதல், நடமாடும் ஆய்வுகூட சேவைகள், மற்றும் உங்களது சுகாதாரப் பதிவுகளை எதிர்காலத் தேவைகளுக்கு சேமித்து வைத்தல் போன்ற அனைத்து வகையான சேவைகளையும் இவ்வொருங்கிணைப்பின் மூலம் மிக இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

டிஜிட்டல் ஹெல்த் பிரைவட் லிமிட்டட் இன் தலைமை நிர்வாக அதிகாரியான திருமதி. சோமாஸ்ரீ சுப்பிரமணியம் அவர்கள் "எம் வாடிக்கையாளர்களின் டிஜிட்டல் வழிச் சுகாதாரப் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் எமது மேம்படுத்தப்பட்ட சேவைகளின் அனுபவத்தினை வழங்குவதற்கு மிகுந்த ஆவலுடன் இருக்கும் அதே நேரத்தில், அவர்களின் அனைத்து வித சுகாதாரத் தேவைகளுக்கும் புதியதோர் திருப்புமுனையுடன் கூடிய சகாப்தத்திற்க்குள் அழைத்துச் செல்வதற்கு இந்த ஒருங்கிணைப்பானது சிறந்த வாய்ப்பினை அளித்துள்ளது." எனவும் கூறினார்.

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இன் டிஜிட்டல் சேவைக் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான திருமதி. ரேணுகா பெர்னாண்டோ அவர்கள் உரையாற்றுகையில் "டிஜிட்டல் சுகாதாரத் துறையின் மாபெரும் முன்னோடிகளான Doc990 மற்றும் MyDoctor என்பவற்றின் ஒருங்கிணைப்பானது தமது பயனாளர்களின் டிஜிட்டல் வழியான சுகாதாரத் தேவைகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சிறந்த சேவையினை வழங்கும் நோக்கத்திற்கானது எனவும், இது இலங்கை வாழ் அனைத்து மக்களினதும் சுகாதார ரீதியான வாழ்வை மேம்படுத்த மிகவும் அத்தியாவசியமான நவீனமயமாக்களைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது, இதனை உறுதிப்படுத்தும் பொருட்டு நாம் தொடர்ந்தும் செயற்படுவோம்" எனக் கூறினார்.

Comments