கூலி | தினகரன் வாரமஞ்சரி

கூலி

முற்றத்திலிருந்து பார்த்தால் பள்ளத்தில் அம்மன் கோவில் தெரியும். கோபுரமும் அதன் சூழலும் மனதில் பரவசத்தை ஏற்படுத்தும். விடியமுன்னரே படுக்கையிலிருந்து எழும்பும் அம்மா முற்றத்திலிருந்தவாறு தூரத்தே தெரியும் கோவிலைப் பார்த்து கைகூப்பி வணங்கிவிட்டுத்தான் அடுப்பு மூட்டுவாள்.

அம்மா எழும்பி நீண்ட நேரத்துக்குப் பின்னரே சுப்ரபாதம் இளம் காற்றில் இழைந்து வரும். அழுதசுரபியாய் நெஞ்சைவருடிச் செல்லும் சுப்புலெட்சுமியின் குரலில் லயித்து அரைத்தூக்கத்திலிருக்கும் மகளை அம்மா மெதுவாகத் தட்டி எழுப்புவாள்.

“கனகா எழும்புங்க நேரமாச்சில்ல...” மென்காற்றிலாடும் நூலாய் ஆவிபறக்கும் தேனீர் மேசையிருக்கும்.

அவசர அவசரமாக எழும்பி காலைக்கடன்களை முடித்துக் கொண்டு தயாராகும் போது நன்றாக விடிந்துவிடும்.

அம்மாவின் பாதங்களை வணங்கி சாப்பாட்டு பார்சலை ‘ஹேன்ட்பேக்கில்’ வைத்துக் கொண்டு படியிறங்குபவளை பார்த்தவாறு நிற்கும் அம்மாவுக்கு கையசைத்து மறைவாள் வளைவில். மெயின் றோடுக்குப் போக பத்துநிமிடங்களாகவது ஆகும். குறிப்பிட்ட சில நேரங்களுக்கு மட்டுமே ஓடுகின்ற பஸ்சிலிருந்து இறங்கி கால்மைல் தூரம் நடக்க வேண்டும், தேயிலை மலையை ஊடறுத்துச் செல்லும் செம்மண் பாதையில், கனகா படிப்பிக்கும் பாடசாலையை அடைய

ஸ்போர்ட்ஸ் டீச்சர் தேஜானி சமரசிங்ஹ பஸ்ஸ்டேன்டிலிருந்து ஏறிவரும் பஸ்சில் முச்சந்தியில் கனாக ஏறிக்கொள்வாள். அசல் தோட்டத்து தமிழ் பேசும் தேஜானியை சிங்களப் பெண் என்றால் வியப்பாக இருக்கும். சிங்கள மலைநாட்டுப் பாணியில்லாக பொதுவான முறையில் அணியும் சாரியும் கூட காரணமாக இருக்கலாம். பிறப்பு வளர்ப்பு எல்லாமே மடுல்கெல்ல பக்கம் ஒரு தேயிலை தோட்டத்தில் தேஜானியின் தந்தை தோட்டத்தில் பெரிய டீமேக்கர், அப்பாவின் நண்பர் ஒருவர் வீட்டில் டவுனில் போர்டிங் இடைநடுவில் தொத்திக்கொள்பவள் சங்கீத டீச்சர் மஹாலக்சுமி மூன்று பேருக்குமே முதல் நியமனம்.

மடியினில் ஹேன்ட்பேக்கினுள்ளிருக்கும் சாப்பாட்டு பார்சலின் இளஞ்சூடு அம்மாவை ஞாபகப்படுத்தும் கூடவே அப்பாவின் நினைவும்...

தோட்டமொன்றில் கணக்கப்பிள்ளையாகவிருந்த அப்பா பென்சன் காசில் வாங்கிய வீடு பழையது தான் என்றாலும் இரண்டுபடுக்கை அறைகள் ஒருவரவேற்பறை சமையலறை வெளியே திண்ணையென, நான்கு பேர்கள் மட்டுமே கொண்ட இவர்களுக்குத் தாராளம்.

மூத்த மகளுக்கு டீச்சர் வேலை கிடைக்க அப்பாவின் குடும்பபாரம் குறைந்தது. இளையவள் வித்யாவைப் பற்றியும் கவலையில்லை. கனகாவைப் போலவே படிப்பில் அக்கறை கெட்டிக்காரி.

கோவிலில் கொடியேறி, பூஜைகள் அன்னதானங்கள், பளபளக்கும் பட்டுகள் பகட்டுகள் என கலகலந்திருக்கும் ஒருநாளில் தான் அப்பாவின் மரணம் நிகழ்ந்தது. கோவிலுக்குப் போய் வந்ததொரு மாலையில் நெஞ்சுவலி என ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோன அப்பாவின் பிணம்தான் வீட்டுக்கு வந்தது. ‘ஹார்ட்எட்டேக்’கில் இவ்வளவு விரைவில் போய்விடுவார் என யாரும் நினைத்துக் கூட இருக்கவில்லை.

அதிர்ச்சியில் ஒருவாரத்துக்கு மேல் வீடு செத்துப்போய் கிடந்தது. இழப்பின் சுமை கொஞ்சம் கொஞ்சமாக குறைய மனசைத் தேற்றிக் கொள்கின்றாள் அம்மா. முகத்தில் மீண்டும் சாத்தம். அமைதி விதிப்படி தான் எல்லாம் நடக்கும் என்ற நம்பிக்கையா!

அப்பாவின் பிரிவு துயரம் தான் என்றாலும் யாரிடமும் கையேந்தும் நிலையில் இல்லை. மாதமொரு முறை வீட்டுக்கான உணவு சாமான்கள் அம்மா மொத்தமாக வாங்கிவருவாள். மின்சாரம் தண்ணீர் கட்டணங்கள், மாநகரசபைவரி எல்லாவற்றையும் அம்மாவே போய் செலுத்திவிடுவாள், அப்பாவின் மரணத்துக்குப் பின்னர் கல்யாணம் சடங்குக்குப் போவதை தவிர்த்துக் கொண்டாள். கனகாவும் வித்யாவுமே போவார்கள்.

வெளிவாரி பட்டப்படிப்புக்காக ஓய்வு நேரம் பூராகவும் புத்தகங்களில் மூழ்கிடக்கும் மகளிடம் கல்யாணத்துக்கான பேச்சை எடுக்கும் போது வெறுமனே புன்சிரிப்புதான் பதிலாக வரும், என்றாலும் அம்மா அதற்கான முயற்சிகளில் தீவிரமாகவிருப்பது ஒன்றும் கனகா அறியாததல்ல.

தனக்கு வேண்டியவர்கள் சிலரிடம் மகளுக்கு ஒரு மாப்பிள்ளை பாருங்கள் என சொல்லியிருந்தற்கிணங்க, இரண்டு மூன்று இடங்களிலிருந்து தகவல் வந்தாலும் ஒன்று கூட தோதாக இல்லை.

வயசு இருபத்தெட்டாகிவிட்டமே என்ற கவலையில் சஞ்சலத்திலிருந்ததொரு நாளில் தான் தரகர் கொழும்பு மாப்பிள்ளையைக் கூட்டிக் கொண்டு வந்தார். பூர்வீகம் தோட்டம் தான் என்றாலும் கொழும்பில் கொம்பெனியொன்றில் விற்பனை பிரிநிதிதியாகவிருக்கும் மாப்பிள்ளைக்கு வத்தளையில் சொந்தமாக வீடு ஒன்றும் இருக்கிறதாம்.

“தோட்டங்கள்ல இருந்து கொழும்புக்கு வந்தோன கீழ்சாதிக்காரனுக எல்லாம் சாதிய மறைச்சி பொய் சொல்லி மேல்சாதிகள்ல கல்யாணம் கட்டிக்கிறானுக சாதிய மட்டும் சரியா விசாரிச்சி சொல்லுங்க, நாளபின்ன ஒரு சபையில் நாங்க நாலுபேரு கூடுற நேரம் மொக்கப்பட்டு நிக்காம...”

மாப்பிள்ளையின் தாயாரின் கண்டிப்பான வேண்டுகோளின்படி நாலு பேரிடமும் சுற்றும் முற்றும் தீர விசாரித்து திருப்தியடைந்த பின்னரே பெண் பார்க்க வந்தார்கள்.

கனகாவைப் போலவே மாப்பிள்ளை லட்சணமாகவும் ‘ஸ்மார்ட்டாகவும்’ இருந்தான். ஐந்து வயது இவளைவிட அதிகம். பொருத்தமும் சரி. இரண்டு பக்கத்துக்குமே திருப்தி.

“கல்யாணம் முடிஞ்ச கையோட பொண்ண கொழும்புக்கு கூட்டிட்டு போயிருவோம். மாற்றம் எடுக்கிறது மகனோட பொறுப்பு. பெரியபெரிய ஆளுக எல்லாம் அவருக்கு நல்லாவே தெரியும். ட்ரான்சரபத்தி நீங்க ஒன்னும் கஷ்டப்படதேவையில்ல. கல்யாணத்தன்னக்கி நீங்க பாக்கத்தானே போறீங்க வர்ரவங்க எப்படிப்பட்ட புள்ளிகன்னு...”

வீட்டுக்கு மாப்பிள்ளையாக வர வேண்டும் என்பதே அம்மாவின் விருப்பம் மௌனமாக கனகாவின் முகத்தைப் பார்க்கின்றாள்.

“அம்மாவை தனியாகவிட்டுட்டு எனக்கு போக முடியாது” கனகா உறுதியாக.

“நல்லா யோசிச்சி கொல்லுங்க. கொழும்புக்கு வர முடியாதுன்னா சரிபட்டு வராது”

உதட்டுக் கோணலுடன் சொல்கிறாள் மாப்பிள்ளையின் தாயார். படியிறக்கும் போதும் இரண்டாம் முறையாக கனகாவைப் பார்த்து சிறு புன்னகையுடன் கையசைத்துதான் சென்றான் மாப்பிள்ளை. போயும் ஒரு மாதத்துக்கு மேலாகிவிட்டது. தகவல் எதுவுமில்லை.

கனகாவுக்கு மாப்பிள்ளையைப் பிடித்து தான் இருந்தது. மஹாவிடம் சொல்லியிருந்தாள், ஆனால் பெரிதாக கனவுகள் ஒன்றையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை.

“நல்ல இடம் கைகூடாத போக்தே” அம்மாவுக்கு முன்னரைவிட இரட்டிப்புகவலை.

“மாப்பிள்ளை வீட்ல இருந்து ஏதாவது செய்தி வந்திக்கா?” பாடசாலையை நோக்கி நடக்கும் போது மஹா.

“இல்ல அதநான் மறந்து மிக்கநாளாச்சி...”

எந்த ஒரு வருத்தமும் இல்லாத பதில், பஸ்சிலிருந்து இறங்கியதும் டிக்கட்டை, கீழே வீசி விடுவது போல ஏமாற்றத்தின் சிறுசாயல் கூட இல்லை.

“நம்பிக்கை என்பது வேண்டும் உன்வாழ்வில், அது நிச்சயம் வெல்லும் ஒருநாளில்...” மெதுவாகப் பாடுகிறார் சிறுபுன்னகையுடன் மஹா.

வெறுமனே மெதுவாக சிரிக்கிறார் கனகா.

“சரி பொறுத்திருந்து பாப்போம். அது இல்லாட்டி இன்னொன்னு நம்பிக்கையா இரு”

தன்னைவிட நாலுவயது இளையவள், இவளுக்கு ஆறுதல் சொல்கிறாள். வெறும் வார்த்தைகள் அல்ல, மனதின் அடியாழத்திலுருந்து வந்த பரிவு. பிணைப்பு.

மஹா வேலை செய்து தான் வீட்டில் அடுப்பு எரிய வேண்டும் என்ற கவலை இல்லாத குடும்ப். அதிகம் பேசாதவள். சங்கீதம் பாடல்கள், கலை இலக்கியம் என்று ஆரம்பித்தால் அரிய தகவல்களுடன் சுடர்விடும் அறிவுடன் பேசும் விதம் கேட்க ரசனையாகவும் ஆச்சரியமாகவும் இருக்கும்.

‘மஹா இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்?”

“வாசிப்பு... வாசிப்பு... தேடல்... தேடல்....” கண்ணாடியை கழற்றி சேலை தலைப்பால் துடைத்தபடி.

வெள்ளைக்கல் மூக்குத்தியும் இவளைவிட நாலு அங்குலம் கூடுதலான உயரமும் மூக்குகண்ணாடியும் மஹாவின் கம்பீரம்.

காதினிலே தேன்வந்து பாயும் செம்மொழி தமிழினிலே இத்தனை அற்புதங்களா என கனகாவை வியப்படையச் செய்யும் செய்யும் பாரதியென்று வண்ணச்சோலைக்குள் இவளது கைகளைப் பிடித்துக் கொண்டு போய் காட்டியவள் மஹா தான்.

“ஜெயமுண்டு பயமில்லை மனமே!”

வலதுகையின் நான்கு விரல்களை மடித்து, பெருவிரலை நிமிரத்திப் கையை உயர்த்திக்காட்டி காதுக்குள் மெதுவாக சொல்லிவிட்டு பஸ்சிலிருந்து இறங்கிச் செல்கிறாள் மஹா. மாலையில் வீட்டு வாசலில் கடிதத்தோடுநிற்கிறாள் வித்யா. நேர்முகத் தேர்வுக்கான தேதியைக் குறிப்பிட்டு கல்வியியல் கல்லூரியிலிருந்து வந்திருந்தது. இன்னும் மூன்று பேர்களுக்கு கடிதங்கள் வந்திருப்பதாகவும் துணைக்கு அவர்களும் வருவதால் பயமில்லை என வித்யா சொன்னது தெம்பாகவிருக்கின்றது.

இரவில் நீண்ட நேரம் ஏதேதோ அக்காளும் தங்கையும் பேசிக் கொண்டிருந்த பின்னரே படுக்கச் சென்றார்கள். இருவரும் ஒரெ அறையில் ஒரே கட்டிலில் வழக்கம் போல, மூலையில் மேசையின் மேல் வைத்துள்ள சாமி படங்களுக்கு மாலை அணிவித்து விளக்கு பற்றவைத்து வணங்கி நேரங்காலத்தோடு அம்மா சாமிக்காம்பராவில் படுத்துவிடுவது அதிகாலையிலேயே எழும்புவதற்காகத்தான்.

நடு நிசியில் அம்மா பெரிதாக முணங்கும் சப்தம் கேட்டு அம்மாவிடம் ஓடிப்போன இருவருக்கும் அதிர்ச்சி தெளிவாகப் பேச முடியவில்லை. வலது கையால் இடது காலையும் கையையும் காட்டுகிறாள். சைகையில் இடது கால், கை இரண்டையும் அசைக்க கூட முடியவில்லை.

ஊர் உறங்கும் காரிருளில் யார் வீட்டுக் கதவைத்தட்டி உதவி கேட்பது? அக்காவும் தங்கையும் அம்மாவின் முகத்தைப் பார்ப்பதும் ஒருவர் முகத்தை மற்றவர் பார்ப்பதுமாக கண்ணீரினூடே விடிய விடிய! வாகனம் தேடி ஆஸ்பத்திரி வார்டில் சேர்க்கும் போது காலை எட்டுமணிக்கு மேலாகி விட்டது.

கனகாவும் வித்யாவும் மாறிமாறி நிற்க நேர்ந்தது. ஒருவாரமாக கனகா ஸ்கூலுக்குப் போகவில்லை.

வசதி கிடைக்கும் போதெல்லாம் மஹாவும் தேஜானியும் வரத்தவறவில்லை.

“பயப்பட வேண்டாம் அம்மாவுக்கு விரைவில் குணமாகிவிடும்.

கையைப் பிடித்துக் கொண்டு சொன்ன ஒரு கட்த உறையில் காசும் வைத்துக் கொடுக்கிறாள். காசு இருக்கிறது தற்போதைக்கு வேண்டாம் என்று சொன்னாலும் வற்றுபுத்தலால் வைத்துக் கொள்ளும்படியாயிற்று அதிபர் ஆசிரியர் ஆசிரியைகள் வந்ததும் அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் வந்து ஆறுதல் சொன்னது மனதின் காயத்துக்கு ஒத்தடம் கொடுப்பது போல இருந்தது.

ஒரு வாரம் கழித்து கனகா ஸ்கூலுக்குப் போகிறாள் உதவிக்கு ஒரு பெண்ணை வைத்துக் கொள்ளும் தேடுதல்கள் பல இடங்களில் கைகூடுவதாகத் தெரியவில்லை.

வாரங்கள் இரண்டுக்குப் பின்னரும் நோய் குணமாகும் சிறு அறிகுறிகூட இல்லை.

பக்கவாத நோயை ஆங்கில வைத்தியத்தில் குணமங்க முடியாது. நாட்டு வைத்தியம் தான் சரி.

வந்தவர்கள் போனவர்கள் தெரிந்தவர்கள் எல்லோரும் இதையே சொன்னார்கள். டிக்கட் வெட்டி ஆறுமைல்களுக்கு அப்பால் இருக்கும் பிரபல நாட்டுவைத்தியரிடம் கொண்டுபோனார்கள். நாடுயை பிடித்துப் பார்த்தவர், நோய் ஏற்பட்ட அன்ஷே வந்திருந்தால் குணமடைய செய்திருக்கலாம்.

தற்போது சுகமாக்க கால தாமதமாகலாம் என்றும் கூறியவர் குடிப்பதற்கு கஷாயமும் பூசுவதற்கு எண்ணெயும் கொடுத்து குறிப்பிட்ட சில மரங்களின் இலை குழை மரப்பட்டைகள்ள இடித்து பொட்டலங்கள் கட்டி ஆவியில் சூடாக்கி ஒத்தடம் கொடுக்கும் முறைகளுடன் இரண்டு வாரங்களுக்குப் பின்னர் மீண்டும் வரலாம் எனக் கூறி அனுப்பிவைத்தார்.

வீட்டுக்குக் கற்று அருகிலுள்ள பாடசாலைக்கு மாற்றம் பெற வேண்டிய கட்டாயமட். வேறொரு வரை நியமிப்பதாக கல்வி அதிகாரி உறுதிப்படுத்தினால் விடுவிப்பதற்கு கடிதம் தரலாம் என்பது அதிபரின் முடிவு.

கல்வி காரியாலயத்துக்கு இரண்டு மூன்று முறை நடந்தது தான். மிச்சம். மாற்றியனுப்ப எவருமே இல்லை. புதிய நியமனங்கள் வந்தால் பார்க்கலாம் என்பதே அங்கு கிடைத்தபதில்.

கல்வியியல் கல்லூரி ஆரம்பிக்கும் நாளைக் குறிப்பிட்டு வித்யாவுக்கு கடிதம் வந்தது. அம்மாவைப் பார்த்துக்கொள்ள நாற்பது நாற்பத்தைந்து வயதுக்குள் ஒரு பெண்ணைத் தேடும் முயற்சியில் கனகாவும் மஹாவும் தோட்டம் தோட்டமாக, அலைந்தும் பயனில்லை.

அரசியல் செல்வாக்கு இருந்தால் மாற்றம் பெறலாம் என்ற சிலரின் ஆலோசனைகள் சரியாகவே தெரிந்தது. அதற்கு, பொறுத்தமான ஒருவரின் சிபாரிசு தேவை. இது போன்ற காரியங்களை செய்து கொடுப்பதற்கு அருமை நாயகம் என்று ஒரு ஆள் இருக்கிறார் என எங்கோ கிடைத்த தகவலையும் மஹா நான் சொன்னால்.

சின்ன வயதில் மகமாயி கொஞ்சம் போகமாகவே விளையாடியிருந்த முகத்தின் அம்மை தழும்பின் அடையாளத்துக்கும் கருகருவென டை பூசியிருந்த தலைமயிருக்கும் கொஞ்சம் கூட பொருத்தமில்லாததோற்றத்திலிருந்து அருமை நாயகதத்திற்கு நாற்பத்தைந்துக்குள் வயது இருக்கலாம் என ஆணைக்கண்டதும் மஹா யூகித்துக் கொள்கிறாள்.

பொன்னாடை போர்த்தி பக்கத்தில் நாலைந்து பேர் நிற்கும் படம் சுவரில் தொங்கியது பளிச்சென தெரிகின்றது.

“ஜே.விபட்டம் கிடைத்த போது விவாவில் எடுத்த படம்” பெருமிதம் முகத்தில் சுமரான தோற்றத்துடன் வெள்ளை முழுக்கை சேர்ட்டை மணிக்கட்டுவரை இழுத்துக் கொண்டு இவர்களை உச்சி முதல் உள்ளங்கால்வரை பார்த்தவாறு கேட்கிறார்.

“வந்த விசயத்த சொல்லலியே...” சிரித்தமுகத்துடன் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு நோக்கத்தை சொன்னதும்,

“நீங்க என்னிய நம்பி வந்திட்டீங்க. நம் சமுதாயத்துக்கு இது மாதிரி எத்தனையோ பிரச்சினை நோயில உள்ள அம்மாவை பாத்திக்கிறனும்; தங்கச்சியும் கொலேஜுக்குப் போகனும். அதே ஸ்கூல்ல நாலரை வருசம் வேலை செஞ்சிக்கீங்க ட்ரான்சர் போக இன்னம் ஆறுமாசம் தான் இருக்கு. ஆமா வெறும் ஆறுமாசம். இது மனிதாபிமானத்தில அணுக வேண்டிய ஒரு பிரச்சினை. நான் உங்களுக்கு செஞ்சிதாரன்” நீண்ட நாட்கள் பழகியவர்கள் போல இருக்கின்றது பேச்சு.

“ஐயா ரொம்ப நன்றிங்க உங்கள நான் எப்படிவும் மறக்கமாட்டேன்” கனகா.

“நீங்க செய்யிற இந்த உதவிக்கு நாங்களும் ஏதாவது செய்வோம்” மஹா

“இங்க பாருங்க நான் இத என்னோட சமுதாயக் கடமையின்னு நெனஞ்ச்சிதான் செய்யிறேன்.

“சரிங்க”

“அதோட பாருங்க நான் சொபல்ல மறந்திட்டேன். ஒரு புத்தக வெளியீட்டு விழா. நம்ம பொடியன் ஒருத்தன் கவிதை கிவிதையெல்லாம் நல்லா எழுதுவான். அவனோட மொதல் புத்தகம். நீங்க வர்ற நேரம் விழா சம்பந்தமாதான் வேலைதான் செஞ்சிக்கிட்டிருந்தேன்.

அடுத்த ஞாயித்து கெலம தான் விழா இருக்கு”

“சிறப்பு பிரதி வாங்கிற லிஸ்ட்ல உங்கள்ல யாராவது ஒருத்தர் பேர போடவா உங்களுக்கும் ஒரு பப்பிஸிட்டியா இருக்கும்...”

நாங்க ரெண்டு பேருமே உங்களோட விழாவுக்கு வருவோம். பெயர் போட வேண்டாம்”

“ஞாயிற்றுக்கிழமை கனகா விழாவுக்குப் போகும் போது மேடையில் பிரதிகள் வழங்கும் நிகழ்வு இரண்டு வாசல்கள் கொண்ட மண்டபத்தின் பின்புற வாசல் வழியாக சென்ற கனகா கடைசிவரிசையில் கவிதைப் புத்தகத்துடன் உட்கார்ந்திருந்த மஹாவினருகில் அமர்ந்து கொள்கிறாள்.

காலதாமதமாகிவந்த சிறப்பு பிரிதிகள் பெருவோர்களுக்காக இடை நடுவில் நிறுத்திவைக்கப்பட்ட சொற்பொழிவாளரின் பேச்சு தொடரும் என அறிவிக்கப்படுகின்றது.

கவுண்ட மணியைத் தேடிப் பிடித்து மேடையேற்றத் தெரிந்தவர்களுக்கு செந்திலை மறந்துபோனது எப்படி என்பது வியப்பாக இருக்கின்றது மஹாவுக்கு.

“அடுத்து இவர் வள்ளுவர், பாரதியை எல்லாம் கொல்றதுக்கு மொத நாங்க தப்பிச்சுயோயிறுவோம்”

மஹா கனகாவிடம் இரகசியமாக சொல்ல, பின் வாசல் வழியாக நழுவி சுவரோரமாக நகர்ந்து ரோட்டை அடைந்த பினனர்தான் சரியாக மூச்சுவிட முடிகின்றது.

வியாழக்கிழமை மாலையில் அருமைநாயகத்திடமிருந்து தொலைபேசி கனகாவுக்கு.

“உங்கட நேரம் நல்ல நேரம். டிரக்டரிடமிருந்து இடமாற்ற லெட்டர் ரெடி. எடியுகேசன்ல குடுத்து நீங்க விரும்புற ஸ்கூலுக்கு போகலாம். நாளைக்கு பதினொரு மணிக்கு போகனும் டிரக்டரே உங்கட கையில லெட்டர தருவாறு சரியா சந்தோஷம் தானே”

நெஞ்சில் பால்வார்த்தது போயிருக்கின்றது.

“நான் அஞ்சுசதம் காசு வாங்க மாட்டேன்னு சொல்லியிருக்கேன் தானே. எல்லா மனுசரும் நம்ம மாதிரி இல்லயே. இதுல ரெண்டுபேர் சம்பந்தம். அஞ்சிகுடுக்கனும் ஆமா அஞ்சாயிரம். உங்கட அவுசரத்துக்கு இதவிட்டா வேற வழியில்ல. காலையில பத்து மணிக்கு காசோட பஸ்ஸடேன்டுக்கு வந்திருங்க. காலையில நான் கோல் எடுக்கிறேன்”

கனகாவிடம் அந்த அளவு பணமிருக்கவில்லை.

மஹாவிடமும் கேட்க விருப்பமில்லை. காலையில் கழுத்துச்சங்கிலியை பேங்கில் வைக்கவேண்டும். பகலைக்கு மட்டுமாவது அம்மாவப் பார்த்துக் கொள்ள எப்பாடு பட்டாவது ஒருவரைத் தேடிக்கொள்ள வேண்டும். வித்தியாவும் கல்லூரிக்குப் போக வேண்டுமே!

தொலைபேசி அழைப்பு காலையிலேயே அருமை நாயகத்திடமிருந்து கனகா பேங்கிலிருக்கும் போது மற்றுமொன்று. பஸ்ஸ்டேன்டில் வழிமேல் விழிவைத்து நின்றவர். காசை எண்ணி பொக்கட்டில் வைத்துக் கொள்ள, இன்டர் சிட்டி பஸ்சில் இவளே டிக்கட்டுக்கும் காசு கொடுக்கின்றாள். மார்க்கட் அருகே இறங்கியதும் யாரையோ அவர் தேடுவது போல்தெரிகிறது. முச்சக்கர வண்டிகள் நிறுத்தும் இடத்தில் நீண்ட நேரமாகிய பின்னரே அவர் தேடிய முச்சக்கரணவண்டி வருகிறது. மத்தியான தோற்றத்தை உடைய ஓட்டுனர் தலையில் வெள்ளைக் குல்லா அணிந்திருந்தார்.

“எங்க போகனும்?” இருவரும் ஏறியதும் கேட்கிறார்.

“தெரியும் தானே அங்க தான்” அருமை நாயகம், “நான்டவுன்ல எங்க போறதின்னாலும் நம்ம நானாவோட வீல்லதான் போவேன்” கனகாவைப் பார்த்து சொல்கிறார்.

பிரதான வீதியில் சிறிது தூரம் ஓடிய வண்டி வலது புறமாகத் திரும்பி பத்துப் பதினைந்து நிமிடங்களுக்குப்பின் கிளைவீதியொன்றில் ஒருமாடிவீட்டினருகில் நிற்கின்றது. கேட் திறந்தேயிருந்தாலும் சிக்குயிரிட்டி கார்ட்’ ஒருவன் நிற்பது தெரிகின்றது.

“இந்தா வந்திர்ரேன்” இரண்டு பேருக்குமாகச் சொல்லிவிட்டு நடக்கின்றார். மாடிவீட்டை நோக்கி.

“தங்கச்சி உங்க கிட்ட ஒரு விசயம் கேட்கலாமா” சீட்டிலிருந்து பின்புறம் திரும்பிய ஓட்டுனர்.

முன்பின் அறிமுகமிள்ளாத மனிதர். தயக்கமாக இருக்கின்றது இவளுக்கு. என்ன கேட்க போகின்றார் பலமான யோசனை.

“விருப்பம் இல்லாட்டி சொல்ல வேணாம்”

“என்னதான் கேட்டவிடப்போறார்ன்னு பார்போமே” சரிங்க” தயக்கத்துடன் சற்று இழுத்தவாறு

“இந்த ஆள உங்களுக்கு எவ்வளவு காலமா தெரியும்?”

இதென்ன கேள்வி. யோசிக்கிறாள்

“ரெண்டு கிழமைக்கு முந்திதான் அதுவும் ஒரு ட்ரான்சர் விசயமா சந்திக்க போனதுனால”

“நெனச்சேன். உங்க முகத்த பாத்தோடனயே எனக்கு தெரிஞ்சிக்கி நீங்க ஒரு நல்ல குடும்பத்து பொண்ணுனு கொஞ்ச்சம் வெவரமான எல்லாத்தையும் சொல்றீங்களா?”

சொன்னா என்ன ஆகிவிடப் போகிறது...

எல்லாவற்றையும் விபரமாகச் சொல்கிறாள்.

“ஐயோ தங்கச்சி நீங்க ஏமாந்திட்டீங்க” தலையிலடித்துக்கொள்கிறார்.

“என்னாங்க ஐயா” பதற்றத்துடன் இவள்.

“ச்சா... ச்சா... கடவுளே எனக்கும் மூனு குமர் புள்ளைகஇருக்கு. அதுகள கரையேத்ததான் நான் ரவ்பகலா மழயிலயும் வெய்யிலவும் வீல ஓடி கஸ்டப்படுறேன்.”

“சரிங்க” பதற்றம் குறையாதவளாய்

“நான் சொல்றேன்னு தவறா நெனச்சிக்கிறாதீங்க. நீங்க ஏமாந்திட்டீங்க இந்த மனுசன் எப்பாவானது யாராவது ஒரு மாதிரிபட்ட பொம்பளை கூட்டிக்கிட்டு வருவான். இந்த கெஸ்ட் ஹவுஸ்ல ஒரு மணித்தியாலமோ ரெண்டு மணித்தியாலமோ தங்கியிருந்திட்டு போவான். கூலிக்குமேல ரெண்டு மடங்கு எனக்கு குடுப்பான். ஊர் உலகத்த நமக்கு திருத்த முடியுமா. நாம தான் கவனமா இருக்கணும்.

இதயம் படபடக்கும் வேகம் அதிகரிக்க உஷ்ணமான காற்றுமுழு உடம்பிலும் கவிந்து விட்டது போல வேர்த்து நடுநடுங்க வலது கையால் வண்டியின் இரும்பு கம்பிளைப் பிடித்தவாறு கனகா நா தழுதழுக்க சொல்கிறாள் பரிதாபமான பார்வையில்...“ஐயா என்னிய சருக்கா பஸ்ஸ்டேண்டுல கொண்டு போய் விட்டுறுங்க. கூலிய நான் தாறன்”

மலரன்பன்

முற்றத்திலிருந்து பார்த்தால் பள்ளத்தில் அம்மன் கோவில் தெரியும். கோபுரமும் அதன் சூழலும் மனதில் பரவசத்தை ஏற்படுத்தும். விடியமுன்னரே படுக்கையிலிருந்து எழும்பும் அம்மா முற்றத்திலிருந்தவாறு தூரத்தே தெரியும் கோவிலைப் பார்த்து கைகூப்பி வணங்கிவிட்டுத்தான் அடுப்பு மூட்டுவாள்.

அம்மா எழும்பி நீண்ட நேரத்துக்குப் பின்னரே சுப்ரபாதம் இளம் காற்றில் இழைந்து வரும். அழுதசுரபியாய் நெஞ்சைவருடிச் செல்லும் சுப்புலெட்சுமியின் குரலில் லயித்து அரைத்தூக்கத்திலிருக்கும் மகளை அம்மா மெதுவாகத் தட்டி எழுப்புவாள்.

“கனகா எழும்புங்க நேரமாச்சில்ல...” மென்காற்றிலாடும் நூலாய் ஆவிபறக்கும் தேனீர் மேசையிருக்கும்.

அவசர அவசரமாக எழும்பி காலைக்கடன்களை முடித்துக் கொண்டு தயாராகும் போது நன்றாக விடிந்துவிடும்.

அம்மாவின் பாதங்களை வணங்கி சாப்பாட்டு பார்சலை ‘ஹேன்ட்பேக்கில்’ வைத்துக் கொண்டு படியிறங்குபவளை பார்த்தவாறு நிற்கும் அம்மாவுக்கு கையசைத்து மறைவாள் வளைவில். மெயின் றோடுக்குப் போக பத்துநிமிடங்களாகவது ஆகும். குறிப்பிட்ட சில நேரங்களுக்கு மட்டுமே ஓடுகின்ற பஸ்சிலிருந்து இறங்கி கால்மைல் தூரம் நடக்க வேண்டும், தேயிலை மலையை ஊடறுத்துச் செல்லும் செம்மண் பாதையில், கனகா படிப்பிக்கும் பாடசாலையை அடைய

ஸ்போர்ட்ஸ் டீச்சர் தேஜானி சமரசிங்ஹ பஸ்ஸ்டேன்டிலிருந்து ஏறிவரும் பஸ்சில் முச்சந்தியில் கனாக ஏறிக்கொள்வாள். அசல் தோட்டத்து தமிழ் பேசும் தேஜானியை சிங்களப் பெண் என்றால் வியப்பாக இருக்கும். சிங்கள மலைநாட்டுப் பாணியில்லாக பொதுவான முறையில் அணியும் சாரியும் கூட காரணமாக இருக்கலாம். பிறப்பு வளர்ப்பு எல்லாமே மடுல்கெல்ல பக்கம் ஒரு தேயிலை தோட்டத்தில் தேஜானியின் தந்தை தோட்டத்தில் பெரிய டீமேக்கர், அப்பாவின் நண்பர் ஒருவர் வீட்டில் டவுனில் போர்டிங் இடைநடுவில் தொத்திக்கொள்பவள் சங்கீத டீச்சர் மஹாலக்சுமி மூன்று பேருக்குமே முதல் நியமனம்.

மடியினில் ஹேன்ட்பேக்கினுள்ளிருக்கும் சாப்பாட்டு பார்சலின் இளஞ்சூடு அம்மாவை ஞாபகப்படுத்தும் கூடவே அப்பாவின் நினைவும்...

தோட்டமொன்றில் கணக்கப்பிள்ளையாகவிருந்த அப்பா பென்சன் காசில் வாங்கிய வீடு பழையது தான் என்றாலும் இரண்டுபடுக்கை அறைகள் ஒருவரவேற்பறை சமையலறை வெளியே திண்ணையென, நான்கு பேர்கள் மட்டுமே கொண்ட இவர்களுக்குத் தாராளம்.

மூத்த மகளுக்கு டீச்சர் வேலை கிடைக்க அப்பாவின் குடும்பபாரம் குறைந்தது. இளையவள் வித்யாவைப் பற்றியும் கவலையில்லை. கனகாவைப் போலவே படிப்பில் அக்கறை கெட்டிக்காரி.

கோவிலில் கொடியேறி, பூஜைகள் அன்னதானங்கள், பளபளக்கும் பட்டுகள் பகட்டுகள் என கலகலந்திருக்கும் ஒருநாளில் தான் அப்பாவின் மரணம் நிகழ்ந்தது. கோவிலுக்குப் போய் வந்ததொரு மாலையில் நெஞ்சுவலி என ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோன அப்பாவின் பிணம்தான் வீட்டுக்கு வந்தது. ‘ஹார்ட்எட்டேக்’கில் இவ்வளவு விரைவில் போய்விடுவார் என யாரும் நினைத்துக் கூட இருக்கவில்லை.

அதிர்ச்சியில் ஒருவாரத்துக்கு மேல் வீடு செத்துப்போய் கிடந்தது. இழப்பின் சுமை கொஞ்சம் கொஞ்சமாக குறைய மனசைத் தேற்றிக் கொள்கின்றாள் அம்மா. முகத்தில் மீண்டும் சாத்தம். அமைதி விதிப்படி தான் எல்லாம் நடக்கும் என்ற நம்பிக்கையா!

அப்பாவின் பிரிவு துயரம் தான் என்றாலும் யாரிடமும் கையேந்தும் நிலையில் இல்லை. மாதமொரு முறை வீட்டுக்கான உணவு சாமான்கள் அம்மா மொத்தமாக வாங்கிவருவாள். மின்சாரம் தண்ணீர் கட்டணங்கள், மாநகரசபைவரி எல்லாவற்றையும் அம்மாவே போய் செலுத்திவிடுவாள், அப்பாவின் மரணத்துக்குப் பின்னர் கல்யாணம் சடங்குக்குப் போவதை தவிர்த்துக் கொண்டாள். கனகாவும் வித்யாவுமே போவார்கள்.

வெளிவாரி பட்டப்படிப்புக்காக ஓய்வு நேரம் பூராகவும் புத்தகங்களில் மூழ்கிடக்கும் மகளிடம் கல்யாணத்துக்கான பேச்சை எடுக்கும் போது வெறுமனே புன்சிரிப்புதான் பதிலாக வரும், என்றாலும் அம்மா அதற்கான முயற்சிகளில் தீவிரமாகவிருப்பது ஒன்றும் கனகா அறியாததல்ல.

தனக்கு வேண்டியவர்கள் சிலரிடம் மகளுக்கு ஒரு மாப்பிள்ளை பாருங்கள் என சொல்லியிருந்தற்கிணங்க, இரண்டு மூன்று இடங்களிலிருந்து தகவல் வந்தாலும் ஒன்று கூட தோதாக இல்லை.

வயசு இருபத்தெட்டாகிவிட்டமே என்ற கவலையில் சஞ்சலத்திலிருந்ததொரு நாளில் தான் தரகர் கொழும்பு மாப்பிள்ளையைக் கூட்டிக் கொண்டு வந்தார். பூர்வீகம் தோட்டம் தான் என்றாலும் கொழும்பில் கொம்பெனியொன்றில் விற்பனை பிரிநிதிதியாகவிருக்கும் மாப்பிள்ளைக்கு வத்தளையில் சொந்தமாக வீடு ஒன்றும் இருக்கிறதாம். “தோட்டங்கள்ல இருந்து கொழும்புக்கு வந்தோன கீழ்சாதிக்காரனுக எல்லாம் சாதிய மறைச்சி பொய் சொல்லி மேல்சாதிகள்ல கல்யாணம் கட்டிக்கிறானுக சாதிய மட்டும் சரியா விசாரிச்சி சொல்லுங்க, நாளபின்ன ஒரு சபையில் நாங்க நாலுபேரு கூடுற நேரம் மொக்கப்பட்டு நிக்காம...”

மாப்பிள்ளையின் தாயாரின் கண்டிப்பான வேண்டுகோளின்படி நாலு பேரிடமும் சுற்றும் முற்றும் தீர விசாரித்து திருப்தியடைந்த பின்னரே பெண் பார்க்க வந்தார்கள்.

கனகாவைப் போலவே மாப்பிள்ளை லட்சணமாகவும் ‘ஸ்மார்ட்டாகவும்’ இருந்தான். ஐந்து வயது இவளைவிட அதிகம். பொருத்தமும் சரி. இரண்டு பக்கத்துக்குமே திருப்தி.

“கல்யாணம் முடிஞ்ச கையோட பொண்ண கொழும்புக்கு கூட்டிட்டு போயிருவோம். மாற்றம் எடுக்கிறது மகனோட பொறுப்பு. பெரியபெரிய ஆளுக எல்லாம் அவருக்கு நல்லாவே தெரியும். ட்ரான்சரபத்தி நீங்க ஒன்னும் கஷ்டப்படதேவையில்ல. கல்யாணத்தன்னக்கி நீங்க பாக்கத்தானே போறீங்க வர்ரவங்க எப்படிப்பட்ட புள்ளிகன்னு...”வீட்டுக்கு மாப்பிள்ளையாக வர வேண்டும் என்பதே அம்மாவின் விருப்பம் மௌனமாக கனகாவின் முகத்தைப் பார்க்கின்றாள்.

“அம்மாவை தனியாகவிட்டுட்டு எனக்கு போக முடியாது” கனகா உறுதியாக.

“நல்லா யோசிச்சி கொல்லுங்க. கொழும்புக்கு வர முடியாதுன்னா சரிபட்டு வராது”(மிகுதி அடுத்த வாரம்)

மலரன்பன்
இன்று படைப்பாளர் மலரன்பன் பிறந்தநாள் வாழ்த்துகள்

Comments