சிறந்த விலையில் போஷாக்கான பாலை வழங்குவோம், பெல்வத்த வாக்குறுதி | தினகரன் வாரமஞ்சரி

சிறந்த விலையில் போஷாக்கான பாலை வழங்குவோம், பெல்வத்த வாக்குறுதி

நாட்டின் பெறுமதியான அந்நியச் செலாவணியைச் சேமித்து பல்வேறு வகையான பால் உற்பத்திகளை உற்பத்தி செய்யும் இலங்கையின் முன்னணி உள்ளூர் பால் வர்த்தக நாமங்களில் ஒன்றான Pelwatte Dairy, அண்மையில் சந்தையில் ஏற்பட்ட விலை ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் அதன் தொழிற்சாலைகளில் இருந்து எவ்வித தடங்கலுமின்றி பால் விநியோகத்தை மேற்கொள்வதை உறுதி செய்துள்ளது.

Pelwatte தயாரிப்பு வரிசையில், Pelwatte முழு ஆடைப் பால்மா, Pelwatte வெண்ணெய், Pelwatte யோகட், Pelwatte நெய் ஆகியன பிரபலமானவை.

Pelwatte பால் விநியோகச் சங்கிலியானது மிக விரிவானதாகும். Pelwatte அதன் தொழிற்சாலைகளுக்கு மிக உயர் தரமான புத்தம் புதிய பாலை மாத்திரம் பயன்படுத்துவதால், அவை மலிவானதாக அமைவதில்லை. இத்தொழில்துறைக்கு அமைய நன்கு அறியப்பட்ட விடயம் யாதெனில் , "சிறந்த பால் பொருட்களை சிறந்த மூலப் பொருளான பாலில் இருந்து மட்டுமே தயாரிக்க முடியும்." அந்த வகையில் பெல்வத்தவும் அதன் பால் உற்பத்திச் சங்கிலியில் மிகச் சிறந்ததையே தெரிவு செய்து வழங்குகின்றது.

கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகள் தினசரி பெறும் பாலானது, பண்ணை சங்கங்களால் திரட்டப்பட்டு, அவை பாலின் புத்துணர்ச்சி மற்றும் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் வெப்பநிலையில் பேணப்படும் வகையிலான திறன் கொண்ட, பெல்வத்த வாடகை பால் பவுசர்களின் வலையமைப்பினால் சேகரிக்கப்பட்டு, அவை PDIL குளிர்விக்கும் மையங்களுக்கு வழங்கப்படுகின்றன. குறிப்பாக, சேகரிப்பு மையங்களிலிருந்து பெறப்படும் பாலானது, குளிர்வித்தல்-விநியோகச் சங்கிலி தொழில்நுட்பம் மற்றும் வெப்ப பாதுகாப்பு தொகுதிகளுக்கு கிடைத்தவுடன், அது நான்கு பாகை செல்சியஸிற்கு உடனடியாக குளிர்விக்கின்றன. பால் சேகரிப்பு மையங்களில் இருந்து, விசேட பாதுகாப்பு அம்சங்களுடனான பால் பவுசர்கள், குளிரூட்டப்பட்ட பாலை புத்தளவில் உள்ள தொழிற்சாலைக்கு கொண்டு செல்கின்றன. அதனைத் தொடர்ந்து குறித்த குளிர்ந்த பால், தொழிற்சாலையின் சிலிண்டர் தொட்டிக்குள் சேகரிக்கப்படுகிறது. அதன் பிறகு, பால் பவுடரை உருவாக்குவதை உறுதி செய்யும் அளவிலான கொழுப்பு மற்றும் திண்ம கொழுப்பு அற்ற (Solid-Not-Fat) SNF மட்டத்தை பேணி அது 'தரப்படுத்தப்படும்'. தொட்டியிலுள்ள பாலை தரப்படுத்திய பின்னர், விசிறி உலர்த்தும் ஆலையானது பாலிலுள்ள நீர்த் தன்மையை ஆவியாக்கி, பால் மாவை பிரித்தெடுக்கிறது. இந்த உற்பத்திச் சங்கிலி முழுவதும், ISO 22000:2018 தரத்திற்கு அமைவான விடயங்கள் கடைப்பிடிக்கப்பட்டு, பெல்வத்தவினால் நூறு வீத தர உத்தரவாதம் பேணப்பட்டு கடைப்பிடிக்கப்படுகிறது.

Comments