மீண்டும் தலைநகரில் களைகட்டிய வகவ கவியரங்கம் | தினகரன் வாரமஞ்சரி

மீண்டும் தலைநகரில் களைகட்டிய வகவ கவியரங்கம்

கொரோனா அலை தலை தூக்கிய காரணத்தால் தடைப்பட்டிருந்த வலம்புரி கவிதா வட்டத்தின் கவியரங்கம் மீண்டும் கடந்த பௌர்ணமி தினம் சிறப்பாக நடைபெற்றது. இது வகவம் எனும் வலம்புரி கவிதா வட்டம் நடாத்திய 74ஆவது கவியரங்காகும்.

கொழும்பு பழைய நகர மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வினை வகவத் தலைவர் என். நஜ்முல் ஹுசைன் நெறிப்படுத்தினார். வகவ சிரேஷ்ட ஸ்தாபகர் கலாபூஷணம் சத்திய எழுத்தாளர் எஸ். ஐ. நாகூர் கனி முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக திரைப்பட உதவி இயக்குநர் ஜெய்னு கலந்து கொண்டார்.

வரவேற்புரையை செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன் நிகழ்த்தினார். பொருளாளர் ஈழ கணேஷ் நன்றியுரை வழங்கினார்.

இந்த இடைவெளியில் எம்மை விட்டு மறைந்த கவிமணி நீலாபாலன், கலாபூஷணம் மு. பஷீர், பாரதி கலா மன்றத் தலைவர் கலாபூஷணம் த. மணி, இலக்கியச்சுடர் ஏ. ஜே. எம். நிலாம் ஆகியோருக்கான மௌனஞ்சலியும் நடைபெற்றது.

74ஆவது கவியரங்கினை கவிஞரும் கலைஞருமான ஏ. கே. இளங்கோ சிறப்பாக தலைமையேற்று நடத்தினார்.

கவிஞர்கள் கலைவாதி கலீல், கலா விஸ்வநாதன், எஸ். தனபாலன், சுபாஷினி பிரணவன், கலாபூஷணம் மஸீதா அன்சார், வாழைத் தோட்டம் எம். வஸீர், அக்ஷியா லைலா, உணர்ச்சி பூக்கள் ஆதில், கஸ்ஸாலி அஷ்ஷம்ஸ், கம்பளை ரா. சேகர், மலாய்கவி டிவாங்ஸோ, கம்மல்துறை இக்பால், தேஜஸ்வினி பிரணவன், இளநெஞ்சன் முர்ஷிதீன் ஆகியோர் மிகவும் உற்சாகத்துடன் கவிதை பாடினர்.

தமிழ்த் தென்றல் அலி அக்பர், எம். ஐ. எம். முஸம்மில், கம்பளை பிரவீன், எம். எஸ். எம். ராஸிக், ஏ. எம். எஸ். உதுமான், எம். எம். பாஸில், எம். நஸார், ஜொயேல் ஜோன்சன், கவிக்கமல் ரஸீம் ஆகியோர் சபையை அலங்கரித்தனர்.

நஜ்முல் ஹுசைன்

Comments