பொழுதுபோக்கு | தினகரன் வாரமஞ்சரி

பொழுதுபோக்கு

ஓய்வு நேரத்தில் செய்வதெல்லாம் பொழுது போக்கு ஆகும். மனிதனாகப் பிறந்த  எல்லோருக்கும் பல பொழுது போக்குகள் இருக்கின்றன. சிலர் நடனம் ஆடுவார்கள்.  வேறுசிலர் வாத்தியங்கள் இசைப்பார்கள். உதாரணமாக வயலின், புல்லாங்குழல்,  மிருதங்கம், வீணை என்ற பல இசைக்கருவிகளை வாசிப்பார்கள். ஓய்வு நேரத்தில்  சிலர் தொலைக்காட்சி பார்ப்பார்கள், கணனியில் விளையாடுவார்கள், நூல்கள்  வாசிப்பார்கள்.

நான் என் ஓய்வு நேரத்தில் பல வகையான செயல்பாடுகளை செய்வேன். எனக்கு மிகப்  பிடித்தது, ஓய்வு நேரம் கிடைத்தால் ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு என்  அறையில் இருக்கும் கட்டிலில் படித்திருந்து அப்புத்தகத்தை வாசிப்பேன்.

அத்துடன் மகிழ்ச்சியாக இருக்கும் போது நான் என் புல்லாங்குழலை எடுத்துப்  படித்த பாடல்களை வாசிப்பேன். எனக்கு கால்பந்தாட்டமும் விளையாட மிகவும்  பிடிக்கும். எனது நண்பர்களுடன் விளையாட்டுத் திடலுக்குச் சென்று  விளையாடுவேன். திரும்பி வரும்போது நான் என் நண்பியின் வீட்டுக்குச் சென்று  தொலைக்காட்சியைப் பார்த்து உணவருந்தி மகிழ்வோம்.

எப்பொழுதும் இயந்திரமயமாக இயங்கிக் கொண்டிருக்கும் உலகத்தில் படிப்பதும்,  வேலைகளை மட்டும் செய்வதும் வாழ்க்கை அல்ல. எமக்கென சிறிது நேரத்தை ஒதுக்கி  பிடித்த பொழுது போக்கில் ஈடுபடுங்கள்..!

வினோ மதிவதனி,
லுனுகலை.

Comments