இராணுவத்துக்கு எதற்கு அதிக நிதி | தினகரன் வாரமஞ்சரி

இராணுவத்துக்கு எதற்கு அதிக நிதி

நாடு வறுமையில் சிக்கித் தவிக்கையில் இராணுவத்துக்கு எதற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாட்டில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்தவா? இந்த நகர்வு என  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாராளுமன்றத்தில் (19) நடைபெற்ற வரவு – செலவுத் திட்டத்தின் 02ஆம் வாசிப்பு மீதான 05ஆம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து உரையாற்றிய அவர்,

“பொருட்களின் விலை உயர்வால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எதிர்காலத்தில் மேலும் உயரமென எதிர் வுகூறப்படுகின்றது. இதனை தடுப்பதற்கான வல்லமை இந்த அரசாங்கத்திடமில்லை.

இந்நிலையில் இராணுவத்துக்கு பலகோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

Comments