கொழும்பு கறுவாத்தோட்ட வியாபார நிலையத்தில் 'தீ' | தினகரன் வாரமஞ்சரி

கொழும்பு கறுவாத்தோட்ட வியாபார நிலையத்தில் 'தீ'

கொழும்பு, கறுவாத்தோட்டம் பகுதியில் சர்வதேச உணவு உற்பத்தி நிறுவனத்துக்கு சொந்தமான ஹோட்டல் ஒன்றில் வெடிப்புச் சம்பம் இடம்பெற்று தீ ஏற்பட்டுள்ளது. இத் தீ விபத்தில் உயிராபத்துக்கள் ஏற்படவில்லை.

இச் சம்பவம் நேற்று (20) காலை இடம்பெற்றுள்ளதாக கறுவாத்தோட்டம் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹோட்டலிலிருந்து வெளியான வாயு கசிவினால் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாமென சந்தேகிக்கப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இதன்போது ஏற்பட்டுள்ள தீயை கட்டப்படுத்துவதற்காக கொழும்பு மாநகர சபையின் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

அத்துடன், உயிரிழப்புகளோ, மரணங்களோ இதுவரையில் பதிவாக வில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த வெடிப்புச் சம்பவத்துக்கான காரணத்தை முறையாக உறுதிப்படுத்தவதற்காக கொழும்பு இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Comments