சுகாதார வழிகாட்டல் மீறல்; 393 பஸ் சாரதிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை | தினகரன் வாரமஞ்சரி

சுகாதார வழிகாட்டல் மீறல்; 393 பஸ் சாரதிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை

சாதாரண மற்றும் சொகுசு பஸ்களில் சுகாதார வழிகாட்டல்களை கடைப்பிடிக்கத் தவறியவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

மேல் மாகாணத்தில் 323பயணிகள் பஸ்கள் மற்றும் 70குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ்களின் சாரதிகளுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  மேல் மாகாணத்தில் வசிப்பவர்கள்  சுகாதார வழிகாட்டல்களை கடுமையாக பின்பற்றுகிறார்களா? என்பதை ஆராய்வதற்காக, மேல் மாகாணத்தில் நேற்றுமுன்தினம் பிற்பகல் 02மணி முதல் 04மணி வரை விசேட பொலிஸ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

453பொலிஸார், அதிகாரிகள் இச்சோதனை நடவடிக்கையில் பங்கேற்றனர். 

1,135பயணிகள் பஸ்கள், குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ்கள் மற்றும் 1,178கடைகளில் சோதனை நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டனர். 

 

Comments