நாடு இக்கட்டானதொரு சூழலில் இருக்கையில் தமது பொறுப்புகளை மறந்து எதிரணியினர் ஆர்ப்பாட்டம் | தினகரன் வாரமஞ்சரி

நாடு இக்கட்டானதொரு சூழலில் இருக்கையில் தமது பொறுப்புகளை மறந்து எதிரணியினர் ஆர்ப்பாட்டம்

இந்த நாடு இக்கட்டான நிலையில் இருக்கும் போது எதிரணி தமது பொறுப்புகளை மறந்து வீதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தி கொரோனா மற்றொரு அலையை உருவாக்க முயல்கின்றனர். சிறுவர்கள் மீண்டும் வெளியில் வந்து விளையாட ஆரம்பித்துள்ளனர்.அந்த நிலைலை மீண்டும் குழப்ப வேண்டமென கோருவதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மம்பில குறிப்பிட்டார். 

இது பொதுஜன பெரமுனவுக்கு மட்டும் சொந்தமான நாடல்ல. ஐக்கிய மக்கள் சக்திக்கு, ஜே.வி.பி மற்றும் தமிழ்த் தேசிய கூட்டணயென அனைவருக்கும் சொந்தமான நாடு. நாட்டுக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை.நாம் எம் போக்கில் இருப்போமென எவருக்கும் இருந்து விட முடியதென்றும் அமைச்சர் உதய கம்மம்பில தெரிவித்தார். 

வரவு செலவுத்திட்ட 02ஆம் வாசிப்பு மீதான 06ஆம் நாள் விவாதத்தில் நேற்று (20)உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிட்டதாவது, 

கடன் பட்டு செலவிடுவதென்பது எதிர்காலத்தில் செலவிட இருப்பதை இப்போதே செலவிடுவதாகும். இது எதிர்கால சந்ததியை அடகு வைத்து நாம் அனுபவிப்பது போன்றதாகும்.

1955இல் இருந்து கடன் பெற்று வந்தாலும் 1977முதல் டொலரில் கடன் பெற ஆரம்பித்தோம். சகல அரசுகளும் தமது ஆட்சிக்காலம் குறித்து சிந்தித்து கடன்பெற்றதோடு எதிர்காலம் குறித்து சிந்தித்து செயற்படவில்லை. 

சீனாவிலிருந்து தருவித்த தேசிய கொடியை ஆட்டித் தான் நாம் எமது தேசிய தினத்தை கொண்டாடுகிறோம்.வெசாக் வெளிச்ச கூடும் வெளிநாட்டில் இருந்து தான் வருகிறது. 

எமக்கு இந்த நெருக்கடி அனைத்தையும் இறக்குமதி செய்வதால் வந்ததே. இந்த நெருக்கடி கொவிட்டினால் உருவானதல்ல.வெடிக்க இருந்த குண்டு கொவிட்டினால் விரைவாக வெடித்தது. 2019 இல் கோட்டாபய ராஜபக்ஷக்கு பதிலாக சஜித் பிரேமதாச ஆட்சிக்கு வந்திருந்தால் இந்த நெருக்கடி வந்திருக்காதா? ஏற்றுமதி இறக்குமதிக்கிடையிலான இடைவெளியை சுற்றுலாப் பயணிகளின் வருகை, அந்தியச் செலாவணி என்பவற்றின் மூலம் அடைக்கப்பட்டது. ஆட்சியிலிருந்த எமது அரசு இந்த நெருக்கடி நிலைக்கு இன்று முகம்கொடுக்கிறது.பிரச்சினைகள் வரும் போது இணைந்து தீர்வு காண வேண்டும். ஆனால் நாம் மற்றவர்கள் மீது விரல் நீட்டிக் கொண்டிருக்கிறோம். 

லோரன்ஸ் செல்வநாயகம்,ஷம்ஸ் பாஹிம் 

 

Comments