வவுனியாவில் துப்பாக்கி தயாரிக்கும் நிலையம் பொலிஸாரால் முற்றுகை; நால்வர் கைது | தினகரன் வாரமஞ்சரி

வவுனியாவில் துப்பாக்கி தயாரிக்கும் நிலையம் பொலிஸாரால் முற்றுகை; நால்வர் கைது

வவுனியா – பறையனாளங்குளம், மெனிக்பார்ம் பகுதியில் துப்பாக்கி தயாரிக்கப்படும் நிலையமொன்றை சுற்றிவளைத்ததில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செட்டிக்குளம் பகுதியை சேர்ந்த 25, 28, 30மற்றும் 32வயதான நால்வரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கி தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் 02 இரும்புக் குழாய்கள், துப்பாக்கியின் ஒரு பகுதி மற்றும் துப்பாக்கி தயாரிக்க பயன்படுத்தப்படும் மரக்கட்டைகள் என்பனவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

Comments