இலங்கை தரச் சான்றிதழ் பெறும் முதலாவது டைல்ஸ் துணைக்கருவியாக வரலாற்றைப் பதிவு செய்த Swisstek | தினகரன் வாரமஞ்சரி

இலங்கை தரச் சான்றிதழ் பெறும் முதலாவது டைல்ஸ் துணைக்கருவியாக வரலாற்றைப் பதிவு செய்த Swisstek

1967ஆம் ஆண்டு முதல் உலகத் தரம் வாய்ந்த இறுதி தீர்வுகளை வழங்குவதில் புகழ்பெற்ற இலங்கை வர்த்தக நாமமான நிறுவுனம் குறித்த சந்தையில் முன்னணியான தனது ஐந்து உற்பத்திகளுக்கு இலங்கை தர நிர்ணய சான்றிதழைப் பெற்றுள்ளது.

இலங்கையின் தரத்தை நிர்ணயிக்கும் உயர்ந்த நிறுவனத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட ஐந்து உற்பத்திகளில் டைல்ஸ்களை ஒட்டுவதற்குப் பயன்படும் உற்பத்திகளான Super Tile Adhesive (Mortar), Super Plus Tile Adhesive (Mortar) & Ultra Grip Tile Adhesive (Mortar) ஆகியவையும், இரண்டு டைல்ஸ் கிரவுட் உற்பத்திகளான Super Polymer Tile Grout & Polymer Modified Tile Grout ஆகியவையும் உள்ளடங்குகின்றன.

இந்த சந்தைப் பிரிவில் இலங்கை தர நிர்ணயச் சான்றிதழைப் பெற்ற முதலாவது வர்த்தக நாமமாக Swisstek Ceylon PLC விளங்குவதுடன், தரம் தொடர்பில் நிறுவனம் கொண்டிருக்கும் உறுதிப்பாட்டை இது வெளிப்படுத்துகிறது. Swisstek தனது உற்பத்தி செயற்பாடுகளுக்காக 2015ஆம் ஆண்டு ISO 9001 சான்றிதழைப் பெற்றுக் கொண்டதுடன், அன்று முதல் தனது வசதிகளை மெருகேற்றுவதற்காக 170 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதியை முதலீடு செய்துள்ளது. இதன் பயனாக 2020/2021 நிதியாண்டில் கம்பனியின் உற்பத்தி 22% உயர்ந்துள்ளது.

இந்த மைல்கல் தொடர்பில் கருத்துத் தெரிவித்த நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.பி.எம்.ஜயசேகர குறிப்பிடுகையில், 'துறைசார் நிபுணர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடமிருந்து தொடர்ச்சியாக நாம் பெற்றுவரும் சிறந்த பின்னூட்டங்களை சாதகமான முறையில் முறைப்படுத்துவதற்கு இந்த சான்றிதழ் உதவும். முன்னால் எது இருக்கிறது என்பதைப் பொறுத்த வரையில், ஆராய்ச்சி மற்றும் முன்னேற்றம் மூலம் தரம் மற்றும் புத்தாக்கம் என்பவற்றின் ஊடாக முன்னணியாளராக சந்தையை ஒருங்கிணைக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவதே Swisstek இன் நோக்கமாகும். என்றார்.

Comments