வவுனியாவில் உருவாக்கப்பட்ட நீர் சுத்திகரிப்புத் திட்டத்தை மக்கள் பாவனைக்கு வழங்கியது LG | தினகரன் வாரமஞ்சரி

வவுனியாவில் உருவாக்கப்பட்ட நீர் சுத்திகரிப்புத் திட்டத்தை மக்கள் பாவனைக்கு வழங்கியது LG

கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர் மட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட 'LG கிராமத்தை கட்டியெழுப்பும் பிரமுகர்” நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் வவுனியா தரணிக்குளத்தில் உருவாக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு மற்றும் வடிகட்டுதல் திட்டம் அண்மையில் மக்கள் மயப்படுத்தப்பட்டது.

உலகப் புகழ்பெற்ற இலத்திரனியல் உற்பத்தி நிறுவனமான LG நிறுவனம், இலங்கையின் முன்னணி வணிகக் குழுமமான அபான்ஸ் மற்றும் Community Chest of Korea mikg;G Korea Friends of Hope International Sri Lanka mikg;G (KFHI) ஆகிய நிறுவனங்களின் கூட்டிணைவில் உருவாக்கப்பட்ட 'LG கிராமத்தை கட்டியெழுப்பும் பிரமுகர்” திட்டத்தின் மூலம் இலங்கை இளைஞர் யுவதிகளுக்கு அவர்களின்  கிராமங்களில் உள்ள தேவைகளை இனங்கண்டு அத்தேவைகளை பூர்த்திசெய்துகொள்ளக்கூடிய ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது.

அவ்வாறு வழங்கப்பட்ட வாய்ப்புகளின் மூலம் 2021ஆம் ஆண்டில் 4திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பூர்த்திசெய்யப்பட்டுள்ள நிலையில், பூர்த்தி செய்யப்பட்ட திட்டங்களில் முதலாவது திட்டத்தை மக்கள் மயப்படுத்தும் விழா 16.11.2021ஆம் திகதி வவுனியா தரணிகுளத்தில் இடம்பெற்றது. இத்திட்டமானது வவுனியா தரணிக்குளம் கிராமத்தில் வசிக்கும் 610குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் “உயிர் வாழ்வதற்கு ஒருதுளி ர்” என்ற கருத்தாக்க திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு மற்றும் வடிகட்டுதல் திட்டமாகும். இந்த பிரதேசத்தின் மக்கள் இதுவரைக் காலம் குடிர் தேவைக்காக பயன்படுத்திய கிணற்றை சுத்தம் செய்து சீரமைத்து அந்த கிணற்றிலிருந்த நீரை சுத்திகரிப்பு செய்வதற்கான குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. சுத்தமற்ற குடிர் இல்லாத காரணத்தினால் இதுவரை இந்த கிராமத்தில் பலர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்திட்டம் நிறைவடைந்து மக்களுக்கு சுத்தமான குடிர் கிடைத்துள்ளமையினால் கிராம மக்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

 

Comments