உடலுக்கு இரும்புச் சத்து ஏன் அவசியம்? | தினகரன் வாரமஞ்சரி

உடலுக்கு இரும்புச் சத்து ஏன் அவசியம்?

உடலின் பல்வேறு பகுதிகளுக்கும் ஒட்சிசனைக் கொண்டு செல்வதற்குத் தேவையான முக்கியமான பதார்த்தங்களை உற்பத்தி செய்வதற்கு அவசியமான போசனைக் கூறாக இரும்புச் சத்தைக் குறிப்பிடலாம். அதனால் தேவையான அளவு இரும்புச் சத்துக் கிடைக்குமானால் உடம்பின் பகுதிகளுக்கு ஒட்சிசனைக் கொண்டு செல்வதானது ஒழுங்காக அமையும். அதன்மூலம் உடலின் தொழிற்பாடுகளும் வளர்ச்சிகளும் தேவைக்கேற்ப சிறப்பாக நிகழும். 

இரும்புச் சத்து நாம் இலகுவாக நோய்த் தொற்றுக்களிலிருந்து பாதுகாப்புப் பெறவும், உடல் உள விருத்தி ஒழுங்கு முறைப்படி நிகழ்வதற்கும், விரைவில் சோர்வடைவதைத் தவிர்ப்பதற்கும் சோம்பல் தன்மையின்றி சுறுசுறுப்பாக செயற்படுவதற்கும் அவதானம் மற்றும் ஞாபக சக்தி போன்றவற்றை அதிகரித்துக் கொள்வதற்கும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் பல்வேறு விதமான உபாதைகளைக் குறைத்துக் கொள்வதற்கும் உதவுகிறது.  

இரும்புச்சத்து கருவாடு, இறைச்சி, மீன், கோழி போன்ற மாமிச உணவுகளிலிருந்தும் தானியங்கள், பயறு, கடும்பச்சை நிறக்கீரை போன்ற மரக்கறி உணவுகளிலிருந்தும் கிடைக்கப் பெறுகின்றது. இரும்புச்சத்தை அதிகரித்துக் கொள்வதற்கு விற்றமின் சி நிறைந்த மரக்கறி வகைகளையும் பழவகைகளையும் அதிகளவு உணவு வேளையில் சேர்த்துக் கொள்ளலாம். தேநீர், கோப்பி போன்ற பானங்கள் இரும்புச் சத்து உடலில் உறிஞ்சப்படுவதை தடுப்பதால் உணவு வேளையின்போது அல்லது உணவு உண்பதற்கு நெருங்கிய வேளையில் தேநீர், கோப்பி அருந்துவதைத் தவிர்க்கவும்.  

ஏ.எச். அப்துல் அலீம், 
தரம் 07சி,
அலிகார் தேசிய கல்லூரி, 
ஏறாவூர்.  

Comments