Huawei MateView GT 27 அங்குல வளைந்த உயர்-புதுப்பிப்பு உடனான Monitor விரைவில் இலங்கையில் அறிமுகம் | தினகரன் வாரமஞ்சரி

Huawei MateView GT 27 அங்குல வளைந்த உயர்-புதுப்பிப்பு உடனான Monitor விரைவில் இலங்கையில் அறிமுகம்

முன்னணி தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநரான Huawei,அதன் Huawei MateView GT 27அங்குல வளைந்த உயர்-புதுப்பிப்பு கணனித் திரையை (Huawei MateView GT 27-inch curved high-refresh monitor)விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இது இலங்கை நுகர்வோருக்கு 2K தெளிவுத்திறன் கேமிங் நிலைக்கான 165-Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் சினிமா வண்ணத்துடன் கூடிய பெரிய அளவிலான பார்வையிடல் அனுபவிக்கும் வாய்ப்பை வழங்குகிறது. 27அங்குல திரை மற்றும் 16.9எனும் பிரதான வகை திரை விகிதத்துடன் முழுமையாக அதில் ஆழ்ந்து போகும் வகையிலான சக்தியை நுகரச் செய்வதுடன் 1500Rஉயர் வளைவைக் கொண்ட வடிவமைப்பு உங்களை மேலும் ஆழந்த்து மூழ்கடிக்கும் வகையிலான பார்வையிடலின் புதிய உலகத்திற்குக் கொண்டு வருவதன் மூலம் உங்கள் பார்வையிடும் அனுபவத்தை முழுமைப்படுத்துகிறது.

Huawei MateView GT 27 அங்குல வளைந்த உயர்-புதுப்பிப்பு உடான திரையின் புத்துணர்ச்சியூட்டும் (refreshing) வேகமானது QHD 2560 X 1440 திரை மூலம் உங்கள் கண்களுக்கு முன்பாகவே படங்களை உயிர்ப்பிப்பதுடன்இ சிறந்த கேமிங் மற்றும் பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்குகிறது. இந்த monitorஒரு சினிமா தரத்தில் அமைந்த 90% DCI-P3 வண்ண எல்லைகளுடன் வருவதுடன்இ துல்லியமான வண்ண மீள் வெளிப்பாடு மற்றும் துடிப்பான மற்றும் உண்மையான காட்சியை வழங்குகிறது. மிகக் குறைந்த தாமத நிலை165Hz refresh வீதம் வழியாக காட்சிகளைத் தடையின்றியதாகவும் சீராகவும் காண்பிக்கும். அது மாத்திரமன்றி இது 8 bit வண்ண ஆழத்திற்கு ஒத்துழைப்பதுடன் இந்த 27அங்குல monitorஇனை 1.67மில்லியன் வண்ண காட்சிகளை வழங்க அனுமதிக்கிறது. இதன் மூலம் monitorஆனது மிகவும் துல்லியமான உண்மையான அனுபவ ரீதியான காட்சிகளை அனுமதிக்கிறது. பயனர்கள் விளையாட்டின் உள்ளேயே இருப்பதைப் போன்று அல்லது அவர்கள் பார்க்கும் திரைப்படம் அல்லது வீடியோவில் இருப்பதைப் போல உணர வைக்கிறது.

விளையாட்டாளர்கள் எப்போதுமே விளையாடும் போது சிறந்த அனுபவத்தை பெற விரும்புகிறார்கள் என்பதுடன் monitorஎன வரும்போது அதிக புதுப்பிப்பு விகிதம் (refresh rate), சிறந்த தன்மை ஆகியன முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன. Huawei MateView GT 27" மூலம் எதிரி எங்கே இருக்கிறார் என்று தேடிக்கொண்டு விளையாட்டாளர்கள் இருட்டில் இருக்க வேண்டியதில்லை. ‘The Dark Field Control’ எனும் அம்சமானது குறைந்த ஒளியுடனான காட்சிகளில் காட்சிப் பிரகாசத்தைச் சரிசெய்வதற்கு அனுமதிக்கிறது இதனால் அவர்கள் முதலில் எதிரியைக் இலகுவாகக் கண்டுபிடிக்க முடியும்.

Huawei MateView GT 27" ஆனது TÜV Rheinland இனால் சான்றளிக்கப்பட்ட குறைந்த நீல ஔ மற்றும் Flicker-Freeதிரை மூலம் நுகர்வோர் நீண்ட நேரத்திற்கு பார்வையிடும் அனுபவத்தை பெற முடிகிறது. இது உங்கள் கண்களை எப்போதும் பாதுகாக்கும் அதே வேளையில் பார்ப்பதற்கு அழகான ஒன்றைக் கொடுத்தவாறு இருக்கும். மடிகணனிகள் game consoles உள்ளிட்ட அன்றாட சாதனங்களை இணைப்பதற்காக HDMI, DisplayPort  மற்றும் USB Type-C  உள்ளிட்ட போர்ட்களின் முழுமையான தெரிவுகளுடன் இது வருகிறது. ஒரு HDMI 2.0 போர்ட் ஒரு DisplayPort 1.2  1.2மற்றும் ஒரு USB Type-C சார்ஜிங் போர்ட் இதில் உள்ளன இது அதே வகுப்பிலுள்ள ஏனைய தயாரிப்புகளில் கிடைக்காத அம்சங்களாகும். கவர்ச்சிகரமான Huawei கேமிங் 'silver frost ring' காரணமாக HUAWEI MateView GT 27" ஆனது உண்மையில் கூட்டத்திலிருந்த போதிலும் தனியான தெரிவதை உறுதிப்படுத்துகிறது. அதன் உயரத்தை 110மிமீ வரை ஏற்றி கோணத்தை 5பாகையில் முன்னோக்கியும் 20பாகையில் பின் நோக்கியும் சரி செய்யவும். அத்துடன் பின்னாலுள்ள சட்டகத்தை அகற்றுவதன் மூலம் முழுமையாக சுவரில் பூட்டுவதற்கு ஏற்றக்கூடியதாக மாற்றலாம்.

நீங்கள் ஒரு monitorமூலம் உங்கள் கேமிங் தொகுதியை முழுமைப்படுத்த விரும்பினால் HUAWEI MateView GT 27" ஆனது உங்களுக்கான சரியான தெரிவாகும். முதலில் 27அங்குல வளைந்த 2K திரையான பிரமிக்க வைக்கிறது. ஈர்க்கக்கூடிய அதனுடன் இணைந்தவாறான உயர் 165Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் சினிமா வண்ணங்கள் போன்றன உங்கள் கேமிங் அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவும் எல்லையற்ற வேடிக்கையையும் வழங்கும்.

Huawei MateView GT 27 அங்குல வளைந்த உயர்-புதுப்பிப்பு monitorஆனது இலங்கையில் அனைத்து Huawei அனுபவ மையங்கள்இ சிங்கர் காட்சியறைகள்இ அங்கீகரிக்கப்பட்ட மீள் விற்பனையாளர்கள் மற்றும் Daraz.lk மற்றும் Singer.lk போன்ற இணைய வர்த்தக தளங்களில் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

 

Comments