மீன் வளர்ப்புக்கான சேவைகளை ஒரே இடத்தில் வழங்கும் Taprobane Seafoods சிலாபத்தில் | தினகரன் வாரமஞ்சரி

மீன் வளர்ப்புக்கான சேவைகளை ஒரே இடத்தில் வழங்கும் Taprobane Seafoods சிலாபத்தில்

இறால் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள பண்ணையாளர்களுக்கு Taprobane Seafoods நிறுவனம் Aqua Services இனை அறிமுகப்படுத்தியது. இது அனைத்துவிதமான மீன் வளர்ப்புக்கள் தொடர்பான தயாரிப்புக்களையும் சேவைகளையும் ஒரே இடத்தில் வழங்கும் இந்நிறுவனம் சிலாபத்தில் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் அண்மையில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மிகப்பெரிய மற்றும் மிகவும் ஒருங்கிணைந்த கடலுணவு நிறுவனமான Taprobane Seafoods தமது புதிய மூலோபாய முன்னெடுப்புக்களை அறிவித்துள்ளது. நோயற்ற SPF Vannamei இறால் வகையில் முன்னோடியான Taprobane 2021ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தின் சட்டத்திற்கிணங்க நோயற்ற இறால்களை மட்டுமே அடைகாத்து வளர்க்க முடியும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அதன் first-mover தரத்தினைப் பயன்படுத்தி புதிய இறால் சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. ஹவாயில் இருந்து இனப்பெருக்கத்திற்காக குஞ்சுகளை கொண்டு வருகிறது. அவ்வாறு குஞ்சு பொரிக்க வைக்கும் ஒரே குஞ்சுப் பொரிப்பகம் நிறுவனத்திற்கு சொந்தமானதாகும். மேலும் அண்மையில் அரசாங்கத்தால் கிழக்கு கடற்கரை பிரதேசத்தில் குஞ்சுப் பொரிப்பகம் ஒன்றும் கையளிக்கப்பட்டது. இறால் வளர்ப்பில் கம்பனியை விரிவுபடுத்துவதானது இலங்கையில் அதிக வேலை வாய்ப்புகளை வழங்குகின்றது. அதன் மூலம் ஏற்றுமதி வருமானம் அதிகரிக்கப்பட்டு தேசிய பொருளாதாரத்தினை மேம்படுத்திக் கொள்ளவும் உதவுகிறது.

மேலும் கட்டுப்படுத்தப்பட்ட தீவிரப்படுத்தலின் மூலம் நிலையான மற்றும் சூழலுக்கு சாதகமான இறால் துறையை இயக்குவதற்கு Taprobane இன் வரைபடத்தைக் காட்சிப்படுத்துகிறது. இடைத் தரகர்களைக் குறைத்து விவசாயிகளுக்கு நேரடியாக கொடுப்பனவுகளைச் செய்வதன் மூலம் விவசாயிகளுக்கு அதிக அனுகூலங்கள் கிடைக்கப் பெறுகின்றன.

Comments