வலம்புரி கவிதா வட்ட பயணத்திற்கு தினகரன் என்றும் துணை நிற்கும் | தினகரன் வாரமஞ்சரி

வலம்புரி கவிதா வட்ட பயணத்திற்கு தினகரன் என்றும் துணை நிற்கும்

2013ஆம் ஆண்டு மீள் ஆரம்பிக்கப்பட்ட வலம்புரி கவிதா வட்டத்தின் முதலாவது கவியரங்கில் அதிதியாக கலந்து கொண்டேன். இன்று இந்த 75ஆவது கவியரங்கிலும் பிரதம அதிதியாக கலந்து கொள்வதையிட்டுமிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

பல அமைப்புகள் தொடர்ச்சியாக  நிகழ்ச்சிகளை நடத்த முடியாமல் இருக்கும் நிலையில் வகவம் தொடர்ச்சியாக நிகழ்ச்சிகளை நடாத்தி வருவது பாராட்டுக்குரியது.

"வலம்புரி கவிதா வட்டத்தின் 75ஆவது பவள விழா கவியரங்கு மறைந்த ஸ்தாபக செயலாளர் கவின் கமல் அரங்கில் கடந்த (18/12/2021) சனிக்கிழமை கொழும்புபழைய நகர மண்டபத்தில் நடைபெற்றபோதுபிரதம அதிதியாக கலந்துகொண்டதினகரன்/தினகரன் வாரமஞ்சரி பிரதம ஆசிரியர் செந்தில் வேலவர் இவ்வாறு தெரிவித்தார். வகவ சிரேஷ்ட ஸ்தாபகர் கலாபூஷணம் சத்திய எழுத்தாளர் எஸ். ஐ. நாகூர் கனி முன்னிலை வகித்தார். பிரதம அதிதி செந்தில் வேலவர் மேலும் உரையாற்றுகையில்,. " பல்வேறு தரப்பினருக்கும் கவிதை பாட மேடை அமைக்கும் வகவம் பாராட்டிற்குரியது. முதலாவது கவியரங்கில் உங்கள் குறிப்பு புத்தகத்தில் எழுதியதைப் போன்றுஎன்றும் தினகரன் உங்கள் பணிகளுக்கு துணை நிற்கும்.

தினகரன், தினகரன் வாரமஞ்சரி, வண்ண வானவில் சஞ்சிகை போன்றவற்றோடிணைந்துநாடளாவிய ரீதியில் கவிதைப் போட்டியொன்றினை  நடாத்த வலம்புரி கவிதா வட்டத்திற்கு அழைப்பு விடுக்கிறேன். அதற்கான பரிசுகளையும் தினகரனே ஏற்பாடு செய்து தரும் " என்று பலத்த கரகோஷத்தின்மத்தியில் தெரிவித்தார். மறைந்த ஸ்தாபக செயலாளர் கவின் கமாலை நினைவு கூர்ந்தும், அண்மையில் எம்மை விட்டும் பிரிந்த ஆளுமை செ. கணேஷலிங்கத்தை நினைவு கூர்ந்தும் மௌனப்பிரார்த்தனை நடத்தப்பட்டது. வகவத் தலைவர் நஜ்முல் ஹுசைன் தனது தலைமையுரையில், " டிசம்பர் மாதம் நடக்கும் இன்றைய வகவ கவியரங்கு கவின் கமல் அரங்காக நடப்பது மிகவும் பொருத்தமானதுவகவ வளர்ச்சியில் பெருந் தூணாய் நின்ற கவின் கமல் இர்ஷாத் கமால்தீன் இவ்வுலகை விட்டுப் பிரிந்தது டிசம்பர் மாதம்தான். டிசம்பர் 10ம் திகதி 2016ல். கவின் கமல் பிறந்தது 1949ஜூலை 16ஆம் திகதி. கொழும்பு2, அல் இக்பால் கல்லூரியிலும், சாஹிரா கல்லூரியிலும் கல்வி கற்றார். 1960ல் வானொலிநிலையத்தில் கால் வைத்தார்.

பின்னாட்களில் வானொலி நிலையம் சென்ற எனக்கும் அவருடன் நல்ல நட்பு ஏற்பட்டது. நண்பர் எம். எஸ். எம். ஜின்னாவின் முயற்சியினால் அன்று உருவாக்கப்பட்ட மதிவளர் மன்றம் என்ற அமைப்பின் தலைவராக கவின் கமலே நியமிக்கப்பட்டார். உண்மையில் அப்போது அவரது பெயர் ஏ. ஆர். எம். உமர்தீன் என்பதாகும். அவர் பிறகு தன் பெயரை இர்ஷாத் கமால்தீன் என்றும் புனைப்பெயரை கவின் கமல் என்றும் வரித்துக் கொண்டார். 1974ல் ஈழமணி பத்திரிகையில் "நந்தினி" எனும் சிறுகதை மூலம் எழுத்துலகில் கால் வைத்தார்.

ஓடக்குழல், வெள்ளையில் ஒரு புள்ளி, மழையில்லா மேகம், பசிக்குள் பசி, புலராப் பொழுதுகள்ஆகிய கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார். 1982ல் இலங்கை ரூபவாஹினியில் எழுத்தோவியராக இணைந்து பணியாற்றினார். கொழும்புநவகம்புர என்ற இடத்தில் வசித்த கவின் கமாலை வகவம் மீள் ஆரம்பம் செய்ய திட்டமிட்டவேளை செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீனும் நானும் அவரைச் சந்தித்து அவரது ஆலோசனைகளையும்வாழ்த்துகளையும் பெற்றோம். அந்த கவியரங்கில் அவருக்கு பொன்னாடை போர்த்தி  பொற்கிழிவழங்கி கௌரவித்தோம். அவர் நோய்வாய்ப்பட்டிருந்தவேளையெல்லாம் முர்ஷிதீனும் நானும் அவரை சுகம் விசாரிக்கத் தவறவில்லை. அவர் மரணிக்க இரு நாட்களுக்கு முன்பு அவரை வைத்தியசாலையில் சென்று சந்தித்தோம். கவின் கமல் தனிப்பட்ட நண்பராக இருந்த போதும்அவரை வகவ ஸ்தாபக செயலாளராக கணித்து அவருக்கான அந்த கௌரவத்தைநாங்கள் கொடுக்கத் தவறவில்லை. அவ்வாறு அவரோடுநாம் வைத்திருந்த உறவை எண்ணி இன்றும் நாங்கள் மகிழ்கிறோம்" என்று தெரிவித்தார்.

இலங்கை வானொலிமுஸ்லிம் சேவை முன்னாள் பணிப்பாளர் எம். இஸட். அஹ்மட் முனவ்வரும் கவின் கமால் குறித்து கவிதை பாடினார்.வகவ செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீனின் தலைமையில் 75ஆவது கவியரங்கம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. கவிஞர்கள் கலா விஸ்வநாதன், ரவூப் ஹஸீர், தமிழ்த் தென்றல் அலி அக்பர், இலங்கை பொன்மனச் செம்மல் எம். எஸ். தாஜ்மஹான், ஈழகணேஷ், எஸ். தனபாலன், காத்தான்குடி பௌஸ், , கஸ்ஸாலி அஷ்ஷம்ஸ், மஸீதா அன்சார், கல்முனை சுலக்ஷனா சுபசங்கர், மபாஹிர் மௌலானா, எம். எச். எம். நவ்ஸர், உணர்ச்சிப் பூக்கள் ஆதில், வாழைத்தோட்டம் எம். வஸீர், பர்ஹாத் சித்தீக், போருதொட்டரிஸ்மி, மலாய் கவி டிவாங்ஸோ ஆகியோர்கவிதை பாடினர். கலைவாதி கலீல், அன்பழகன். எம். எச். விக்கிரமசிங்க, கலாபூஷணம் முஹம்மத் அலி, பிறைக்கவி முஸம்மில், எம். ஐ. எம். முஸம்மில், பாணந்துறை ஏ. எல். எம். அஸ்வர், எஸ். ஏ. கரீம், வினோதினிஹேசானி, யாழ் அஸீம் போன்றோர்சபையை அலங்கரித்தனர். பொருளாளர்ஈழகணேஷ் வரவேற்புரையும் தேசிய அமைப்பாளர் எஸ். தனபாலன் நன்றியுரையும் வழங்கினர்.

(படங்கள் - நன்றி முஹம்மத் நஸார்)

Comments