OPPO வினால் Air Glass மற்றும் Spark Micro Projector அறிமுகம் | தினகரன் வாரமஞ்சரி

OPPO வினால் Air Glass மற்றும் Spark Micro Projector அறிமுகம்

OPPO INNO Day 2021நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் OPPO Air Glass இன் புதிய வடிவமைப்பை அறிமுகப்படுத்த OPPO நடவடிக்கை எடுத்துள்ளது. OPPO இன் தயாரிப்பான, Spark Micro Projector அதிநவீன Micro LED மற்றும் Diffraction Optical Waveguide Display ஆகியவற்றைக் கொண்ட இந்த aR (assisted Reality) கருவியை தொடுகை, குரல், தலை மற்றும் கை அசைவுகளால் கட்டுப்படுத்தக் கூடியது என்பதால் பயன்படுத்துபவர்கள் தங்களுக்குத் தேவையான தகவல்களை விரைவாகவும், எளிதாகவும் அணுக முடியும்.

“நாம் நீண்டகாலத்துக்கு முன்னர் Extended Reality (XR) தொழில்நுட்பத்தின் திறன்களை ஆராய்ச்சி செய்தோம். இதன் மூலம் தற்பொழுது வாடிக்கையாளர்கள் சௌகரியமாகக் கொள்வனவு செய்யக்கூடிய ஸ்மார்ட் கிளாஸ் உற்பத்தியை அறிமுகப்படுத்த முடிந்துள்ளது. OPPO Air Glass என்பது எமது தகவல்களைப் பெற்றுக் கொள்வது மற்றும் பயன்படுத்தும் முறையை முற்றிலும் மாற்றும் ஆற்றலைக் கொண்ட ஒரு தயாரிப்பு ஆகும். எமது கண் முன்னால் தெரியும் காட்சியை திரையில் கொண்டுவர முடியும் என்ற பிரதான செய்தியையே கூற விரும்புகின்றோம். OPPO Air Glass இன் ஊடாக நாம் பார்க்கும்போது உலகம் மாறுபட்டதாக இருக்கும்” என OPPO இன் உபதலைவரும், OPPO இன் ஆராய்ச்சி நிறுவனத்தினுடைய உப தலைவருமான லெவின் லியூ தெரிவித்தார்.

முன்னோடியான monocle waveguide வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. 30கிராம் எடையைக் கொண்ட OPPO Air Glass உலகத்திலேயே எடை குறைந்த monocle waveguide கருவியாகக் காணப்படுவதுடன், இதனை சாதாரண மூக்குக் கண்ணாடி போன்று அணியவும் முடியும்.

அத்துடன், OPPO இன் மற்றுமொரு தயாரிப்பான அதிநவீன Micro LED மற்றும் உயர்ந்த வெளிப்படைத் தன்மையுடன் கூடிய ஐந்து கண்ணாடி வில்லைகளைக் கொண்ட Spark Micro Projector உயர்ந்த மட்டத்தில் aR அனுபவத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு உதவியாகவிருக்கும்.

Comments