இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவரை விடுவிக்க கோரிக்கை | தினகரன் வாரமஞ்சரி

இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவரை விடுவிக்க கோரிக்கை

இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்கள் 56பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலைமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

இலங்கை சிறைகளிலிருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த 12மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொண்டமைக்காக மத்திய அரசுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டதுடன், கடந்த 2021டிசம்பர் 19மற்றும் 20ஆம் திகதிகளில் இலங்கை சிறைகளில் வாடிக் கொண்டிருக்கும் 56மீனவர்களை விடுவித்து, பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்துவர தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இலங்கை அரசின் காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான, அவர்களின் வாழ்வாதாரத்திற்கு இன்றியமையாத 75மீன்பிடிப் படகுகளையும் மீட்டெடுக்கவும் முதல்வர் கோரியுள்ளார்.

வரவிருக்கிற பொங்கல் திருநாளை முன்னிட்டு, இலங்கை சிறைகளில் வாடும் 56 மீனவர்களை விடுவித்து, அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் மீண்டும் இணைவதை உறுதி செய்திடத் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டுமென்றும், அதற்குரிய உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை இலங்கை அரசாங்கத்துடன் நடத்திடக் கேட்டுக்கொள்வதாகவும் தனது கடிதத்தில் முதல்வர் எழுதியுள்ளார்.

திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது

 

Comments