தங்கத்தின் கையிருப்பு பெறுமதியில் வீழ்ச்சி | தினகரன் வாரமஞ்சரி

தங்கத்தின் கையிருப்பு பெறுமதியில் வீழ்ச்சி

இலங்கையில் கையிருப்பு தங்கத்தின் பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இதன்படி, கடந்த டிசம்பர் மாத இறுதியில் தங்கத்தின் கையிருப்பு பெறுமதி 175. 4மில்லியன் டொலர் வரையில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் மாத இறுதியில், நாட்டின் தங்கத்தின் கையிருப்பின் பெறுமதி 382.2மில்லியன் டொலராக காணப்பட்டது. இதன்படி, 206.8மில்லியன் டொலர் பெறுமதியான தங்கம், மத்திய வங்கியினால் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தங்கத்தின் கையிருப்பு 54சதவீதத்தினால் வீழ்ச்சி அடைந்துள்ளதாக மத்திய வங்கியின் புதிய தகவல்களின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கம், கடந்த டிசம்பர் மாத இறுதியில் 3,137.6மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையில் அதிகரித்துள்ளது.

எவ்வாறாயினும், நவம்பர் மாத இறுதியில் இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கம் 1,588.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments