தோட்டப்பகுதி குடும்பங்களுக்கு 07 பேர்ச் காணி | தினகரன் வாரமஞ்சரி

தோட்டப்பகுதி குடும்பங்களுக்கு 07 பேர்ச் காணி

பெருந்தோட்டப் பகுதிகளிலுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஏழு பேர்ச் காணியை வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

நாவலப்பிட்டி பௌஹில் தோட்டத்தில் 100ஏக்கரை 100இளைஞர்களுக்கு கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக பெருந்தோட்ட பகுதி இளைஞர்களின் மாதாந்த வருமானத்தை அரசாங்கம் ரூ. 100,000வரை அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

இளைஞர்களுக்கு ஒரு ஏக்கர் காணியுடன் 300,000ரூபா மானியமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு மிளகாய், வெங்காயம், உருளைக்கிழங்கு, கோப்பி மற்றும் பழங்கள் உள்ளிட்ட பல பயிர்கள் உற்பத்தி செய்ய தேவையான உபகரணங்கள் அவர்களின் உற்பத்திகளை விற்பனை செய்வதற்கான சந்தையும் உருவாக்கப்படும்.

இலங்கையில் இவ்வாறானதொரு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படுவது இதுவே முதல் தடவை எனவும் அவர் தெரிவித்தார்.

லைன் குடியிருப்புகளில் வசிப்பவர்கள் அரசாங்கத்தினால் வழங்கப்படும் காணிகளில் முறையான வீடுகளை நிர்மாணிக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நாவலப்பிட்டி சுழற்சி நிருபர்

 

Comments