லசந்த விக்ரமதுங்கவின் 13ஆவது நினைவுதினம் | தினகரன் வாரமஞ்சரி

லசந்த விக்ரமதுங்கவின் 13ஆவது நினைவுதினம்

படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் அமரர் லசந்த விக்ரமதுங்கவின் 13வது ஆண்டு நினைவு தினம் மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு.ஊடக அமையம் என்பன இணைந்து ஏற்பாடு செய்த நினைவு தினம் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் மட்டு. ஊடக அமையத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு நகரில் மற்றும்  இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவாக மட்டக்களப்பில் அமைக்கப்பட்ட நினைவுத் தூபியில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து விக்ரமதுங்கவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி, நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு நினைவஞ்சலி நிகழ்வும் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்,மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புக்களின் ஒன்றியத்தலைவர் எஸ். சிவயோகநாதன், மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி தவிசாளர் ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

ஆரையம்பதி தினகரன் நிருபர்

 

Comments