சிறப்பாக நடைபெற்ற APIIT கல்வியகத்தின் பட்டமளிப்பு விழா-2021 | தினகரன் வாரமஞ்சரி

சிறப்பாக நடைபெற்ற APIIT கல்வியகத்தின் பட்டமளிப்பு விழா-2021

இலங்கையில் வெளிநாட்டு பட்டங்களை வழங்குகின்ற மிகப் பெரிய நிறுவகமாக திகழ்கின்ற, ஆசியா பசுபிக் இன்ஸ்டிடியூட் ஒஃப் இன்போமேஷன் டெக்னோலஜி ஸ்ரீலங்கா கல்வியகம் தனது வருடாந்த பட்டமளிப்பு விழாவை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் பிரதான மண்டபத்தில் 2021டிசம்பர் 21ஆம் திகதி நடாத்தியது.

இந்நிகழ்வில், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உப வேந்தரான சிரேஷ;ட பேராசிரியர் சுதந்த லியனகே பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். யுனிலீவர் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் தலைவரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான திருமதி. ஹஜர் அலாபைபி கௌரவ அதிதியாக கலந்து கொண்ட அதேவேளை, ஐக்கிய இராச்சியத்தின் ஸ்டெஃபோட்ஷயர் பல்கலைக்கழகத்தின் உபவேந்தரான பேராசிரியர் லிஸ் பார்னஸ் இணையவழி மெய்நிகர் முறைமையின் ஊடாக இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தார்.

இந்த பட்டமளிப்பு விழாவில் APIIT கல்வியகத்தின் 397பட்டதாரிகள் ஐக்கிய இராச்சியத்தின் ஸ்டெஃபோட்ஷயர் பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும் வியாபாரம், கணணி மற்றும் சட்டம் ஆகிய துறைகளிலான இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு  பட்டங்களை பெற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்வில், மென்பொருள் பொறியியல் துறையில் பொறியியல் இளமானி (சிறப்பு), கணணி வலையமைப்பு மற்றும் பாதுகாப்பு துறையில் பொறியியல் இளமானி (சிறப்பு), சர்வதேச வியாபார முகாமைத்துவ துறையில் பொறியியல் இளமானி (சிறப்பு), சட்டத் துறையில் எல்.எல்.பி. (சிறப்பு), வியாபார முதுமானி, கணணி விஞ்ஞானத் துறையில் (வியாபார கணணியியல்) வியாபார விஞ்ஞான முதுமானி மற்றும் சர்வதேச வியாபார சட்டத் துறையில் சட்ட முதுமானி ஆகிய பட்டச் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன. 

Comments