சாதனைகள் படைத்த பத்திரிகையாளர் எஸ்.எம். கார்மேகம் | தினகரன் வாரமஞ்சரி

சாதனைகள் படைத்த பத்திரிகையாளர் எஸ்.எம். கார்மேகம்

தமிழகம் திருச்சி துறையூரைப் பூர்வீகமாகவும்  மலையக கொட்டகலை கல்மதுரை தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் கொண்ட எனது தந்தை இலங்கையிலும் இந்தியாவிலும் பத்திரிகை சேவையில் ஆற்றிய பணிகள் அளவிட முடியாதவை. அவரது பத்திரிகை இலக்கிய பணிகள்பற்றி இலங்கையில் மட்டுமல்ல இந்தியாவிலும் துறைசார்ந்தவர்கள் நன்கறிவர்.

அவருக்குள் எப்பவும் ஒரு தேடல் இருந்து கொண்டே இருந்தது. அந்த தேடல்களின் விளைவே, அவரின் "ஈழத்தமிழர் எழுச்சி" மற்றும் "கண்டி மன்னர்கள்" போன்ற வரலாற்று பெட்டகங்கள்.

 அவர் ஒரு பெயர்பெற்ற பத்திரிகையாளராகவும், எழுத்தாளராகவும் குறிப்பாக, தான் பிறந்து வளர்ந்த மலையகத் தமிழ் மக்களின் மேம்பாட்டில் பெரிதும் ஆர்வம் கொண்டவராகவும் விளங்கினார். இன்றைய காலக்கட்டத்தில் அம்மக்கள் பிரஜா உரிமை பெற்றவர்களாக, நாட்டின் அரசியல் நீரோட்டத்தில் பங்குகொள்ளும் வாய்ப்புகளைப் பெற்றிருக்க, அந்த உரிமைக்காக பத்திரிகை மூலம் தனது கருத்துகளை மட்டுமன்றி, மலையக இளைஞர்களது உணர்வுகளையும் கருத்துக்களையும் தூண்டி மலையக மக்களிடையே ழுச்சிக்கு வித்திட்டவர்.

இந்திய வம்சாவளி மக்களையும் அவர்கள் குடியேற்றப்பட்ட இடங்களையும் குறிப்பிட பயன்படுத்தும்,  என்னால் அச்சில்கூட ஏற்ற தயங்கும் சொற்சொடர்கள், "மலையக மக்கள், மலைநாடு என்று உருமாற்றம் பெற்றபோது, வரிக்குவரி மலையகம், மலையகம் என்றெழுதி மக்கள் மனதிலே இச்சொல்லை ஆழமாக பதியச்செய்தது இவரின் எழுத்துக்களே. 1960களில் வீரகேசரி மலையக மக்களின் முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு ஆரம்பித்து வைத்த "தோட்ட மஞ்சரி" எனும் விசேட பகுதி இவரின் சமூகப்பணிக்கு அரியதோர் களமாயிற்று.

"கார்வண்ணன்" என்ற புனைப்பெயரில்,  உரிமைகள் ஏதும் அற்று முடங்கிக்கிடந்த மலையக இளைஞர் சமுதாயத்தை தமது அரிய கட்டுரைகள் மூலம் விழிப்புறச் செய்தார். அங்குள்ள படித்த இளைஞர்கள் மற்றும் கல்விமான்கள் அரசியல்வாதிகளை அணுகி அவர்களையும் அப்பகுதியில் பல்வேறு படைப்புகளை எழுதவைத்ததன் மூலம் ஏற்படுத்திய விழிப்புணர்ச்சியை மலையக சமூகம் மறக்காது. மலையக எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு சிறுகதைப் போட்டிகளை முன்னின்று நடத்தி இன்றைய மலையகத்தின் புகழ்பூத்த மூத்த எழுத்தாளர்களாக இனம்காணப்பட்டவர்கள் அனைவரும் இவரால் ஊக்கப்படுத்தப்பட்டவர்களே. தனது மலையக சமூகத்தின் மேம்பாட்டுக்காக பத்திரிகைத்துறையை பயன்படுத்துவது தனது அடிப்படைக் கடமைகளில் முதன்மையானது என்ற உணர்வுடனேயே அவர் செயற்பட்டார். அம்மக்களின் நலன்களுக்காக அரசு மட்டத்திலும் பல நிறைவான பணிகளை முன்னெடுத்தார்.

இன்றைக்கு மலையக மக்கள் படிப்பிலும் உயர் பதவிகளிலும் முன்னிலையில் இலங்கையின் முக்கியத்துவம் பெற்றிருக்க முன்னெடுத்தவர்களில் எனது தந்தையும் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறார். மலையக மக்களின் தனித்துவமான பெருந்தலைவராக விளங்கிய காலஞ்சென்ற சௌமியமூர்த்தி தொண்டமானுடன் நெருங்கிய உறவைப் பேணிணார். அவரின் அரசியல் ஆலோசகராகவும் எனது தந்தை விளங்கினார்.

•தினமணி நாளிதழில் முதல் பக்கத்தில் அரைப்பக்க அளவில் அவரது கட்டுரைகளே பெரும்பாலும் இடம்பிடித்துவிடும். சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் (ஆயனசயள ருnழைn ழக துழரசயெடளைவ) தலைவராகவும் அவர் இருந்தார்.

இலங்கை இந்திய அரசியல் விவகாரங்கள் பற்றி அதிகம் ஞானமுள்ள அதிலும் ஒரு பத்திரிகையாளராக அவர் இருந்ததால் இலங்கைவாழ் இந்தியர்களுக்கும் இந்தியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினருக்கும் அந்தந்த நாட்டில் கிடைக்கவேண்டிய உரிமைகளுக்காக குரல்கொடுக்க அவருக்கு இலகுவாக இருந்தது.

இலங்கையில் இந்திய வம்சாவளியினரான மலையக மண்ணின் தலைமகன் என்றழைக்கப்படும் அமரர். இரா. சிவலிங்கமும், அமரர் எஸ். திருச்செந்தூரனுடன் இணைந்து கோத்தகிரியில் அமைத்த மலையக மக்கள் மறுவாழ்வு மன்றத்தின்மேல் அவருக்கு ஒரு மாறாத பிடிப்பு இருந்தது. அடிக்கடி கோத்தகிரிக்கு பயணிப்பார். அந்த அமைப்பின் செயல்பாடு பற்றியும் தாயகம் திரும்பியோர் பற்றியும் தினமணி கதிரில் கட்டுரைகள் எழுதினார்.

இலங்கையிலிருந்து தாயகம் திரும்பும் மக்களுக்கு தமிழகத்தில் கிடைக்கக்கூடிய பல்வேறு வாய்ப்புகள் பற்றி அறியத்தருவார். தமிழகத்தின் கல்விக்கூடங்கள் கல்லூரிகளில் எவ்வாறு அனுமதி பெறுவது என்று மாணவர்களுக்கு வழிகாட்டும் வழிகாட்டியாக இருந்தார்.

அவர்களும் அநியாயமாக சிறைப்பிடிக்கப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர்.  மலையக மக்கள் மன்ற நிர்வாகிகளும் அதில் அடங்குவர். இப்படியான நிலையில் இப்பிரச்சினையை வெளிஉலகம் அறிந்துகொள்ளும் வகையில் பத்திரிகைகளில் செய்திகள் வெளிவர உரிய நடவடிக்கை எடுத்ததுடன் இந்த அடக்குமுறைக்கு எதிராக தங்களின் கடுமையான எதிர்ப்பையும் அரசுக்கு தெரிவிக்கவும் முன்னின்றவர்.

தமிழக மண்ணில் அரசு உதவிகள் பெறுவதற்கு சாதிச்சான்று அவசியமான ஒன்றாகும். அக்காலத்தில் தமிழகத்தில் தாயகம் திரும்பிய மக்களுக்கு சாதிச்சான்று பெறுவது மிகப்பெறும் பிரச்சினையாக இருந்துவந்த காலத்தில் அப்போது தமிழக அரசின் மறுவாழ்வுதுறை ஆணையராக செயலாற்றி வந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி கிருஸ்துதாஸ்காந்தி சந்தித்து, சாதிச்சான்று பெறுவதற்கு மக்கள்படும் இன்னல்களை விளக்கமாக எடுத்துக்கூறி, அவர் மூலமாக ஆணை பிறப்பித்து இப்பிரச்சினைக்கு ஒரு தீர்வை ஏற்படுத்தியதில் என் தந்தையின் பங்கு அளப்பறியது.

லலிதா ஜுவல்லர்ஸ் நிறுவனர் அமரர். கந்தசாமியும் எனது தந்தையும்  மாறாத நட்புறவு கொண்டவர்கள். கந்தசாமி அவர்கள் தலைவராகவும், எனது தந்தை பொதுச்செயலாளராகவும் இணைந்து செயல்பட்ட "இந்திய பரம்பரை இலங்கையர் பேரவை" என்ற அமைப்பு மலையக மற்றும் இந்திய வம்சாவளி மக்களின் உரிமைகளுக்காக மட்டுமே ஏற்படுத்தப்பட்டது. மிகக்குறுகிய காலத்திற்குள்ளாகவே, அடுத்தடுத்து பதவி உயர்வுகளுடன் டில்லி, பம்பாய், மதுரை என பணிமாற்றம் பெற்று இந்தியாவின் முக்கிய நகரங்களில் பணியில் அமர்த்தப்பட்டார். அவரது திறனையும், பண்பையும் அங்கீகரித்த தினமணி பத்திரிகை நிர்வாகம் அவரை டெல்லியிலுள்ள நாடாளுமன்றத்திற்கான சிறப்பு செய்தியாளராக நியமித்து கௌரவப்படுத்தியது. இலங்கை இந்தியப் பத்திரிகையாளர் நட்புறவுச் சங்கத்தின் தலைவராகவும் அவர் விளங்கினார்.

இலங்கையில் 23வருட பணியில் எட்டமுடியாத புகழையும் பெருமையையும் தமிழகத்தில் மிகக்குறுகிய காலத்திலேயே அடைந்த சாதனையாளர் இவர்.

முரளி கார்மேகம்

Comments