மனிதனின் கண்கள் | தினகரன் வாரமஞ்சரி

மனிதனின் கண்கள்

நம்மைச் சுற்றியுள்ள உலகத்தைப் பார்ப்பதற்கு நாம் நம் கண்களை எப்படி உபயோகிக்கின்றோம் என்பதைப் பற்றி எப்பொழுதாவது யோசித்திருப்போமா? நமது கண்கள் சிக்கல் நிறைந்த ஓர் உறுப்பாகும். கண் சாதாரணமாக ஒரு றம்புட்டான் பழத்தின் அளவுடையதாகும். கண்ணின் நிறப்பகுதி கதிராளி எனப்படும் கண் பல படையான அடுக்குகளைக் கொண்டுள்ளது. கதிராளியின் பின்னால் வில்லை இருக்கிறது. இது கண்ணின் மிக ஆழமான படையில் அதாவது விழித்திரையில் வெளிச்சத்தை விழச் செய்கிறது.  

ஒவ்வொரு விழித்திரையும் ஏறத்தாழ 127மில்லியன் கோல் கலங்களையும் கூம்புக் கலங்களையும் பெற்றிருக்கும். கோல் கலங்கள் கறுப்பு, வெள்ளை, சாம்பல் நிறங்களையும் பொருட்களின் வடிவத்தையும் இனம்கண்டு இருளில் பொருட்களைப் பார்ப்பதற்கு எங்களுக்கு உதவுகின்றன. ஒவ்வொரு கண்ணிலும் சுமார் 120மில்லியன் கலங்கள் உண்டு. கூம்புக் கலங்கள் நிறமாலையின் நிறங்களைக் காணும். இவை செயல்படுவதற்கு வெளிச்சம் அவசியம்.  

நமது கூம்புக் கலங்கள் சரியாக வேலை செய்யாத போதுதான் நிறக் குருட்டுத் தன்மை ஏற்படுகின்றது. இந்த நிலை ஏற்பட்டால் நிறங்களுக்கிடையில் உள்ள வித்தியாசத்தைப் பார்க்க முடியாது. விசேடமாக சிகப்பு, பச்சை. பெண் பிள்ளைகளை விட ஆண் பிள்ளைகளே அதிகளவில் நிறக் குருட்டுத்தன்மை உள்ளவர்களாக இருக்கின்றார்கள். நமது கண்கள் எல்லாவற்றையும் தலைகீழாகவே கண்டபோதும் காட்சியை சரியான பக்கத்திற்கு திருப்பும்படி நமது மூளை கண்களுக்கு கட்டளையிடுகிறது.  

ஏ.எச். அப்துல் அலீம், 
தரம் 08சி,  அலிகார் தேசிய கல்லூரி, 
ஏறாவூர். 

Comments