சிறப்பாக நடைபெற்ற வலம்புரி 76ஆவது வகவ கவியரங்கம் | தினகரன் வாரமஞ்சரி

சிறப்பாக நடைபெற்ற வலம்புரி 76ஆவது வகவ கவியரங்கம்

வலம்புரி கவிதா வட்டத்தின் (வகவம்) 76ஆவது  கவியரங்கம் பௌர்ணமியன்று கொழும்பு பழைய நகர மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது. கவியரங்கினை பத்திரிகையாளரும் கவிஞருமான கே. ஈஸ்வரலிங்கம் தலைமையேற்று சுவையாக நடாத்தினார். வகவ செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன் நிகழ்வினை நெறிப்படுத்தி தலைமையுரையும், வரவேற்புரையும் நிகழ்த்தினார். வகவ ஸ்தாபக குழு உறுப்பினர் சத்திய எழுத்தாளர் எஸ். ஐ. நாகூர்கனி முன்னிலை வகித்தார். பொருளாளர் ஈழகணேஷ் நன்றியுரை வழங்கினார். எம்மை விட்டு அண்மையில் மறைந்த முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் அரசரட்னம், மூத்த இலக்கியவாதி பன்னீர்செல்வம், கவிஞர் சிதம்பரப்பிள்ளை சிவகுமார், வகவ தேசிய அமைப்பாளர் எஸ். தனபாலனின் தங்கையின் கணவர் ஆர். எஸ். நடராஜா, கவிஞர் போருதொட்ட ரிஸ்மியின் தாயார் ஆகியோருக்கு மௌனப் பிரார்த்தனை இடம்பெற்றது. கே. ஈஸ்வரலிங்கம் தலைமை தாங்கி நடாத்திய கவியரங்கில் கவிஞர்கள்  ஈழத்து நூன் எம். ஏ. எம். நிலாம், கலா விஸ்வநாதன்,  எம். எஸ். தாஜ்மஹான், எம். பிரேம்ராஜ்,  வாழைத்தோட்டம் எம். வஸீர், ஏ. கே. இளங்கோ, உணர்ச்சிப் பூக்கள் ஆதில், கம்பளை ரா. சேகர் மலாய் கவி டிவாங்ஸோ,  கவிக்கமல் ரஸீம், கம்மல்துறை இக்பால் எம்.எச். எம். நௌஸர், போருதொட்ட ரிஸ்மி, எஹலியகொட முஸ்னி முர்ஷித், ஏ.எம்.எம். அனஸ், ஆகியோர் கவிதை பாடினர். எஸ். சரவணா, எம். நஸார்,  ஜொயேல் ஜோன்சன், ரி. என். இஸ்ரா. வை. சுசீலா போன்றோர் சபையை அலங்கரித்தனர். உணர்வு பூர்வமான கவிதைகளால் அமைந்த   கவியரங்கு மனநிறைவைத் தந்தது.

Comments