ஆஸ்கார் ரேஸில் சூர்யாவின் ஜெய்பீம்! | தினகரன் வாரமஞ்சரி

ஆஸ்கார் ரேஸில் சூர்யாவின் ஜெய்பீம்!

'சூரரைப் போற்று' படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நடிகர் சூர்யாவின் திரைப்பயணத்தில் மிக முக்கிய படமாக வெளிவந்தது 'ஜெய்பீம்' திரைப்படம். மலைக் கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களின் வாழ்க்கையை மையப்படுத்தி அவர்களுக்கு நேர்ந்த கொடுமைகள் மற்றும் அநீதிகள் கொண்ட உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்ட 'ஜெய்பீம்' திரைப்படத்தை இயக்குனர் T.J.ஞானவேல் இயக்கியுள்ளார். நடிகர் சூர்யா தனது 2D எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரித்து நடித்துள்ளார்.

சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ள 'ஜெய்பீம் படம்' முன்னதாக கோல்டன் க்ளோப் விருதுகளுக்கான பரிந்துரைப்பட்டியலுக்கு தேர்வானது. ஆனால் இறுதி  நியமனப்பட்டியலில் இடம் பெறாமல் போனது. இதனையடுத்து சிலதினங்களுக்கு முன், இயக்குனர் T.J. ஞானவேல்  'ஜெய்பீம்' திரைப்படத்தின் கதை கருவையும், நடைபெற்ற உண்மை சம்பவத்தையும், காட்சிகளையும் விவரிக்கும் விதமாக 'ஜெய்பீம்' படக்காட்சிகள் ஒளிபரப்பாகும் வகையிலான புதிய வீடியோ ஒன்றை ஒஸ்கார் தனது அதிகாரபூர்வ யூடியூப் சேனலில் வெளியிட்டு 'ஜெய்பீம்'  திரைப்படத்தை கௌரவித்துள்ளது. 

இந்நிலையில் தற்போது ஒஸ்கார் விருதுகளுக்கான பரிந்துரைப்பட்டியலுக்கான தேர்வில் இடம்பெற்றுள்ளது 'ஜெய்பீம்'. உலகின் பல மொழிகளிலும் இருந்து 276திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 94ஆவது ஒஸ்கார் விருதுகளின் பரிந்துரைக்கான பட்டியலில் 'ஜெய்பீம்' தேர்வாகியுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி 8-ஆம் திகதி இந்த படங்களில் இருந்து இறுதி பரிந்துரை பட்டியல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே  'ஜெய்பீம்' திரைப்படம் ஒஸ்கார் விருதுக்கான இறுதி நியமனப் பட்டியலில் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. காத்திருப்போம் .

 

Comments