அழியா ஓவியம் கலைஞர் ஸ்ரீ சங்கர் | தினகரன் வாரமஞ்சரி

அழியா ஓவியம் கலைஞர் ஸ்ரீ சங்கர்

தென்னகத் திரைவானில்

முதல் பூத்த நம்மவர்

அமரர் கலைஞரே ஸ்ரீ சங்கரே

சகலகலா வல்லவனாய்

சதா காலமும்

சாதனை படைத்தவனே

தங்கக் குணத்தோடு

தரணியில்

மிளிர்ந்த தனயனே !

எம்மைத் தவிக்க விட்டு

எங்கே சென்றாய் !

கலைக்காக காலம்

தோறும்

கடல் அலைபோல்

ஓயாது

உழைத்தவனே !

வாழ்வின் காலம் அழியும்

வகை வகையாக

கோலங்கள் அழியும்

விரிந்த ஞாலம் அழியும்!

ஆனால் சங்கரின்

பரந்த கலை ஞானம்

ஒரு போதும் அழிவதில்லை

மர இலைகள் உதிரும்

கல் மலைகள் சிதறும்

கடல் அலைகள் ஓயும்

இவரது கலைகள்

உதிராது - முதிரும்

சிதறாது - சிறக்கும்

ஓயாது - உயரும்

சங்கரின் கலை

சங்கின் நாதம்போல்

ஒலிக்கிறது

சங்கரின் கலை

மங்கள விளக்கு போல

ஒளிர்கிறது

சங்கரின் கலை

திங்கள்போல்

திகழ்கிறது

சங்கரின் கலையை

சமுதாயமே புகழ்கிறது !

மலர் மஞ்சம் போன்ற

வஞ்சம் இல்லா கலைஞர் ஸ்ரீ சங்கரின்

நெஞ்சத்தில் நாம்

அனைவரும்

அன்றும், இன்றும்,

என்றுமே தஞ்சம்!

அவரது ஆத்மா

சாந்தி பெறட்டும்!

Comments