இது உனக்கான நாள் | தினகரன் வாரமஞ்சரி

இது உனக்கான நாள்

என் வாழ்வில்

எனக்கு மிகவும் பிடித்த நாள்

என் காத்திருப்புக்குள்

நான் கலந்து போகும் நாள்

நான் வாஞ்சையுடன்

கொண்டாட நினைக்கும் நாள்

என் வார்த்தைகளில்

அடிக்கடி மொழியப் படும் நாள்..

அது தான்

என் தந்தையின் பிறந்த நாள்...

 

பதினாறு குழந்தைகளுக்குள்

பிறந்து வளர்ந்தாய் ஒருவராய்

உன் முயற்சிலேயே மொத்தமாய் பயின்று

அனைவரிலிருந்தும் தனித்துவமாய் தெரிந்த

உன்னதமானவரே நீ...

 

கஷ்டம் என்று வாய் திறந்து சொன்னதில்லை

உன் வலிகளையும் நீ காட்டிக் கொண்டதில்லை

கேட்டதற்கெல்லாம் பதிலளித்தாய்

நான் கேட்டதெல்லாம் வாங்கித் தந்தாய்..

 

என்னை ஒரு இளவரசியாகப் பார்த்தாய்

என் உயர்வுகளுக்காய்

முழு மூச்சாக நின்று போராடினாய்

 

என் காவலாளி அல்ல நீ

என் வரமே...

சத்தமாய் சொல்கிறேன் நான்

என் காவலாளி அல்ல நீ

என் உயிரில் கலந்த உத்தமர் நீ

ஷப்ரா இல்முத்தீன் அட்டாளைச்சேனை

என் ஆசையெல்லாம்

வேறு ஒன்றும் அல்ல

என்னைக் குழந்தையாக

அரவணைக்கும் உன்னை

என்றுமே என்னோடு நான்

அணைத்திட வேண்டும்...

எனக்காக நீ பட்ட சிரமங்களை

எல்லாம் மறக்குமளவுக்கு

உனக்காகவும் கொஞ்சம்

வாழ்ந்திட வேண்டும்

அவ்வளவே...

 

எப்போதுமே என் பிரார்த்தனைகள்

ஒன்றே ஒன்று தான்

இன்று போல் என்றும்

உன் நலம் வேண்டுகிறேன்...

 

புன்னகை மாறா

உன் வதனத்தைப் பாரத்தவாறே

நகர வேண்டும் என் ஒவ்வொரு நாட்களும்

இனிமையாக...

Comments