துரைவி 91 வது பிறந்த விழாவும், விருது வழங்கலும், நினைவுப் பேருரையும் | தினகரன் வாரமஞ்சரி

துரைவி 91 வது பிறந்த விழாவும், விருது வழங்கலும், நினைவுப் பேருரையும்

துரைவி 91 வது பிறந்த விழாவும், விருது வழங்கலும், நினைவுப் பேருரையும் எதிர்வரும் 27ஆம் திகதி ஞாயிறன்று மாலை 5.30 மணிக்கு ZOOM வழியாக நடைபெறவுள்ளது. படைப்பாளர் தெளிவத்தை ஜோசப் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில், வரவேற்புரையையும் நிகழ்ச்சித் தொகுப்பையும் மேமன்கவி நிகழ்த்த, நன்றியுரையை ராஜ்பிரசாத் துரை விஸ்வநாதன் நிகழ்த்துவார். 2021 ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பு நூலாக துரைவி விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள எம். ரிஷான் ஷெரிப்பின் மொழிபெயர்ப்பில் வெளிவந்த தக்ஷிலா ஸ்வர்ணமாலியின் 'அந்திம காலத்தின் இறுதி நேசம்' எனும் சிறுகதைத் தொகுப்பு நூலுக்கும்,. 2021 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆய்வு நூலாக துரைவி விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள அக்கரைப்பற்றை சேர்ந்த எம்.அப்துல் றஸாக் (தென்கிழக்கு பல்கலைக்கழகம்) எழுதிய 'கிழக்கிலங்கை தமிழ் இலக்கிய திறனாய்வு வளர்ச்சி' எனும் நூலுக்கும் விருதுகள் வழங்கப்படும். துரைவி 91 வது பிறந்த தின நினைவுப் பேருரையை 'மலையக தமிழ் மக்களின் வாழ்வும்; இலக்கியமும்-துரைவியை முன்வைத்து' எனும் தலைப்பில் ஆய்வாளரும், விமர்சகருமான எஸ். வன்னியகுலம் நிகழ்த்துவார்.

Comments