புதிய உலகம் | தினகரன் வாரமஞ்சரி

புதிய உலகம்

பிஞ்சுகளை பிய்த் தெரியும்

பெரிய மனிதர் கூட்டமே

குஞ்சுகளைசிறகில் மூடும்

கோழிகளைக் கொஞ்சம் பாரும்

 

மானக் கண்ணில் குத்தும்

மாந்தர் கூட்டமே கேளும்

ஊணக் கண்ணுக் கெல்லாம்

இருளும் ஔியும் ஒன்றே

 

பொறாமை தீயில் எரியும்

படித்தார் உலகே பாரும்

சிறுமை எண்ணம் கொண்டார்

சிறப்ப தில்லை காண்பீர்

 

சந்தேகத் தனலில் வேகும்

சாத்தானிய இனமே கேளும்

சந்தோசம் என்பது மட்டும்

சந்ததிக்குமில்லை சொட்டும்

 

சுட்டும் விரலால் எம்மை

சுட்டிடும் இனமே கேளும்

மட்டில்லா உம் குறைகள்

மறைப்ப தேனோ மண்ணில்

 

விளையும் பயிரை எரிக்கும்

வீணர் இனமே பாரும்

இளையவர் கையில் தானே

இனியொரு உலகம் மலரும்

 

வரக்காமுறையூர் ராசிக்

Comments