மகத்துவம் மிக்க மகா சிவராத்திரி! | தினகரன் வாரமஞ்சரி

மகத்துவம் மிக்க மகா சிவராத்திரி!

தியும் அந்தமும் இல்லாத பராபரவஸ்து ஜோதி ஸ்ரூபத்திலிருந்து லிங்கமாக வெளிவந்து அருள்புரிந்த நன்நாளே சிவராத்திரி. உலகெல்லாம் நிறைந்து விளங்குகின்ற எம்பெருமான் சிவனுக்குரிய விரதங்களுள் சிறப்புமிக்கதில் ஒன்றான சிவராத்திரி விரதம் வல்லமையும்

மகத்துவமும் நிறைந்து அடியார்களுக்கு மன அமைதியை தருவதால்  மகா சிவராத்திரி என்று அழைக்கப்படுகின்றது.

சைவ சமத்தவர்களால் பெரிதும் விரும்பி அனுஷ்டிக்கப்படும் இந்த சிவராத்திரி விரதம் ஆண்டுதோறும் மாசி- மாத கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும். இந்ந நாளின்

சிறப்புகள் குறித்து கருட புராணம்,  கந்த புராணம்,  பத்ம புராணம் அக்னி புராணம்  உள்ளிட்ட பல்வேறு நூல்களிலும்  குறிப்பிடப்பட்டுள்ளது. நித்திய சிவராத்திரி மாத சிவராத்திரி, பட்ச சிவராத்திரி,  யோக சிவராத்திரி,  மகா சிவராத்திரி என 5வகைப்படும்.

மகா சிவராத்திரி.  - மாக சிவராத்திரியே தற்போது மகா சிவராத்திரி என அழைக்கப்படுகிறது. மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி நாளே மகா சிவராத்திரியாகும். இந்த சிவராத்திரிக்கு 'வருஷ சிவராத்திரி'

என்ற பெயரும் உண்டு.  யோக சிவராத்திரி - இது 4வகைப்படும். திங்கட் கிழமை அன்று சூரிய உதயம் முதல் இரவு முழுவதும்  60நாளிகையும் அமாவாசையாக இருந்தால் அன்று யோக சிவராத்தியாகும். திங்களன்று சூரிய அஸ்தமனம் முதல் இரவு 4சாமம் (12மணி நேரம்) தேய்பிறை

சதுர்தசி இருந்தால் அதுவும் யோக சிவராத்திரியாகும். திங்களன்று இரவின் நான்காம் சாமத்தில் அமாவாசை அரை நாளிகை (12நிமிடங்கள்) இருந்தால் அதுவும் யோக சிவராத்திரியாகும்.

இந்த 4யோக சிவராத்திரிகளில் ஒரு யோக சிவராத்திரி தினத்தில் விரதம் இருந்தால்  மூன்று கோடி சிவராத்திரி விரதம் இருப்பதற்கான பலன்  கிடைக்கு மென ஐதீக வரலாறுகள் சொல்கின்றன.

நித்திய சிவராத்திரி - வருடத்தின் பன்னிரண்டு மாதங்களிலும் வரும் தேய்பிறை வளர்பிறைககளின் சதுர்த்தசி திதியில் இடம்பெறும் 24நாட்களும் நித்திய சிவராத்திரியாகும்.

பட்ச சிவராத்திரி – தை மாத தேய்பிறை பிரதமையன அன்று  தொடங்கி பதின்மூன்று நாட்கள் தினந்தோறும் முறைப்படி ஒரு வேளை உணவு உண்டு 14ஆம் நாளான சதுர்தசி அன்று முறைப்படி விரதம் இருப்பதே பட்ச சிவராத்திரியாகும்.

பிரம்மாவும்  விஷ்ணுவும் அடிமுடி தேடிய விடயம் கூறப்படுகின்றது. ஒரு காலத்திலே படைத்தல் தொழில் செய்யும் பிரம்மாவும் காத்தல் தொழில் செய்யும் விஷ்ணுவும் தாமே பெரியவர் என்று கூறி ண்டையிட்டுக் கொண்டார்களாம். அப்போது பரம்பொருளான சிவபெருமானின் முன்னே சோதிப் பிளம்பாகத் தோன்றி 'இந்த சோதியின் அடியையோ அல்லது முடியையோ யார் காண்கிறார்களோ

அவர்களே பெரியவர்' என்று அசரீரியாக சொல்லி வைத்தாராம்.. அதைக் கேட்டவுடனே பிரம்மா தான்  முடியைக் கண்டு வருவதாகச் சொல்லி அன்னப் பட்சி உருவெடுத்து வானத்தில்   பறந்து சென்றார். விஷ்ணு தான் அடியைக் கண்டு வருவதாகக் கூறி பன்றி உருவம் எடுத்துக் கொண்டு நிலத்தைக் குடைந்து கொண்டு கீழே சென்றார். இருவராலும்  எதையும் காண முடியவில்லை. ஆனாவ் பிரம்மாவோ தான்  முடியைக் கண்டதாகப் பொய்ச் சாட்சி சொல்ல வைத்தார். இவ்வாறு பொய்கூறிய காரணத்தால் பிரம்மாவுக்கு கோயிலே இல்லாமல் போனது.

இதனால் தாழம்பூ பூசைக்கு எடுக்கப்படுவதில்லை. மகா விஷ்ணு தன்னால்  முடியாது என்று பணிந்து வணங்கினார். அவர் உண்மையை பேசியக் காரணத்தால்  விஷ்ணுவுக்குக்  கோயில் இருக்கின்றது. இவ்வாறு இறைவன் சோதியாக நின்ற நாளே சிவராத்திரியாகும்.

இந்த விரதத்தை மேற்கொண்ட உமாதேவியார் வேதாகம முறைப்படி 4சாமம் சிவனை அர்ச்சித்து வணங்கி' பிராண நாயனரே! நான் தங்களை பூசித்த இந்த ராத்திரியே சிவராத்திரியாகும். இன்று பூசித்தவர்கள  பரமானந்த முத்திப்பேற்றினை பெற வேண்டும். அதற்கு நீங்கள் திருவுள்ளம் இரங்க  வேண்டும் என்று பணிவோடு கேட்டுக் கொண்டார் இவ்வாறு உமையால் கேட்டவுடனே சிவனும் இப்படியே ஆகட்டும் என்றார். அன்று முதல் சைவ சமயத்தவர்கள் இந்த விரதத்தை அனுஷ்டித்து வருவதாக புராணங்கள் கூறுகின்றன. 

யதுஷா ரவித்தியாகராஜா

Comments