முருகைக்கல் பாறைகளைப் பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவம் | தினகரன் வாரமஞ்சரி

முருகைக்கல் பாறைகளைப் பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவம்

உலகில் மிகவும் பயன்தரக்கூடிய சூழல் தொகுதியாக முருகைக் கற்பாறைகள் உள்ளன. அதனால் நாம் முருகைக் கற்பாறைகளைப் பாதுகாக்க வேண்டும்.  

முருகைக் கல் என்றால் என்ன? 

கடற்கரைக்குச் சென்று மணலை எடுத்துப் பரிசோதித்துப் பாருங்கள். அதில் 'சிலிக்கா' எனும் மணலுக்குப் புறம்பாக வெண்ணிறமான சின்னஞ்சிறு துண்டுகளைக் கொண்ட மணலைக் காணலாம். இந்த வெண்ணிறத் துண்டுகள்தான் முருகைக் கற்கள்.  

சிறுசிறு துண்டுகளாக உடைவதற்கு முன்பாக இவை பெரிய அளவிலான துண்டுகளாக உடைந்து கரை ஒதுங்குவதும் உண்டு. முருகைக் கற்கள் மிகச் சிறிய விலங்குக் கூட்டத்தின் புற கடின கூடுகள் ஒன்றுசேர்ந்து உருவானவையாகும். மிகவும் சிறியதொரு வகை விலங்கு 'பொலிப்' (Polyp) என அழைக்கப்படும்.  

பொலிப் எனும் இந்த உயிரி மிகவும் மிருதுவான ஊடு புகவிடும் விலங்காகும். அது தனது உடலை மூடி ஒரு புற கடின கூடுகளை உருவாக்கிக் கொள்ளக்கூடியது. இது முள்ளந்தண்டு அற்றவையானதால் அதனை ஒரு முள்ளந்தண்டிலி எனவும் அழைக்கப்படுகிறது. ஆயிரக்கணக்கான இவ்விலங்குகள் சேர்ந்து உருவாக்கும் புற கடின கூடுகளை நாம் கோறல் கற்பாறை என்கிறோம். 'பொலிப்' அங்கி முருகைக் கல்லின் கோப்பை வடிவிலான கடினமான கூட்டில் வாழ்கின்றது.  

முருகைக் கற்பாறையின் முக்கியத்துவம் 

பல்வேறு மீன் இனங்கள், இறால், சிங்கி இறால் உட்பட பல்வேறுபட்ட நீர்வாழ் உயிரினங்களுக்கு உணவு மற்றும் வாழ்விடத்தை வழங்கும் முக்கிய தொகுதியாக தொழிற்படுகின்றது.  

மீன் உட்பட பல்வேறு அங்கிகளின் இனப்பெருக்கத்துக்குப் பொருத்தமான சூழலாக செயற்படுகின்றது.  

இது கடலரிப்பைத் தடுக்கும் ஒரு இயற்கைக் காரணியாகும்.  

இயற்கை அழகைத் தருகின்றது. அதனால் சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூடியதாக இருக்கிறது.  

மண்ணின் அமிலத்தன்மையைக் குறைக்கும் ஒரு இரசாயனப் பொருளாகப் பயன்படுகிறது.  

லியுக்கேமியா மற்றும் புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் பொரும்பாலான மருந்துகளைப் பெற உதவும் மூலப் பொருளாகவும் பயன்படுகின்றது.  

கட்டிடங்களுக்குத் தேவையான சுண்ணாம்பு பெறப்படுகின்றன.  

முருகைக் கற்பாறை சேதமடைவதற்கான காரணிகள் 

மனித செயற்பாடுகளினால் முருகைக் கற்பாறைகளுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் மிக அதிகமாக உள்ளது.  

டிஸ்கோ வலையை பயன்படுத்துதல் 

கடலடிப் பரப்பை வாரிக்கொண்டு செல்லக்கூடிய வலைகளைப் பயன்படுத்துதல். 

மொக்ஸி வலை பயன்படுத்துதல். (அலங்கார மீன்களைப் பிடிப்பதற்காக இந்த வலையைக் கொண்டு முருகைக் கற்பாறையை மூடுவது)  வெடிப் பொருட்களைப் பயன்படுத்தி மீன் பிடித்தல்.  

சுண்ணாம்பு பெறுவதற்காக முருகைக் கற்பாறையை உடைத்தல்.  

நினைவுச் சின்னமாக வைத்துக்கொள்ள முருகைக் கற்பாறையை உடைத்தெடுத்தல்.   நீரை மாசடையச் செய்தல்.  

நங்கூரமிடுதல்  

மனிதனுக்கு வாழ்வாதாரம் பெற்றுக் கொள்ளவும் இயற்கையைப் பாதுகாக்கவும் பல்லுயிர்த்தன்மைக்கு உயிரூட்டவும் உதவும் இந்த இயற்கையின் கொடையை பாதுகாக்காவிட்டால் மனித சமூகம் பாதிப்படைய நேரிடும். 

ஏ.எச். அப்துல் அலீம், 
தரம் 08சி, அலிகார் தேசியக்கல்லூரி, 
ஏறாவூர்.  

Comments