காதல் கடிதம் | தினகரன் வாரமஞ்சரி

காதல் கடிதம்

மரத்தில் எழுதிய
காலம் போய்
காதல்
தாளில் 
தவழுதடி இன்று
 
உயிர் ஒதுக்கி
அவை செய்த அர்ப்பணிப்பு
மறவோம்
எம் காதல் கடிதங்களைப் போல்
இம் மரங்களையும் பேணுவோம்
வாடி
 
உன் கூந்தல் போல்
நிழல் வடிவில்
உயிர் கூடிக்கிடந்தது
நினைவோ
 
உன் அப்பன் 
துரத்தி வரவே
மரம் ஏறி மறைந்தது
எப்படி மறந்தாய்
 
பின் உன் பெற்றோர்
சம்மதத்துடனே
திருமணமும் நடந்தேறி
ஆசீர்வாதம் பெற
பல வருடம் முதலேயே
எமை ஆசீர்வதித்தது
இம் மரமன்றோ;
காற்றில் உதிர்த்த இலைகள்!
 
பின் இராத்திரி நேரம்
அன்று கீச்சிட்டு
ஆக்கினை குடுக்காமல்
துறவி போல்
தியானித்துக் கிடந்தது
இம் மரத்தின் முப்பாட்டன்
செதுக்கிக் கொடுத்த
கட்டில் அன்றோ,
முதல் இரவையும் மறந்தாயோ
போடி
 
பின் கர்ப்பிணித்தாயாக
நீ ஆசை மாங்காய் கேட்கையிலே
வார்த்தை உதிர்த்து முடிக்கும் முதலே
குறை மாதத்தில் கனியை
எடுத்துக் கொடுத்தது மறந்தால்
நன்றோ
நன்றிகெட்டவளே
 
இன்று எம் மகள்
மரம் ஏறிப் பழக,
நாம் பயம் அன்றி 
அதைப் பார்த்துக்கிடக்க
இந்தக் கிளைகள் 
அவளை ஏந்தும் என்ற 
தைரியம் 
காரணம் அன்றோ
 
ஆனால்
எம் அன்பு மரத்தின்
மகள் எங்கே? 
 
ரதிதேவி, மானிப்பாய்

Comments