கலா விஸ்வநாதன் எனும் கலைஞன் | தினகரன் வாரமஞ்சரி

கலா விஸ்வநாதன் எனும் கலைஞன்

கவிப்பேரரசு கண்ணதாசன் மன்றத்தை 1980களில் கொழும்பில் ஆரம்பித்து பல கவியரங்குக​ைள    நடாத்தி கொழும்பு கலைஞர்களுடன் இணைந்து,கலையார்வத்தை ஏற்படுத்தினார். அத்தோடு மலையக    கவிஞர் சங்கம் ஆரம்பித்து ஒன்றுகூடலை ஏற்படுத்த முனைந்தவர்.  

 'கவின்' 'ஜனநேசன்', 'மட்டக்குளியான்' ஆகிய புனைப்பெயர்களில் பத்திரிகைகளுக்கு கவிதைகளை    எழுதியுள்ளதோடு, 2003ஆம் ஆண்டில் வீரகேசரியில் தொடராக எழுதிய 'மனித ஏணிகள்'    எனும் மலையக காவியத்தையும் மேலும் சில கவிதை​ைளயும் தொகுத்து 'மனித ஏணிகள்' என்னும் கவிதை    நூலை மட்டக்குளி காக்கைத்தீவு வரவேற்பு மண்டபத்தில் வெளியிட்டவர்.  

 மட்டக்குளியில் எழுந்தருளி அருள்பாலித்துவரும் அருள்மிகு ஸ்ரீ சாமுண்டீஸ்வரி தேவியை    போற்றித் துதித்து ஸ்ரீ சாமுண்டீஸ்வரி கவசம் எழுதிய கவிஞரை மட்டக்குளி அறநெறி மன்றம்    'கவிமாமணி' எனும் சிறப்புப் பட்டத்தை வழங்கி கௌரவித்ததுள்ளது.  

 மேலும் பல சமூக கை​ைல இலக்கிய அமைப்புக்கள் 'கவிவள்ளல்', 'கவிச்சுடர்', 'கலாசோதி'    ஆகிய சிறப்பு கௌரவங்ளை வழங்கியுள்ளன.  

தலைநகரில் இயங்கிவந்த கவிதை இயக்கமான 'வலம்புரி கவிதா'(வகவம்) வட்டத்தில் இணைந்து இன்று வரை பல பணிகள் புரிந்துவரும் கலா விஸ்வநாதன் வலம்புரி கவிதா வட்டத்தின் பிரசார    செயலாளர், பொதுச் செயலாளர், தலைவர், தேசிய அமைப்பாளர் எனப் பல பதவிகளை    அலங்கரித்து இன்றும் வலம்புரி கவிதா வட்டத்தின் வளர்ச்சிக்கு தனது பங்களிப்பினை   வழங்கிவருகின்றார்.  

 2013ல் மீண்டும் பனரமைக்கப்பட்ட வலம்புரி கவிதா வட்டம் தனது ஆண்டு விழாவை    2015ல் கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடாத்தியபோது கவிஞர் கலா விஸ்வநாதன் வகவத்தின்    வளர்ச்சிக்கு ஆற்றிய பணிகளுக்காக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.  

 கொழும்பு இலக்கிய வட்டம் எனும் ஓர் அமைப்பை அமைத்து கலை இலக்கிய சந்திப்புகள் ஏற்பாடு    செய்ததுடன் விமர்சன கருத்தரங்குளை, அஞ்சலி நிகழ்வுகள் நடாத்தியதுடன் மேல்மாகாண    சாகித்திய விழா நடைபெறுவதற்கும் உந்து சக்தியாக விளங்கியவர்.  

 மூன்று ஆண்டுகளாக 'கவின்' எனும் சஞ்சிகையை இது ஒரு சமூகத்தின் சஞ்சிகை என்ற  தொனிப்பொருளில் தொடர்ச்சியாக வெளியிட்டு கலை இலக்கிய சமூக பிரமுகர்கள் பலரையும்    கவின் சஞ்சிகையில் பதிவு செய்து வந்த கலா விஸ்வநாதன் காலத்தின் கண்ணாடியாக விளங்கக் கூடிய    வீச்சுள்ள பல கவிதைகளையும் படைத்துவருகின்றார். இவரது ஆயிரக்கணக்கான கவிதைகள் பத்திரிகைகளிலும்,    சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன.  

 'குன்றம்' எனும் சஞ்சிகையின் ஆசிரியராகவும் 'முகம்'இ 'மலைக்கண்ணாடி' ஆகிய   சஞ்சிகையின் பொறுப்பாசிரியராகவும் இருந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

பத்து ஆண்டு காலமாக சித்தர் வழிபாட்டில் ஈடுபட்டுவரும் பிறவிக் கவிஞர் கலா விஸ்வநாதன்    எழுதிய 'சித்தர்அமிர்தம்' என்னும் காவியம் தற்போது தமிழகத்தில்    நல்வழிப்பதிப்பகத்தில் அச்சில் உள்ளது.  

Comments