சுற்றுலாத் துறையின் வளர்ச்சி கருதி இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்குமிடையே உடன்படிக்கை கைச்சாத்து | தினகரன் வாரமஞ்சரி

சுற்றுலாத் துறையின் வளர்ச்சி கருதி இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்குமிடையே உடன்படிக்கை கைச்சாத்து

சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் சேவைத் துறையில் புத்தாக்க அபிவிருத்தி மற்றும் களக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்கான இரு தரப்பு ஒத்துழைப்பு உடன்படிக்கையொன்றில் திறன்கள் அபிவிருத்தி,தொழில் கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கல் இராஜாங்க அமைச்சின் செயலாளர் திருமதி தீபா லியனகேயும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹோலியும் அண்மையில் கைச்சாத்திட்டுள்ளனர்.

இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்குமிடையே உத்தியோகபூர்வ இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 75ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. திறன்கள் அபிவிருத்தி, தொழில் கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கல் இராஜாங்க அமைச்சுடன் இணைந்து அவுஸ்திரேலிய உதவித் திட்டம்  இலங்கையில் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையின் ஸ்திரதன்மைக்கும் அபிவிருத்திக்கும் தேவையான திறன்களை விருத்தி செய்யும் நோக்கத்துடன் 2020 - 2030திறன் அபிவிருத்தி தசாப்தத்துக்கு இணையாக இத் திட்டத்தினை முன்னெடுக்கின்றது.

சுற்றுலாத்துறைக்கு ஏற்புடைய கொள்கையாக்கம், ஆண் பெண் சமத்துவம், ஆற்றல் அபிவிருத்தி, பொருளாதார வளர்ச்சி போன்ற விடயங்கள் தொடர்பாக துறைசார்ந்த சகலருடனும் பரந்துபட்ட ஒத்துழைப்புடன் பணியாற்றுவதற்கு இத்திட்டம் பெரும் பங்காற்றுவதாக சிறப்பு மருத்துவ நிபுணர்  சீதா அரம்பேபொல தெரிவித்தார்.

Comments