சீனாவின் 2.5 பில்லியன் டொலர் கடனுதவி பேச்சுகளில் தாமதம் | Page 2 | தினகரன் வாரமஞ்சரி

சீனாவின் 2.5 பில்லியன் டொலர் கடனுதவி பேச்சுகளில் தாமதம்

இலங்கை தனது கடன் மறுசீரமைப்பு விடயம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதற்கு முயற்சிப்பது சீனாவுக்கு மகிழ்ச்சி தரும் விடயமல்ல

பிரதிபலன் கருதாது இலங்கைக்கு தொடர்ந்தும் உதவிகள் வழங்குவதில் இந்தியா உறுதிப்பாடு

இலங்கை தற்போது பாரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றது. வருடக் கணக்கில் நிலவிய கொவிட் தொற்று காரணமாக நாடு பல மாதங்களாக முடக்கப்பட்டுக் கிடந்ததால் சுற்றுலாத்துறை உட்பட அனைத்துத் தொழில் துறைகளும் வீழ்ச்சியடைந்தன. அந்நிய செலாவணி

வருமானம் பாதிக்கப்பட்டது. நாட்டில் டொலருக்குப் பற்றாக்குறை ஏற்பட்டது.

இதனால் இலங்கையில் பொருளாதார நெருக்கடி தலைதூக்கியது. எரிபொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டதுடன் பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் அயல்நாடான இந்தியா இலங்கைக்கு வழங்கிய உதவிகள் ஏராளம். நிதியுதவிகள், எரிபொருள் உதவிகள் என்றெல்லாம் இந்தியா பலவிதமான உதவிகளை இலங்கைக்கு வாரி வழங்கியுள்ளது. இலங்கையின் நெருக்கடியை நன்கு புரிந்து கொண்டபடி இந்தியா உடனடியாகவே இந்த உதவிகளை வழங்கியுள்ளது. குறைந்த வட்டி வீதத்தில் இந்தியா வழங்கிய இலகுமுறை கடன் காரணமாக இலங்கை மக்களின் சிரமங்களை நன்கு குறைக்க முடிந்தது.

இலங்கையின் எரிபொருள் பற்றாக்குறையைக் குறைப்பதில் இந்தியா தற்போதும் வழங்கிக் கொண்டிருக்கின்ற உதவிகள் அநே கம் ஆகும்.

அதேநேரம் சீனா இலங்கைக்கு வழங்கிய நிதியுதவியின் வட்டி வீதம் அதிகமாகும். சீனாவின் கடன் உதவியானது அதனை மீளச்செலுத்துவதில் இலங்கைக்கு பெரும் சுமைகளை ஏற்படுத்துமென்று இலங்கையின் பொருளாதார நிபுணர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர். சீனாவிடம் கடனுதவி பெறுவதில் இலங்கையர்கள் பலருக்கு உடன்பாடு கிடையாதென்பதுவும் குறிப்பிடத்தக்கது.

உலகில் பல நாடுகளுக்கு சீனா கடன் வழங்கியுள்ளது. பாகிஸ்தான் மற்றும் ஆபிரிக்காவிலுள்ள சில நாடுகளுக்கும் சீனா கடனுதவி வழங்கியுள்ளது. ஆனால் அந்த கடன்களை மீளச்செலுத்துவதில் அந்நாடுகள் சிரமத்தை எதிர்கொள்கின்றன. 'சீனாவின் கடன்பொறி' என்றுதான் இந்த கடனுதவியை சர்வதேச பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். கடனை மீளச்செலுத்த முடியாத பட்சத்தில் சீனாவின் நிபந்தனைகளுக்கு அந்நாடுகள் இணங்க வேண்டி வரலாம் என்பதுதான் அங்குள்ள பிரச்சினையாகும்.

இந்த நிலையில், இலங்கையானது தற்போதைய பொருளாதார நெருக்கடி வேளையில் தனது கடன்களை மறுசீரமைப்பு செய்ய வேண்டிய நிலைமையில் உள்ளது. கடன் மறுசீரமைப்பு விடயம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதற்குஇலங்கை முடிவு செய்துள்ளது. இந்த முயற்சியில் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு சாதகமான நிலைப்பாட்டை எடுக்குமென்ற நம்பிக்ைக தோன்றியுள்ளது.

ஆனால் மறுபுறத்தில் கடன்களை மறுசீரமைப்பு செய்வதில் இலங்கை மேற்கொள்ளும் முயற்சியானது சீனாவுக்கு மகிழ்ச்சியைத் தரவில்லையென ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன. இலங்கைக்கு நேரடியாக உதவி வழங்குவதில் இந்தியா பிரதிபலன் எதையுமே எதிர்பார்க்காமல் செயற்படுகின்றதென்பது வெளிப்படையானது. ஆனால் சீனாவின் குறிக்ேகாள் வேறானது. சீனா எவ்வேளையிலும் தனது பொருளாதார நலன்களை கவனத்தில் கொண்டே மற்றைய நாடுகளுக்கு கடனுதவிகளை வழங்குவது வழக்கம்.

தற்போதைய வேளையில், இலங்கை தனது கடன்களை மறுசீரமைப்பு செய்வதில் மேற்கொள்ளும் முயற்சியினால் இலங்கைக்கான 2.5 பில்லியன் டொலர் சீன உதவி தொடர்பான பேச்சுவார்த்தைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தாமதம் குறித்து இலங்கைக்கான சீனத் தூதுவரும் தகவல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு நிதியுதவியைப் பெற்றுக் கொடுப்பதற்கு இந்தியா முயற்சி மேற்கொண்டு வருகையில், மறுபுறத்தில் சீனா தனது உதவியையே தாமதப்படுத்துகின்றதென்பது பொருளாதார நிபுணர்களால் உற்றுநோக்கப்படுகின்றதென்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும். இதுவே இந்திய உதவிக்கும், சீனாவின் உதவிக்கும் இடையேயான வேறுபாடு ஆகுமென அந்நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்தியா எவ்வேளையிலும் இலங்கையை தனது சகோதர தேசமாகவே நோக்குகின்றதென்பது இதன் மூலம் தெளிவாகின்றது. இலங்கையை கடன்பொறியில் சிக்க வைக்க வேண்டுமென்ற உள்நோக்கம் எதுவுமே இல்லாமல், அயல்நாட்டின் நெருக்கடி வேளையில் உதவி புரிய வேண்டுமென்ற நன்னோக்கத்தை மட்டுமே இந்தியா கொண்டிருக்கின்றதென்பது இத்தருணத்தில் புரிகின்றது.

இவ்வாறான வேளையிலேயே இந்தியாவின் மற்றொரு உதவியும் சில தினங்களுக்கு முன்னர் இலங்கைக்குக் கிடைக்கவிருக்கின்ற செய்தி வெளியாகியுள்ளது. நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு, எரிபொருள் இறக்குமதி செய்வதற்காக மேலும் 50 கோடி ​ெடாலர் கடன் வழங்க இந்தியா ஒப்புக் கொண்டுள்ளதென்பதே அச்செய்தியாகும்.

இலங்கைக்கு உடனடியாக 400 கோடி ​ெடாலர் தேவைப்படுகிறது. இதையடுத்து, நிதியமைச்சர் அலி சப்ரி உள்ளிட்ட குழுவினர் உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் உதவியை நாடினர். அமெரிக்கா சென்றிருந்த அமைச்சர் அலி சப்ரி, சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இதுதவிர, சில நாடுகளிடமும் நிதியுதவி கோரியுள்ளார்.

இலங்கையின் கோரிக்கையை ஏற்று, இந்திய அரசு ஏற்கெனவே 190 கோடி ​ெடாலர் கடன் வழங்கியது. இதை எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருளாக அனுப்பி வைத்தது. குறிப்பாக 40 ஆயிரம் தொன் அரிசியை வழங்கியது.

இந்நிலையில், எரிபொருள் இறக்குமதி செய்வதற்காக மேலும் 50 கோடி ​ெடாலர் கடன் வழங்க இந்தியா ஒப்புக் கொண்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அதேசமயம் மேலும் 100 கோடி ​ெடாலர் கடன் வேண்டும் என்ற இலங்கையின் கோரிக்கையை இந்தியா பரிசீலிக்கும் என்று இலங்கை அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments