நிலைபேற்றியல் முயற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள அலியான்ஸ் லங்கா | Page 2 | தினகரன் வாரமஞ்சரி

நிலைபேற்றியல் முயற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள அலியான்ஸ் லங்கா

உலகளாவிய காப்புறுதி வர்த்தகநாமமான அலியான்ஸ் லங்கா, நிலைபேற்றியல் கொண்ட பொருளாதாரங்கள் மற்றும் சமூகங்களைத் தோற்றுவித்து, வளர்ப்பதற்கு உதவும் நிறுவனத்தின் உலகளாவிய மற்றும் உள்ளூர் குறிக்கோளை நிலைநாட்டும் வகையில் தனது 2ஆவது பாரிய நிலைபேற்றியல் முயற்சியை மஹியங்கனை பிரதேசத்தில் வெற்றிகரமாக பூர்த்திசெய்துள்ளது.

இத்திட்டமானது, மஹியங்கனையிலுள்ள பிபிலை / மஹியங்கனை / சேனானிகம ஆரம்பப் பாடசாலையில் ஒளி மின்னழுத்த சூரியமின் உற்பத்தித் தொகுதியை பொருத்துதல் மற்றும் தொழிற்படுத்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது. இப்போது பாடசாலை தனது தினசரி எரிசக்தித் தேவைகளை புதுப்பிக்கத்தக்க எரிசக்திமூலத்திலிருந்து பெறமுடியும் என்பதை உறுதிப்படுத்தும் அதேநேரத்தில், உற்பத்தி செய்யப்படும் தேவைக்கதிகமான மின்சாரத்தை தேசிய மின் விநியோகத்திற்கும் பங்களிக்கிறது.

அலியான்ஸ் லங்கா நிறுவனத்தின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி மங்களபண்டார, “உள்ளேயும், வெளியேயும் எமது அனைத்து முயற்சிகளிலும் நிலைபேற்றியலை உள்வாங்குவதற்கும் மேம்படுத்துவதற்கும் அர்ப்பணிப்புடன் உள்ளதாக கூறினார். மஹியங்கனை நகரிலிருந்து சுமார் 15 கிலோமீற்றர் தொலைவிலுள்ள சேனானிகம ஆரம்பப்பாடசாலைக்கு இந்த புதிய சூரியசக்தி மின்னுற்பத்தி தொகுதியை ஆரம்பித்து வைப்பதன் மூலம், அப்பாடசாலை தற்போது புதுப்பிக்கத்தக்க மின்சக்தி மூலத்தை அனுபவிப்பது மட்டுமன்றி, புதிய சூரிய மின்னுற்பத்தித் தொகுதி மூலமாக தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்யப்படுகின்ற மின்சாரத்தை தேசிய மின்விநியோக கட்டமைப்புக்கு வழங்கி அதற்கு உதவவும் முடியும். நிலைபேற்றியல் கொண்ட எரிசக்தி என்பது காலத்தின் முக்கிய தேவையாக இருப்பதால், படிம எரிபொருட்களிலிருந்து விலகி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை நோக்கிய உலகளாவிய மாற்றத்திற்கு உதவ நாம் முயல்வதால், எதிர்காலத்தில் இதுபோன்ற பல திட்டங்களுக்கு உதவுவதன் மூலம் நிறுவனப் பொறுப்பைத் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்று, நிறைவேற்ற விரும்புகிறோம்,” என மேலும் குறிப்பிட்டார்.

 

 


Comments