23% வருமான வளர்ச்சியைக் காண்பித்த அமானா தகாஃபுல் காப்புறுதி | தினகரன் வாரமஞ்சரி

23% வருமான வளர்ச்சியைக் காண்பித்த அமானா தகாஃபுல் காப்புறுதி

இலங்கையில் இயங்கும் ஒரு முழுமையான காப்புறுதி நிறுவனமான அமானா தகாஃபுல் பிஎல்சி (ATI), 2021 ஆம் ஆண்டில் கொவிட் தொற்று உள்ளிட்ட ஏனைய பொருளாதார அழுத்தங்களை துணிச்சலாக எதிர்கொண்டிருந்தது. அந்த வகையில், நிறுவனம் அதன் குழும விற்பனை வருமானத்தில் 23% வளர்ச்சி மற்றும் ஏனைய வருமானத்திற்கு முன்பாக குழும நிகர இலாபத்தில் 13% உயர்ச்சியுடன் 2021 ஆம் ஆண்டை நிறைவு செய்துள்ளது.

குழுமத்தின் கடந்த வருட செயற்பாடுகள் தொடர்பில், அமானா தகாஃபுல் காப்புறுதி முகாமைத்துவ பணிப்பாளர் ஹஸன் காசிம் கருத்துத் தெரிவிக்கையில், "எந்தவொரு காப்புறுதி வர்த்தகநாமத்திற்கும் கடின நிலையிலிருந்தான மீளெழுச்சி அவசியமாகும். அந்த வகையில், அமானா தகாஃபுல் காப்புறுதியும் (Amana Takaful Insurance - ATI) இதற்கு விதிவிலக்கல்ல. ATI யின் 2021 ஆம் ஆண்டின் ஒட்டுமொத்த வருடாந்த செயற்றிறன் ஆனது, நான்காவது காலாண்டில் சாதனை இலக்கத்தின் மூலம் பலப்படுத்தப்பட்டுள்ளது. எமது சமீபத்திய எதிர்பார்ப்பு அறிக்கைகளின் அடிப்படையில், ஏனைய வருமானத்திற்கு முன்பாக ரூ. 250.34 மில்லியனாக வருடாந்த குழும நிகர இலாபமானது 13% அதிகரிப்புடன் ATI உறுதிசெய்துள்ளது.

கடந்த வருடத்தின் 4ஆவது காலாண்டில் மாத்திரம், நிறுவனம் அதன் (காலாண்டு) ஏனைய வருமானத்திற்கு முன்பாக குழும நிகர இலாபத்தில் 132% வளர்ச்சியின் மூலம் அதனை இரட்டிப்பாக்கியுள்ளது. சமீபத்திய 4ஆவது காலாண்டு முடிவுகளின் அடிப்படையில், முதலாவது காலாண்டு தொடக்கம் 3ஆவது காலாண்டு வரை, அது சாதகமான போக்குடன் தொடர்ச்சியாக அதனை பேணி வந்துள்ளமையை General Insurance பிரிவிலும் காண முடிகின்றது.

Comments