SSL க்கு இரட்டை விருதுகள் வழங்கிக் கௌரவிப்பு | தினகரன் வாரமஞ்சரி

SSL க்கு இரட்டை விருதுகள் வழங்கிக் கௌரவிப்பு

முதலீட்டு சபையில் பதிவு செய்யப்பட்ட லங்கா ஸ்பெஷல் ஸ்டீல் லிமிடெட் (லங்கா SSL), அதன் உயர் தரம் வாய்ந்த கம்பிகள் விநியோகத்துக்காக ஒப்பற்ற கீர்த்தி நாமத்தைக் கொண்டுள்ளதுடன், E B Creasy& Company PLC நிறுவனத்தின் துணை நிறுவனமாக திகழ்கின்றது. அண்மையில் இடம்பெற்ற தேசிய வியாபார சிறப்பு விருதுகள் 2021 நிகழ்வில் பாரியளவு பிரிவில் இரண்டாமிடத்தைப் பெற்றுக் கொண்டது. இந்நிகழ்வை இலங்கை தேசிய வர்த்தக சம்மேளனம் (NCCSL) ஏற்பாடு செய்திருந்தது.

ஏனைய - உற்பத்தி பிரிவில் லங்கா SSL வெற்றியாளராகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தது. இதற்கு முன்னதாக, 2018 ஆம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்விலும் இந்நிறுவனம் ஒட்டுமொத்த பாரிய பிரிவில் மூன்றாமிடத்தையும், ஏனைய - உற்பத்திப் பிரிவில் தங்க விருதையும் சுவீகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த காலங்களில், உறுதி செய்யப்பட்ட விஞ்ஞானபூர்வ ஆய்வுகள் மற்றும் நிபுணத்துவ வழிகாட்டல்களினூடாக பரந்தளவு கல்வனைஸ் செய்யப்பட்ட இரும்புக் கம்பிகள் உற்பத்தியில் லங்கா SSL தன்னை ஈடுபடுத்தியுள்ளதுடன், எல்லை முட்கம்பிகள் பிரிவில் மாபெரும் உற்பத்தியாளராகவும், சந்தை முன்னோடியாகவும் திகழ்கின்றது. சந்தையின் 70 சதவீதமான பங்கை தன்வசம் கொண்டுள்ளது. நாட்டில் காணப்படும் ஒரே கல்வனைஸ் உருக்கிரும்பு கம்பிகள் உற்பத்தியாளர் எனும் பெருமையையும் லங்கா SSL தன்னகத்தே கொண்டுள்ளது.

லங்கா SSL பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான பிரவீன் டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில், “எமது ஊழியர்களின் அர்ப்பணிப்பான செயற்பாடுகள் மற்றும் எம்மீது தொடர்ந்தும் நம்பிக்கை கொண்டு கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடும் வாடிக்கையாளர்கள் மற்றும் விநியோகத்தர்களின் பங்களிப்பின்றி எம்மால் இந்த சாதனையை எய்தியிருக்க முடியாது.” என்றார்.

 

Comments