ஈத் முபாரக்!! | தினகரன் வாரமஞ்சரி

ஈத் முபாரக்!!

கவியரசி எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா பஸ்யால

மாதமொன்று நோன்பிருந்து மகிழ்ந்தே

ஏழைஎளியவர் பணக்காரர் பேதமின்றியே

கொண்டாடி மகிழ வந்தது வாழ்வில் வசந்தம் தந்தது

இறைவன் தந்த இப்பெருநாள்!

புத்தாடை அணிந்து மகிழ்ந்திட

தித்திக்கும் உணவுகள் பரிமாற

உள்ளமெல்லாம் பூவாய் மணக்க

தித்திக்கும் இன்பத் திருநாளாய்

இதயம் மணக்கும் இப்பெருநாள்!

வானில் புதுக் கீற்றாய்

புது மாதமாய் வளர்பிறையாய்

ஷவ்வாலின் தலைப் பிறையாய்

கீழ்வானில் புதுப் பொலிவாய்

வந்துதித்தது இப் பெருநாள்!

கொண்டாடுவோம் கொண்டாடுவோம் இனிதாக

இல்லமெங்கும் இன்பம் பொங்கிட

உறவுகள் யாவும் கூடிமகிழ

அகமெங்கும் சந்தோஷம் நிறைக்க

அருளாகக் கிடைத்தது இப்பெருநாள்!

ஈத் முபாரக்! ஈத் முபாரக்!!

Comments