பிரதமர் பதவியிலிருந்து விலகிவிட வேண்டாம் | தினகரன் வாரமஞ்சரி

பிரதமர் பதவியிலிருந்து விலகிவிட வேண்டாம்

 சர்வ மதத் தலைவர்கள் பிரதமரிடம் கோரிக்கை

 

பிரதமர் பதவியில் தாங்களே தொடர்ந்தும் நிலைத்திருக்க வேண்டுமென்றும் தங்களால் மட்டுமே நாட்டில் நிலவுகின்ற பொருளாதாரப் பிரச்சினைக்கு தீர்வைக் காண முடியுமென்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்த சர்வமதத் தலைவர் கள் தெரிவித்துள்ளனர்.

இந்துமத விவகாரங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளர் கலாநிதி இராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா மற்றும் முஸ்லிம் சமய விவகாரங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளர் கலாநிதி ஹசன் மௌலானா உள்ளிட்ட சர்வமதத் தலைவர்கள் நேற்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகைளில் சந்தித்த போதே இவ்வாறு தெரிவித்தனர்.

நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு இந்த அரசாங்கம் மட்டுமே காரணமல்ல. கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் பல தூர நோக்கற்ற செயற்பாடுகளும் பிரதான காரணமாக இருந்தன. அத்துடன் கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ரஷ்ய உக்ரைன் யுத்தம் போன்ற காரணங்களினால் முழு உலகுமே இன்று பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியிருக்கிறது. இலங்கையைப் பொறுத்தவரை சற்று மோசமான நிலை காணப்பட்டாலும் அதனை மீட்டெடுத்து நாட்டை மீண்டும் வழமைக்கு கொண்டுவரும் திறமை இன்றைய அரசாங்கத்திடமும் குறிப்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடமே இருக்கிறதென்றும் சர்வமதத் தலைவர்கள் பிரதமரிடம் நேரடியாக தெரிவித்துள்ளனர். எக்காரணம் கொண்டும் எவர் என்ன கூறினாலும் பதவியிலிருந்து விலக வேண்டாமென்றும் சர்வமத தலைவர்கள் பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

Comments