JDC பிரிண்டிங் டெக்னொலொஜிஸ் அனுசரணையில் 2022 அச்சு மற்றும் வர்த்தக கண்காட்சி | தினகரன் வாரமஞ்சரி

JDC பிரிண்டிங் டெக்னொலொஜிஸ் அனுசரணையில் 2022 அச்சு மற்றும் வர்த்தக கண்காட்சி

இலங்கை அச்சு நிறுவனமும் அச்சீட்டாளர்களின் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்த இலங்கை அச்சு மற்றும் வர்த்தக கண்காட்சி அண்மையில் பி.எம்.ஐ.சி.எச் இல் நடைபெற்றது. JDC பிரிண்டிங் டெக்னொலொஜிஸ் நிறுவனம் வர்த்தக கண்காட்சியின் பிரதம அனுசரணை வழங்கியிருந்தது. 150 இற்கும் மேற்பட்ட கண்காட்சிக் கூடங்களுடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பாவனையிலுள்ள சகலவகையான நவீன உற்பத்திகள், பொறித் தொகுதிகள் மற்றும் சாதனங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

1979 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட JDC பிரிண்டிங் டெக்னொலொஜிஸ் இலங்கையின் அச்சுமற்றும் பொதியிடல் கைத்தொழிலுக்கு தேவையான பொறித்தொகுதிகளையும் கருவிகளையும் வழங்கும் முன்னணி வழங்குநராகும். அதிநவீன Konica Minolta Accorio Label AL 230 டிஜிட்டல் லேபல் அச்சு இயந்திரங்கள் வர்த்தக அச்சுத் துறைக்கு பெரும் உந்துசக்தியாகும்.

Konica Minolta Accorio Label AL 230 லேபல் அச்சு இயந்திரத்தின் முதலாவது இயந்திரம் மீரிகம Sanmik பிரிண்டிங் அன்ட் பக்கேஜிங் நிறுவனத்தினால் இந்த கண்காட்சியின் போது கொள்வனவு செய்யப்பட்டது. ஒரு நிமிடத்துக்கு 76 அடி அச்சு வேகத்துடன் அச்சு வேலைகளுக்கிடையே குறைந்தபட்ச நேரத்தில், அச்சு ஊடகங்களான நொன் டெக்ஃடெக், டெக் கோடட் போன்ற பல்வேறு அச்சு கடதாசிகளின் மேல் இந்த டிஜிட்டல் அச்சு இயந்திரத்தின் மூலம் அச்சிட்டுக் கொள்ளமுடியும்.

தொழிற்பாட்டுவேகம், நெகிழ்வுப்போக்கு, முன் பதிப்பு அச்சு ஆற்றல், விரயத்தை தடுத்து செலவைக் குறைக்கும் ஆற்றல் ஆகிய திறன்கள் இதற்கு உண்டு.

 

Comments