பிரதமரின் கடிதத்துக்கு சாதகமான பதில்; சர்வகட்சி அரசாங்கத்தில் ஜீவனுக்கும் அமைச்சர் பதவி | தினகரன் வாரமஞ்சரி

பிரதமரின் கடிதத்துக்கு சாதகமான பதில்; சர்வகட்சி அரசாங்கத்தில் ஜீவனுக்கும் அமைச்சர் பதவி

சர்வக்கட்சி இடைக்கால அரசாங்கத்தின் அமைச்சரவையில் அங்கம் வகிக்குமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். 

இதற்கு இ.தொ.கா தரப்பில் கொள்கையளவில் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புதிய அரசில் பொதுஜன பெரமுனவைத் தவிர ஏனைய கட்சிகளுக்கான அமைச்சுக்களை ஒதுக்கும் பொறுப்பு பிரதமரிடமே கையளிக்கப்பட்டுள்ளது. அதன்படியே ஜீவன் தொண்டமானின் பெயரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பரிந்துரைத்துள்ளார்.  இதற்கமைய புதிய அமைச்சரவை பெயர் பட்டியலில் ஜீவன் தொண்டமானுக்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

அமைச்சுப் பதவியை ஏற்பதற்கு இ,தொ,கா தரப்பு கொள்கையளவில் இணக்கம் தெரிவித்திருந்தாலும், இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லையென கூறப்படுகின்றது. 

கட்சி ஒப்புதல் வழங்கும் பட்சத்தில் நாளை திங்கட்கிழமை (23) ஜீவன் தொண்டமான் அமைச்சராக பதவியேற்கக்கூடுமென எதிர்பார்க்கப்படுகின்றது. 

அவ்வாறு அவர் பதவியேற்பாராயின் சுமார் 17ஆண்டுகளுக்கு பின்னர் ஐ.தே.கவுடன் இ.தொ.கா. சங்கமமாகவுள்ளமை உறுதியாகிறது. 

Comments