கோழிப்பண்ணை | தினகரன் வாரமஞ்சரி

கோழிப்பண்ணை

(கடந்தவாரத் தொடர்) புழுவை சொண்டுக்குள் எடுத்துக் கொண்ட சிறிய குஞ்சின் பின்னால் 10, 12குஞ்சுகளும் சிறகுகளை இரு பக்கமும் விரித்து ஒன்றன்பின் ஒன்றாக ஓடும் காட்சி பார்ப்பதற்கு அழகானது. பார்வதி குஞ்சுகளின் விளையாட்டின் மூலம் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்.

எனினும், எவ்வளவு தான் காவல் காத்தாலும்  சாம்பல் நிற பருந்து ஒரே நேரத்தில் கீழே வந்து இரு குஞ்சுகளையும் தூக்கிச் சென்ற பின் அவள் குஞ்சுகளை வெளியே விடுவதனை நிறுத்திவிட்டார். இச்சம்பவம் அவருக்கு பெரும் வேதனையை ஏற்படுத்தியது. இரு மாதங்கள் வயதுடைய குஞ்சுகள் மிக அழகாக வளர்ந்திருந்தன.

எனினும், இன்னும் மூன்று மாதங்களின் பின் இளம் வயதுடைய மூன்று கோழிகள் ஒரு வாரத்தில் காணாமல் போயின. முதல் கோழி காணாமல் போன நாளிலிருந்து அவள் பலத்த அவதானத்துடன் இருந்தாலும் இன்னும் இரு கோழிகள் காணாமல் போகும் வரை அவளுக்கு என்ன நடந்தது என்பது பற்றிய தகவல் எதுவும் பெற்றுக்கொள்ள முடியவில்லை.

அதிக மதுபானம் குடிப்பதற்கு பழக்கப்பட்டுள்ள சிவநேசன் டேஸ்ட்டுக்காக நாலாவது கோழியைப் பிடிக்கும்போது பார்வதி சிவநேசனை கையும் மெய்யுமாகப் பிடித்துக்கொண்டார்.

அத்தினத்தன்று முழுநாளும் பார்வதி சிவநேசனை திட்டித் தீர்த்தார். சிவநேசன் மூன்று நாட்களாக வீட்டுக்கு வரவில்லை.

***

தமது களப் பரிசோதனையின் போது வழங்கப்பட்ட உத்தரவு சட்டரீதியானதா? இல்லையா? என்பதன்றி அப்போது பொலிஸ் பரிசோதகர் எழுப்பிய 'பி' அறிக்கை பற்றிய குறிப்பு காரணமாக அம்மணிக்கு அச்சந்தர்ப்பத்தில் உடன் கோபம் ஏற்பட்டது. நீதவான் சோபாவின் மேல் பக்கமாகச் சாய்ந்து அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.

***

கோழிகள் முட்டை இட ஆரம்பித்தன. அதற்கு இரு வாரங்களுக்கு மட்டும் முன் மாதர் சங்க ஊழியர்கள் வந்து கோழிப்பண்ணையில் Loying box ஐப் பொருத்தினார்கள். Loying box   இன் கருத்து என்ன என்றும் இது எதற்குப் பொருத்தப்பட்டது என்றும் பார்வதிக்கு விளங்கவில்லை. எனினும் கோழிகள் முட்டை இடுவதற்கு ஆரம்பித்த பின் அவள் அதனால் ஏற்படும் வசதிகளை விளங்கிக் கொண்டார்.

நாளொன்றுக்கு 45முட்டைகள். வாரத்துக்கு 315. மாதத்திற்கு 1260. வாரத்துக்கு ஒருமுறை வீட்டுக்கு வந்து 12ரூபாய் 50சதவீதம் முட்டையைக் கொள்வனவு செய்தார்கள். பார்வதி கொப்பி, புத்தகம் ஒன்றில் கணக்குச் செய்து பார்த்தார். வாரத்திற்கு 3937ரூபா 50சதம். மாதத்துக்கு 15,770ரூபா. இரு வருடங்களுக்கு 378,480.00ரூபா. அதன்பின் கோழி இறைச்சியை  விலை கொடுத்து வாங்குவார்கள். .

கோழிப்பண்ணை வருமானத்தினால் பார்வதியின் அநேகப் பிரச்சினைகள் தீர்ந்தன. வாழ்க்கையில் முதன்முறையாக அவருக்கு நிம்மதி கிடைத்தது. அவள் மகிழ்ச்சியுடன் காலத்தைக் கழித்தார். ஓர் இராத்தல் பாண்,100சீனி, 50கிராம் தேயிலை வாங்குவதற்கு அவள் சிவநேசனுடன் சண்டை சச்சரவு செய்ய வேண்டியதில்லை.

சிவப்புப்பட்டியுடனான உயர்ந்த சப்பாத்து ஜோடி ஒன்று, பட்டரியில் இயங்கும் 12நிறத்தொலைக்காட்சி, அவளது அடுத்த கனவாக இருந்தது. அப்போது தனூஷ் நடிப்பதனை கண்களால் பார்க்கக் கூடியதாக இருக்கும்.

அவளுக்கு சிவநேசன் நினைவுக்கு வந்தது.

***

கோழிகள் முட்டை இட  ஆரம்பித்தன. 10மாதங்களுக்குப் பின் முக்தார் பார்வதியைச் சந்திப்பதற்கு வந்தார். சலுகைக் காலம் முடிவடைந்துள்ளதனால் பெற்றுக்கொண்ட கடனை வட்டித்தவணையுடன் அடுத்த மாதம் முதல் செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார். தான் பெற்றது உதவியே தவிர, கடன் பணமல்ல. பார்வதி எவ்வளவு தர்க்கித்தாலும் அவள் கையொப்பமிட்ட ஒப்பந்தப் பத்திரத்தை வாசித்துக் காட்டிய பின் அவள் மயங்கி விட்டாள். இவ்வளவு பெரும் கடன் தவணைத் தொகையைச் செலுத்துவது எப்படி?

இளம் பார்வதியின் மெலிந்த உடலைப் பார்த்த முக்தார் கூறியது பார்வதிக்கு பெரும் நிவாரணமாக அமைந்தது. கடன் தவணையைப் பெற  முக்தார் மாதாமாதம் வந்தார். அவ்வாறு அவர் வரும் சந்தர்ப்பத்தில் சிவநேசன் வீட்டில் இருந்தால் சிவநேசன் வெளிக் கதவினால் வெளியேறி விடுவார். முக்தாரின் இட மாற்றத்தின் பின் ஜனகன் வந்துபோவது அவ்வாறே இடம்பெற்றது.

ஒரு சந்தர்ப்பத்தில் ஓரளவு பணத்தைச் செலுத்த வேண்டிய நிலை பார்வதிக்கு ஏற்பட்டது.

சிவநேசன் மனதைக் கடுமையாக்கி கொண்டே இருந்தார். எனினும், எந்த ஒரு நாளும் அவன் இது பற்றிப் பேசியதில்லை.

கோழிகள் முட்டையிடும் காலம் முடிவினை நெருங்கிக்கொண்டிருந்தது. அப்போது கடனை அறவிட வந்தவர் பண்டார. அழகானவர் தடித்த உயரமானவர். இன்னும் இரு மாதங்கள் கழிந்துவிட்டன. நிலுவைத் தொகையைச் செலுத்துவதற்குத் தவறியதனால் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வது தொடர்பான ஆரம்ப கடிதத்துடன் அத்தினத்தன்று பண்டார வந்தார்.

***

'இந்த சம்பவத்தைக் கண்ட எவராவது இங்கு இருக்கின்றீர்களா?'

பொலிஸ் உத்தியோகத்தர் உயர்ந்த குரலில் கூடியிருந்தவர்களை விளித்துக் கேட்டார். எவரும் பேசவில்லை. பின்பு நீதவான் பார்வதியை தன்முன் அழைத்தார்.

'உமக்கு இது குறித்து ஏதாவது கூறுவதற்கு இருக்கின்றதா?'பொலிஸ் உத்தியோகத்தர் அவளிடம் கேட்டார்.

பார்வதி சற்று நிலத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார். பின் மிக சோகமாகவும்  அன்புடனும்  சிவநேசனை நோக்கினாள்.

தன் கதையை ஆரம்பித்தாள்.

பண்டார ஏனைய நாட்களைப் போன்று அன்றும் கடனைக் கேட்டு வந்தார். இனியும் காலம் தர முடியாது. வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும் என்றார். என்னால் இதற்கப்பால் எதுவும் செய்ய முடியாது என்றார். பிறகு மற்ற நாட்களைப் போன்று அவர் நிலத்தில் படுத்தார். அவர்  கூரையில் வைத்திருந்த கிரிஸ்கத்தியை எடுத்து

பண்டார துரையின் வயிற்றில் குத்தினார்.

சதா சரண பினான்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரை கொலைக் குற்றச்சாட்டுக்காக நீதிமன்றத்தில் ஆஜர் செய்யுமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டார். நீதவான் கடும் தொனியில் விடுத்த கட்டளையினால் அசைந்து போன பொலிஸ் உத்தியோகத்தர் வசனங்களை வெளிப்படுத்த தயங்கிய நிலையில் மடம்... மடம் .. பி அறிக்கை என்று சொல்லும் போது நீதவான் அவரைக் கடும் பார்வையில் பார்த்தார்.

கமல் மெண்டிஸ்
தமிழில்: - என்.எம். அமீன்

Comments