காலம் மட்டும் கடந்து சென்றாலும் கண்டது இதுவரை எதுவுமில்லை | தினகரன் வாரமஞ்சரி

காலம் மட்டும் கடந்து சென்றாலும் கண்டது இதுவரை எதுவுமில்லை

நாட்டில் மக்கள் தமது அன்றாட வாழ்வை கொண்டு செல்வதில் பெரும் சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். சமைத்து உண்பதற்கு எரிவாயு இல்லை, போக்குவரத்துச் செய்வதற்கு எரிபொருட்கள் இல்லை, வீட்டில் நிம்மதியாக இருப்பதற்கு முக்கியமான நேரங்களில் மின்சாரம் இல்லை. ஆதார உணவுகளான அரிசி, மா, பருப்பு, காய்கறிகளின் விலைகளில் எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. ஒகஸ்டில் உணவுப் பஞ்சம் வரலாம் என பிரதமரே சொல்கிறார்.  

இவ்வாறு இன்னும் எவ்வளவு காலத்தை கழிக்கப்போகின்றோம் என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது. இந்நிலையில் இப்போதைக்கு எதுவுமே செய்ய முடியாது என்று அரசாங்கம் கைகளை விரித்து நிற்கிறது. உதவி வழங்கும் நாடுகள் கட்டளைகளையும், நிபந்தனைகளையும் விதிக்கின்றன. அதற்கு உடன்பட்டு போக அரசியல் தலைமைகள் அதிகார கதிரைகளை எதிர்பார்த்து தமக்கிடையே போட்டி போட்டு நிற்கின்றன.  

இந்நிலை தொடர்ந்தால் நாட்டிலுள்ள பொதுமக்களுக்கு வாழ்வா சாவா எனும் நிலையே ஏற்படும். மக்களில் இப்போது மேல்மட்டம், நடுத்தரவர்க்கம், கீழ் மட்டம் என்ற பாகுபாட்டை காணமுடியவில்லை. அரசியல் பின்னணி உள்ளவர்கள், அரசியல் பின்னணி இல்லாதவர்கள் என்று இரு பிரிவினரையே காணுகிறோம். 

அரசியல் பின்னணி உள்ளவர்கள் வழமை போன்று தமது வாழ்வை நடத்துகின்றார்கள். பின்னணி எதுவும் இல்லாதவர்கள் பாதைகளில் நின்று தமது மற்றும் குடும்ப உறுப்பினர்களதும் வாழ்வுக்காக போராடுகிறார்கள்.

காலம் மட்டும் கடந்து சென்றாலும்  

கண்டது இதுவரை எதுவுமில்லை...

அவ்வாறானவர்களிடையே பசியும் தாகமும் அதனால் ஏற்படும் தாக்கமும், ஏக்கமும் மேலோங்கும்போது அவை போராட்டங்களாக வெடிக்கின்றன.  

எனினும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டின் சட்டம், ஒழுங்கு என்பன சீர்குலைந்து விடக்கூடாது. என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. அரசாங்கமும் அவ்விடத்தில் தனது கடமையை செய்யவே முனைகிறது. 

அரசியல் தலைமைகளில் மாற்றங்கள் ஏற்பட்ட போதும் தொடரும் கஷ்ட நிலைமையில் இன்னமும் எந்த மாற்றமும் இல்லை என்பது மக்களது குற்றச்சாட்டாக உள்ளது. அந்த வழமையான நிலைமை இப்போதைக்கு மாறாது என்பதாக அரசு தனது கருத்தை முன்வைக்கிறது. அது உண்மை. ஆனால் பசிக்கு உணவு கேட்கும் மக்களுக்கு அரசு ஏதாவது செய்தே ஆக வேண்டும். 

அந்த வகையில் இந்தியாவினதும், தமிழக மக்களதும் உதவிகள் ஓரளவு கைகொடுப்பதாக உள்ளன. இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமல்லாது பல இடங்களிலும் அங்குள்ள மக்கள் வாழ்வாதாரத்துக்கு சிரமப்படுகின்ற நிலையிலும் இந்தியா இலங்கை மக்களுக்கு உதவ முன்வந்தமை பாராட்டுக்குரியது. 

இதேபோன்று ஏனைய வசதி படைத்த நாடுகளிடம் கேட்டுப் பெற்று மக்களைக் காப்பாற்ற வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். இதில் கௌரவம் பார்ப்பதற்கு எதுவும் கிடையாது. அதனை அரசாங்கம் செவ்வனே செய்து வருகின்றது. எனினும் இன்னும் வேகமாக அந்த முயற்சிகளில் ஈடுபட்டு மக்களுக்கு நிவாரணத்தை வழங்கி அவர்களை பட்டினிச் சாவிலிருந்து பாதுகாக்க வேண்டும். 

இந்த ஒரு இக்கட்டான பொருளாதார சூழ்நிலையில் சிக்கி மக்கள் அவதிப்பட்டு கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் கட்சி அரசியல் பேசுவது அநாகரிகம் என்பதை தினகரன் இடித்துரைக்க விரும்புகிறது.   

Comments