உடைந்த பேனை | தினகரன் வாரமஞ்சரி

உடைந்த பேனை

எனது பிறப்பிடமானது சீனா. என்னோடு பலர் அங்கு தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்டோம். பின்னர் எங்களுக்கு வர்ணம் பூசப்பட்டு பெட்டியில் அழகாக பொதி செய்யப்பட்டோம். அதற்குப் பிறகு எங்களை வாகனங்களில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.  அதன் பின்னர் கப்பலில் ஏற்றிவந்து இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் இறக்கினர். துறைமுகத்திலிருந்து கொண்டுவரப்பட்ட எங்களை கடைகளுக்கு விநியோகிக்கின்றனர். கடைக்காரர் எங்களை எடுத்து அழகாக அடுக்கி வைத்து மாணவர்களை கவரும் விதத்தில் காட்சிப்படுத்தி வைத்திருந்தனர்.

அந்த கடைக்கு பெற்றோருடன் வந்த சிறுவனொருவன் என்னை வாங்கித்தருமாறு கேட்டுக்கொண்டான். சிறுவனின் தந்தை என்னை பணம் கொடுத்து வாங்கிக் கொடுத்தார். அச்சிறுவனும் சந்தோஷமாக என்னை எடுத்துச் சென்று வீட்டில் அனைவரிடமும் காண்பித்தான். பாடசாலைக்கு எடுத்துச் சென்ற என்னை சகமாணவர்களிடம் காட்டி மகிழ்ச்சியுடன் இருந்தான்.

வகுப்பில் என்னை பயன்படுத்தி அழகாக எழுதினான். பரீட்சையிலும் என்னைப் பாவித்து எழுதி சிறந்த பெறுபேறுகளையும் பெற்றதாக சொல்லிக் கொண்டிருப்பான். அப்படியே நாட்கள் நகர்ந்தன. என்னை அவன் பயன்படுத்துவது படிப்படியாக குறைந்து இப்போது செயலிழந்த நிலைக்கு தள்ளப்பட்டேன். என் உயிர் பிரிந்ததைப்போன்று எனது மையும் முடிந்துவிட்டது. இப்போது என்னை உதவாக்கரை என கூறிவிட்டு உடைத்து குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டான். இப்போத நான் உடைந்த பேனையாக குப்பைத்தொட்டியில் கிடக்கிறேன்.

எம்.ஏ. ஆஷிப் அஹமட்,
தரம் 07B, கே/மாவ/அல் அஸ்கர் தேசிய பாடசாலை,
ஹெம்மாத்தகம.

Comments