இந்திய வம்சாவளி மக்கள் போற்றும் மாமனிதர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் 58ஆவது ஜனன தினம் | தினகரன் வாரமஞ்சரி

இந்திய வம்சாவளி மக்கள் போற்றும் மாமனிதர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் 58ஆவது ஜனன தினம்

 • பெருந்தோட்ட வீடமைப்புத் திட்டம். 
 • 3179ஆசிரியர்   நியமனங்கள்.  
 •  500தபால் சேவை ஊழியர்கள்.  
 • 200தொடர்பாடல் உத்தியோகத்தர்கள். 
 • மலையக மக்களுக்கு பாதிப்பு ஏற்படும்போதெல்லாம் பதவி பட்டங்களை              துச்சமென தூக்கியெறிய தயங்காதவர்.  
 • நாடற்றவர் என்ற நாமமதை மாற்றி அவரின் இராஜதந்திர அணுகுமுறையில் 3இலட்சம் மலையக சொந்தங்களுக்கு முகவரி தந்தது. 
 • தொட்ட பணியை இடையில் கைவிட்ட வரலாறு இல்லாதவர். 
 • 27ஆண்டுகள் அரசியல் பயணத்தில் ஆற்றல் மிகு சாதனைகளில் சொந்தக்காரர். ஒரு சிறுபான்மை சமூகத்தை பெரும்பான்மை தலைமைகளும் கூட பெரிதும் எதிர்பார்த்திருக்கும் அரசியல் அங்கீகாரத்தை ஆக்கித் தந்ததில் பாரிய பங்களிப்பு செய்தவர். 
 • பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் கட்டியெழுப்பிய காத்திரமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸை, அவரது மறைவின் பின்னரும் காத்திரமாக காத்து வந்தவர். பல திரை மறைவு சதிகளையெல்லாம் திசை தெரியாமல் திருப்பிவிட்டு அவதூறு வந்தபோதும் அசையா நெஞ்சுடன் ஆலமரமாக சாணக்கியத்திற்கு ஒரு சாட்சியாக விளங்கியவர். 
 •  1990ஆம் ஆண்டு அவரது அரசியல் பிரவேசத்தில் 93இல் காங்கிரசின் நிதிச் செயலாளராக, 1994இல் பொதுச் செயலாளராக நிலை உயர்வு, அதே ஆண்டு 94ல் 74ஆயிரம் வாக்குகளை பெற்று பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றம். அதன் பின்னர் வந்த அனைத்து தேர்தல்களிலும் மக்களோடு தன்னை பிணைத்துக் கொண்ட பக்குவத்தால் வெற்றிமேல் வெற்றி அவரை பற்றி பிடித்துக் கொண்டிருந்தது.  
 •  1994ல் கால்நடை அபிவிருத்தி மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர்,    2001இல் பெருந்தோட்ட வீடமைப்பு தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர், 2004இல் இளைஞர் வலுவூட்டல் அமைச்சர் என தொடர்ந்த பதவிகள் அவரது ஆளுமையின் அடையாளங்கள்.  
 • ஆட்சிக்கு முண்டு கொடுத்த வேளைகளிலும் அநீதிக்காக குரல் கொடுக்க, அதை கண்டிக்க தவறியதே இல்லை. தொலைநோக்கு கொண்ட தன்னிகரில்லா தலைவர். பணி என்று வந்துவிட்டால் பகல் இரவு பார்க்க மாட்டார். விட்டுக் கொடுக்கும் பரந்த மனம் கொண்ட அவர், இ.தொ.காவின் கட்டுக்கோப்பை சரியவிடாது சாசகம் புரிந்தவர்.   நாடு வாழ நாளும் பாடுபடும் நம் சமூகத்திற்கு கேடு ஏதும் சூழாமல் பார்ப்பதில் அவருக்கு ஈடு யாருமே இல்லை. சொந்த வீடு, சொந்தக்காணி வேண்டும். சோகம் மறைந்தோட வருமானம் உயர்வு வேண்டும், கல்வியில் உயர்ச்சி வேண்டும் எனும் கரிசனை கொண்டு பாரிய மாற்றம் தந்த காவியத் தலைவனின் சாதுரியம் சரித்திரத்தில் என்றும் பதிவுகளாகும்.  

 

Comments